Tag: வாழ்க்கை

  • அந்தக் குடும்பத்திற்கு அது ஒரு விசேஷ சந்திப்பு. கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள், தம்பதியரின் தாய் தந்தையர் என எல்லாரும் மதிய விருந்திற்காக குழமியிருந்தார்கள். வெளியே மதிய வெயில் பழுக்க தொடங்கியிருந்தது. சிரிப்பும் சந்தோஷமுமாய் மதிய விருந்து தொடங்கியது. என்ன விசேஷம்? அந்தக் கணவன் சிவில் வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பது தான் விசேஷம். இரண்டாம் உலகப் போரிலே ராணுவ வீரராய் பணியாற்றி விட்டு போர் முடிந்து இப்போது தான் திரும்பியிருக்கிறார் அவர். பெயர் வெயின் மில்லர். வயது 27.

    இரண்டாம் உலகப் போரில் இருந்து திரும்பியிருப்பது மட்டும் விசேஷமல்ல, அந்தப் போரிலே வெயின் மில்லர் எடுத்த புகைப்படங்கள் பெரும் புகழைப் பெற்று விட்டன. டாக்டரான அவருடைய தந்தைக்கு அது குறித்து பெருமை தான். மகன் பள்ளி படிப்பு முடித்தவுடன் பரிசாக புகைப்பட கருவியை அவனுக்கு அளித்து அவனுள் புகைப்பட ஆர்வத்தை உண்டாக்கியவரே அவர் தான். மில்லரின் தாய் நர்ஸாக பணியாற்றியவர். தன் ஐரிஷ் பின்புலத்தைக் குறித்து பெருமைக் கொண்டவர்.… …மேலும் வாசிக்க


  • அது ஹிப்பிகளின் பொற்காலம். கடற்கரையெங்கும் இளைஞர்கள் நிரம்பி இருக்கிறார்கள். பலருக்கு நீளமான தலைமுடி, தாடி. பெண்களோ எளிமையான உடையில். வெயில் மஞ்சளாய் மாறி கொண்டிருக்கிறது. கஞ்சா வாசனை எங்கும் அடிக்கிறது. மேடையில் இசை விழா அரங்கேறி கொண்டிருக்கிறது. ராக் இசை விழா. பார்ப்பவர்களின் நரம்புகளைப் பதம் பார்க்கும் ராக் இசை. போதைக் கண்ணிற்கு ஏற ஹிப்பிகள் இசையின் உலகிற்குத் தன்னை அர்ப்பணித்து கிடந்தார்கள். திடீரென யாரென தெரியாத ஓர் இளம் வயது பெண் மேடை மீது ஏறினாள். ‘எதைப் பற்றியும் கவலைப்படாத’ உடை. அலட்சிய உடல் பாவனை. இசையின் மயக்கத்தோடு மேடையில் தோன்றியவளுக்கு மேடை சங்கோஜமோ பயமோ இல்லை. இசையின் வலிய தாளங்களுக்கு நளினமாய் உடலை அசைத்து ஆடினாள். கூட்டம் கரகோஷமிட அவள் ஆடுவதைக் கேமரா புகைப்படமாய் எடுத்தது.

    புகைப்படத்தின் உயிர்

    20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான புகைப்படக்காரர் டென்னிஸ் ஸ்டாக். இரண்டாம் உலகப் போர் காரணமாக பள்ளி படிப்பைப் பாதியிலே நிறுத்தி விட்டு ராணுவத்தில் இணைந்தார்.… …மேலும் வாசிக்க


  • தெய்வாணை அந்தப் பெண்ணின் பெயர். பிரசவ வலியோடு மலைக்கிராமத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்களுக்கு இடையில் பைக்கில் அமர்ந்து பயணித்து மருத்துவமனைக்குச் சென்றடைந்த தெய்வாணையின் கதை கேட்பவர்களைப் பதற வைக்கும்.

