அழிவே ஆனந்தம்

புழுதி படிந்த சாலைகளின் ஓரத்தில்

கிழிந்து போன டயர்கள்.

சிதைந்த கட்டிடங்களின் தூசிக்கு கீழே

உயிர்ப்புடன் இருக்கின்றன

இறந்தவர்களின் ரகசியங்கள்.


வேறு மனிதர்களே இல்லை.

நாய்கள் மட்டும் சோம்பி கிடக்கின்றன.

காதலியின் மண்டையோட்டை சுமந்தபடி

சுற்றி கொண்டிருக்கிறேன் நான்.

புழுக்கள் நெளிகின்றன

என் விரல்களுக்கு இடையே.


பிறக்கிறது புன்னகை.

அழிவே ஆனந்தம்.

புன்னகை மிதந்தபடி வருடி செல்கிறது

அழிவின் சாட்சியங்களை.