காதலிக்காக காத்திருக்கும் போது நடந்த விபத்து

தூரத்தில் காதலியின் உருவம் தோன்றும் போது
காத்திருத்தலின் சுவை குன்றி,
கண்களின் தேடுதல் மங்கி
இரு கால்களிடையே தலையை கொடுத்து
அழுது கொண்டிருந்தேன் நான்.

ஆறுதல் வார்த்தைகளோ
அன்பு அரவணைப்போ எதிர்பார்க்கவில்லை.
போய் விடு.

எனக்கான துக்கத்தை
நான் தான் உண்ண வேண்டும்.