எல்லா பாதைகளும் சேருமிடம் ஒன்று தான்
மஞ்சள் வெயில் போர்த்திய வனத்தில்
இரு பாதைகளுக்கு முன் நான் நின்றிருந்தேன்.
எந்த பாதையை தேர்ந்தெடுப்பது?
மனித கால்கள் படாத இலைசருகுகள் மிகுந்த பாதை
நான் அப்போது தேர்ந்தெடுத்தது.
தேர்ந்தெடுக்காத பாதையை பற்றிய
சிந்தனைகளுடன் தான் பயணம் கழிந்தது.
பாதைகள் இன்று எனக்கு பயனற்று போன சூழ்நிலையில்
இப்போது
பாதைகள் எல்லாம்
சேருமிடம் ஒன்று தான் என
தெரிந்தும் என்ன பயன்?
(ராபர்ட் ஃபிராஸ்ட் எழுதிய The Road Not Taken கவிதையின் தாக்கத்தோடு எழுதபட்டது.)