    அவருக்கு இருபது வயதிருக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடம குட்டை என்கிற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த மலைக் கிராமத்திற்குச் சாலை வசதி கிடையாது. கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் மலை மீது நடந்து தான் அங்குச் சென்றடைய முடியும். மின்சாரமும் கிடையாது. அரசு தண்ணீர் தொட்டி கட்டி தந்தார்கள். என்றாலும் மலைக் கிராமத்து பெண்களின் பகல் நேரத்தின் பெரும்பொழுது தண்ணீரைச் சுமந்து வருவதிலே கழிந்து விடுகிறது. அரிசி எல்லாம் பணக்கார சாப்பாடு அவர்களுக்கு. கூழும் களியும் தான் உணவு.

    கடம குட்டை போல முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்கள் இப்படி அல்லல்படுகின்றன. நாகரீக உலகத்தின் சௌகரியங்கள் அனைத்தும் மறுக்கப் பட்டவர்கள் இவர்கள். யாராவது உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர்களைத் தொட்டிலில் கட்டி மற்றவர்கள் மலையில் இருந்து கீழே கொண்டு போய் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை.… …மேலும் வாசிக்க


  • இந்த ரோடு தானா? இந்தக் குறுக்கு சந்தில் தான் அவளது அலுவலகம் இருக்கிறதா? நான் காரினைத் திருப்பலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்த போது, அவள் சாலையில் நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவளைப் பார்த்ததும் உற்சாகமாகி வெளியே எட்டி பார்த்து கையசைத்தேன். அவள் முதலில் கவனிக்கவில்லை. பிறகு தலையை லேசாக ஆட்டி புன்னகைத்தாள். அந்தப் புன்னகை அப்படியே இருக்கிறது. இடையில் பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டதெனினும் அவளை நேற்று தான் பார்த்தது போல் இருக்கிறது.

    மாறாத அதிகாரமிடுக்குடன் அவளது அலுவலக வாயில் வரை நடந்து போய் கார் எங்கே நிறுத்த வேண்டும் என்று சைகை காட்டினாள். நான் காரினை நிறுத்தி விட்டு வெளியே வரும்வரை கண்களால் என்னை எடை போட்டு கொண்டிருந்தாள்.

    “என்ன எப்படி இருக்க?” என்றேன். அந்த ‘என்ன’ வழக்கமாய் ‘டி’யில் முடியும். பத்து வருடங்கள் கழித்து இப்போது அப்படி அழைக்க தயங்கி மென்று முழுங்கினேன்.

    கண்கள் உற்று பார்த்து இருக்க, புன்முறுவலுடன், “வாடா, உள்ள வாடா,” என்று சொல்லி விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.… …மேலும் வாசிக்க


  • ராஜேஷ்வரியம்மாளை யாரோ கொன்றுவிட்டார்கள். இரவு நேரம் ஆளில்லாத சமயம் அவரைக் கழுத்து நெரித்துக் கொன்று, வீட்டிலிருந்து நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றிருப்பார்கள் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. குடித்தனங்கள் இருக்கிற வீட்டில் புதிதாய் ஓர் ஆள் உள்ளே நுழைந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இது யாரோ தெரிந்தவர்கள் செய்த வேலை என்கிற ஒரு கோணத்திலும் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது.

    ராஜேஷ்வரியம்மாளுக்கு அறுபத்தி ஐந்து வயதிற்கு மேலிருக்கும். எப்போதும் டல்லான ஒற்றை கலர் பழைய சேலை தான் அணிந்திருப்பார். நெற்றியில் பட்டையாய் விபூதி இருக்கும். கணவர் இறந்ததில் இருந்து குங்குமம் கிடையாது. பல்செட் அணிந்திருப்பதால் வயது பெரிதாய் தெரியாது. தெருவில் அவரை எல்லாரும் முசுடு கிழவி என்று தான் அழைப்பார்கள். ஆனால் அதை அவருக்கு முன்னால் அந்த பேரைச் சொல்ல யாருக்கும் தைரியம் கிடையாது. எல்லாரிடமும் வள் வள் என விழுவது தான் அவரது ஸ்டைல்.

