Tag: வாழ்க்கை
-
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பக்தர்களின் பார்வைக்கு காண கிடைக்கிறது மகரவிளக்கு. கோயில் பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் வனத்தில் ஓர் ஓளி தோன்றுகிறது. சில நிமிடங்களே தோன்றும் இந்த ஒளியினை மகரவிளக்கு என மிக புனிதமாக பக்தர்கள் கருதி வருகிறார்கள். இந்த ஒளியை பார்க்க மிக பெரிய கூட்டம் திரள்வதுண்டு. 1999ம் ஆண்டு மகரவிளக்கை பார்க்க கூடிய பெருங்கூட்டத்தில் நெரிசல் உண்டாகி விபத்தில் 53 பக்தர்கள் பரிதாபமாய் இறந்து போனார்கள்.சபரிமலை மகரவிளக்கை பற்றி பல காலமாகவே முற்போக்குவாதிகள் கேள்வி எழுப்பியபடி இருக்கிறார்கள். தானாக உருவாகுவதாக அல்லது கடவுளின் அருளால் உருவாகுவதாக பக்தர்கள் நம்பும் இந்த ஓளி உண்மையில் மனிதர்களால் உருவாக்கபட்டதே என பல ஆண்டுகளாக பலர் சொல்லியும் அதை பக்தர்கள் நம்பவில்லை. மகரவிளக்கினை காண வரும் கூட்டம் குறையவுமில்லை. பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதன்மூலம் தனது வருமானத்தை உயர்த்தி கொள்ள சபரிமலை தேவஸ்தானம் இத்தகைய ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.… …மேலும் வாசிக்க
-
வெப் 2.0 & வாழ்க்கை 2.0
இணையத்தின் பாய்ச்சல் அசுரத்தனமாக இருந்தாலும் அதன் கிளை அம்சங்கள் மிக விரைவிலே அழிந்து விடுகின்றன என்பதை பற்றி ஏற்கெனவே இங்கே நாம் பேசியிருக்கிறோம். இதன் பின்னணியில் நமது வாழ்க்கை இன்று அதன் முந்தைய வெர்ஷன் 1.0லிருந்து புது வெர்ஷனான 2.0க்கு மாறி விட்டது என்றே தோன்றுகிறது. இதன் மூலம் வாழ்வின் பல அம்சங்கள் தனக்கான கால சக்கரத்தை இணையம் போலவே மாற்றி அமைத்து கொண்டுவிட்டன.
கால சக்கரம் முன்பை விட வேகமாக இயங்குவதற்கு நவீன தொழில்நுட்பங்களின் வருகையும், தொலை தொடர்பு சாதனங்களின் புரட்சியும், உலகமெங்கும் இருக்கும் ஆயிரக்கணக்கான கலாச்சாரங்கள் ஒன்றாக சந்திப்பதுமே காரணம்.
கண் மூடி திறப்பதற்குள் பழைய சமூகங்கள் குப்பையில் எறியப்பட்டு, outdated என அதன் மேல் லேபிள் குத்தபடுகின்றன. பூனையாக இருந்தாலும் இன்று கோடுகள் போட்டு கொண்டால் தான் life 2.0க்கு compatibleயாக இருப்போம்.… …மேலும் வாசிக்க
