மனமும் நிஜமும்

வெறுமையின் சூடு பரவி கொண்டிருக்கிறது.

கண்களுக்கு எட்டிய தூரம் பாலைவனம்.

தூசு காற்று அலை அலையாய் படையெடுக்கிறது.

சூரியன் கூட வெப்பம் தாங்காமல் மஞ்சளாக மாறி விட்டான்.

மணல்வெளி மணலாலே முழுங்கபடலாம்.

மனம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது தாகம்.

நைந்து போன உடைகள் இன்னும் கிழிந்து தொங்குகின்றன.

எலும்புகள் கெஞ்சுகின்றன.

திருவல்லிகேணி சாந்தாராம் மேன்சன்.

ரூம் எண் 18யை யாரோ தட்டுகிறார்கள்.

ஒரு கணம் பாலை எண்ணங்களிலிருந்து விடுதலை.