    சென்னையின் ஒரு பிரதான இடத்தில் நெருக்கடியான கட்டிடங்கள் மிகுந்த ஒரு வீதியில் அவருக்கு சொந்தமான ஒரு பெரிய கட்டிடம் இருந்தது.… …மேலும் வாசிக்க


  •  சிறு வயதில் இருந்தே எனக்கு புது வருட பிறப்பு என்பது தீபாவளி, பொங்கல் போல ஒரு பண்டிகை தான். வளர்ந்ததும் புது வருட பிறப்பு என்பது எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டிய தினமாக மாறியது. மொழி தெரியாத ஊரில் சுற்றியது, இலக்கில்லாத பயணத்தில் கழித்தது, நண்பர்களுடன் சண்டை போட்டது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என புது வருட முதல் தின நிகழ்வுகள் திட்டமிட்டோ அல்லது திட்டம் இல்லாமலோ எதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டதாகவே அமைகின்றன.சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில் அருகே மென்சனில் தங்கியிருந்த நாட்களில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு மெரீனா கடற்கரையில் கூடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.

    “ஹேப்பி நியூ இயர்,” என்பது ஓர் இனிய கீதம் போல இளைஞர்களின் மூச்சுக்காற்றின் வெப்பத்தோடும் மது வாடையோடும் கடற்கரையை நிரப்பியிருக்கும். கடற்கரையை ஒட்டிய சாலையில் நூற்றுக்கணக்கான டூவீலர்கள் குடிக்கார இளைஞர்களால் பரபரத்து கொண்டிருக்கும். நிறைய போலீசார் குவிந்திருப்பார்கள்.… …மேலும் வாசிக்க


  • நமக்கு தெரிந்த தகவல் தான். ஆனால் ஆராய்ச்சி முடிவாய் வெளிவரும் போது அதிர்ச்சியாக தானே இருக்கிறது. அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ள முனைவர் ஜெர்ரி பர்கர் என்பவர் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவு. இதற்கு முன்பு இதே போன்ற ஆய்வு முடிவினை 1963-ம் ஆண்டே யேல் பல்கலைகழகத்தை சேர்ந்த ஸ்டான்லி மில்கிராம் என்பவர் வெளியிட்டார். சர்ச்சைக்கு ஆளான இந்த ஆய்வு முடிவு இப்போது மீண்டும் செய்திகளில் அடிபட தொடங்கியிருக்கிறது. மிக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் கூட கலவரங்கள் நடக்கும் போது சட்டென எதிர் இனத்தவரை கொல்லும் கும்பலில் சேர்ந்து மிக கொடூரமான குற்றங்கள் புரிவது பற்றி இந்த ஆய்வு முடிவு விளக்க முயல்கிறது.

    அதிகாரம் என்பது ஒரு கதாபாத்திரம் அல்ல

    அதிகாரம் என்பது ஒரு நாட்டின் ராணுவ அதிகாரியையோ அல்லது ஒரு குழுவின் தலைவனை மட்டும் குறிப்பதல்ல.… …மேலும் வாசிக்க


  • என்னுடன் பணி புரிந்த நண்பர் ஒருவரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை அவரை வீட்டோடு முடக்கியிருந்தது. நண்பரின் தாயோ மனநிலை குன்றியவர். நண்பர் ஒரே மகன். திருமணமும் ஆகவில்லை. அவரது வாழ்க்கையே மற்றவர்கள் பார்த்து பாவப்படும் அளவில் இருந்தது. இதில் திடீரென தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் முற்றிலுமாய் தளர்ந்து விட்டார்.

    அன்று காலை அவரது தந்தை வீட்டு குளியலறையில் மயங்கி விழுந்தவுடன், நண்பர் தன் தந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து போயிருக்கிறார். நம் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையென்றால் முதலில் உயிரைக் காப்பாற்றுவோமென தான் நினைப்போம். பணத்தைப் பற்றி கவலைப்பட அப்போது தோன்றாது.

