ஒரு வினாடியில் அழியும் கோடிக்கணக்கான சாத்தியக்கூறுகள்

ஒவ்வொரு வினாடிக்கு அடுத்தும்

கோடிக்கணக்கான சாத்தியக்கூறுகள்.

அத்தனையும் அழிந்து போகும்.

ஏதேனும் ஒன்றை தவிர.


கால இயந்திரத்தில் நம்பிக்கை இல்லை.

எனினும் ஒரு நொடியை மீட்டு கொடுத்தால்

இழந்த வாழ்வை மீட்டெடுத்திடுவேன்.

 

கடந்த காலத்தில் இருக்கிறது

உயிர்த்திருத்தலின் இரகசியம்.

வருங்காலத்தில் அல்ல.