நட்பு தொலைந்த வனம்

இறுக்கியும் பிழிந்தும் தளர்ந்தும்

பல நட்புகள் பல காலங்களில்

தோன்றி மறைந்த வனவெளி

கானல் நீராய் உறவுகளை

பகடை காய்களாய் கொண்டு விளையாடிய தருணங்கள்

காற்றோடு மறைந்து போகும் பொழுதில்

இடுகாட்டு சாம்பல்

அழிந்து போன விளையாட்டின்

சுவாரஸ்யங்களை சொல்லி மகிழும்.