    மருத்துவமனையில் நண்பரின் தந்தை சேர்க்கப்பட்ட இரண்டாவது நாள் தாம் நண்பருக்குத் தனது தவறு புரிந்தது. சூடு வைக்கப்பட்ட ஆட்டோ மீட்டர் போல ஒரு நாளைக்குச் சில ஆயிரங்கள் பில் தொகையாக உயர தொடங்கியது.… …மேலும் வாசிக்க


  • அரக்கோணம் போகும் வழியில் ரெயில் ஜன்னல் வழியாக நீங்கள் அந்த நகரங்களை பார்ப்பீர்கள். லட்சுமி நகர், பிரதாப் நகர் என ஒவ்வொரு காலனிக்கும் பெயர் பலகைகள் பளிச்சென வைக்கபட்டிருக்கும். அதோடு நகர் அனெக்ஸ் என கூடுதல் காலனிகளுக்கும் பெயர் பலகைகளையும் வாசிக்க முடியும். அதோடு இந்த காலனிகளுக்கு போகும் பாதையில் வழிகாட்டி பலகைகள் வைக்கபட்டிருக்கின்றன.

    ஒரு வித்தியாசமுண்டு. இந்த நகரங்களில் பெயர் பலகைகள் மட்டும் தான் இருக்கும். எல்லாம் காலி நிலங்கள். எல்லை கோடுகளை வலியுறுத்தும் கற்களை தவிர புல் புளைத்த நிலப்பரப்பு. ஏன் காலி நிலங்களில் இவ்வளவு பளிச்சென பெயர் பலகைகள்? காரணமுண்டு. இன்று அதிக அளவில் பணம் புழங்கும் நில வியாபாரத்தினால் உண்டான மனிதர்களற்ற நகரங்கள் இவை.

    “தாம்பரத்துல எங்க அப்பாவுக்கு ஒரு நிலம் இருந்துச்சு. இருபது வருஷத்துக்கு முன்னால அவ்வளவு தொலைவில நிலம் வைச்சு என்ன பண்றதுன்னு சொல்லி அந்த நிலத்தை இருபதாயிரத்துக்கு விற்றோம். இன்னிக்கு அந்த நிலத்தோட மதிப்பு என்னன்னு தெரியுமா?… …மேலும் வாசிக்க


  • “எங்களுக்கு எல்லா அரசியல்வாதிகளோட, நடிகர்களோட பிறந்த நாள் நல்லா நினைவிருக்கு. மறக்காம அன்னிக்கு ஏரியாவுல எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்து கொண்டாடுவோம். ஆனா எங்க பிறந்த நாள் எங்களுக்கு தெரியாது.”இது ஒரு தமிழ் படத்துல கேட்ட வசனம். தமிழக சமூகங்கள் பலவற்றிற்கு பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பதும் கொண்டாடுவதும் சமீப காலமாக வந்த பழக்கம். இதனால் தான் பள்ளிக்கூடங்களில் முதல்முறையாக தங்கள் மகன், மகள்களை சேர்க்க செல்லும் பெற்றோர் அவர்களது பிறந்த நாளை சொல்ல திணறுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் இது அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை என்பதால் இதற்கு ஒரு தீர்வு வைத்திருந்தார்கள். அது தான் கண்ணை மூடியபடி அப்படி அப்பாவியாக வந்து நிற்கும் மாணவர்களுக்கு வயது ஐந்து, பிறந்த நாள் ஜுன் 6 என குறித்து கொள்வது. இந்த தேதியே பள்ளிக்கூட காலண்டருக்கு ஏற்ற பிறந்த நாள்.

    எனக்கு தெரிந்து பலர் இந்த ஜுன் 6-யன்று தங்களது மறந்து போன பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இது அறியாமையா?

    …மேலும் வாசிக்க