வெக்கையடிக்கும் அறையின் ஜன்னல்

வெக்கையடிக்கும் அறையின் ஒரு மூலை.

அதில் பாதி திறந்து கிடக்கிறது ஒரு ஜன்னல்.

பச்சை தென்னை கிளைகளும், கரும் காகங்களும்

அதனுள்ளே நுழைந்து அவன் மனதை திசை திருப்ப தான் பார்க்கின்றன.

அவன் பார்வையில் ஜன்னல் மூடப்பட்டு பல மாதங்களாகின்றன.