வித்தியாசம்

இளஞ்சூட்டு தென்றலில்

மென்மையாய் வருடியபடி செல்லும் இறகாய்

உன் காமம்.

விறைக்க செய்யும் குளிரில்

புயற்காற்றில் படபடத்து

முகத்தில் அறையும் இலைச்சருகாய்

எனது.