பார்வையால் நடந்த கொலை

உன் பார்வை என் முதுகெலும்பில் இருக்கிறது.
புன்னகை கால்களை கட்டியிருக்கிறது.
வாசம் புலன்களை வலுவிழக்க வைத்துவிட்டது.

என்னை பற்றியே பேசி கொண்டிருக்கிறாய்
என்பதாய் என் எண்ணம்.
யாருமற்ற வீதிகளில் கூட உன் நிழல்
என்னை பின்தொடர்வதாய் உணர்கிறேன்.

தரையோடு நான் அழுந்தி போவதற்கு முன்
என் சோகத்தையாவது ஏற்று கொள்.