வெப் 2.0 & வாழ்க்கை 2.0

இணையத்தின் பாய்ச்சல் அசுரத்தனமாக இருந்தாலும் அதன் கிளை அம்சங்கள் மிக விரைவிலே அழிந்து விடுகின்றன என்பதை பற்றி ஏற்கெனவே இங்கே நாம் பேசியிருக்கிறோம். இதன் பின்னணியில் நமது வாழ்க்கை இன்று அதன் முந்தைய வெர்ஷன் 1.0லிருந்து புது வெர்ஷனான 2.0க்கு மாறி விட்டது என்றே தோன்றுகிறது. இதன் மூலம் வாழ்வின் பல அம்சங்கள் தனக்கான கால சக்கரத்தை இணையம் போலவே மாற்றி அமைத்து கொண்டுவிட்டன.


கால சக்கரம் முன்பை விட வேகமாக இயங்குவதற்கு நவீன தொழில்நுட்பங்களின் வருகையும், தொலை தொடர்பு சாதனங்களின் புரட்சியும், உலகமெங்கும் இருக்கும் ஆயிரக்கணக்கான கலாச்சாரங்கள் ஒன்றாக சந்திப்பதுமே காரணம்.


கண் மூடி திறப்பதற்குள் பழைய சமூகங்கள் குப்பையில் எறியப்பட்டு, outdated என அதன் மேல் லேபிள் குத்தபடுகின்றன. பூனையாக இருந்தாலும் இன்று கோடுகள் போட்டு கொண்டால் தான் life 2.0க்கு compatibleயாக இருப்போம். outdated லேபிள் குத்தபட்டு குப்பைக்கு போகாமல் இருப்பதே இன்றைய வாழ்வின் போராட்டம். Incompatible முத்திரையிலிருந்து தப்பிக்கவில்லையெனில் வறுமைக்கோட்டிற்கு கீழே நின்றவாறு அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் GDPயை அண்ணாந்து வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.


Comments
2 responses to “வெப் 2.0 & வாழ்க்கை 2.0”
  1. Podipayyan Avatar
    Podipayyan

    சரியாக சொன்னீர்கள்,மாற்றம் மட்டுமே மாறாதது என நினைவுபடுத்தியற்கு நன்றி

  2. Sai Ram Avatar

    கருத்து பதித்தமைக்கு நன்றி முத்து விஜயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.