Tag: வாழ்க்கை
-
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – கறுப்பின் நிறம்
மது பான விடுதியிலே தன்னை நோக்கி இளிக்கும் ஆணை அலட்சியமாய் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறாள் ஒரு பெண். செவ்வாய்க்கிழமை மதியம் ஜன்னலைத் திறந்து வைத்து உள்ளே கட்டிலில் நெருக்கமாய் இருக்கிறார்கள் ஒரு கணவன் மனைவி. ஏரிக்கரையோரமாய் தன் மகனோடு அமர்ந்திருக்கிறார் ஒரு தந்தை. மதுக்கடைக்கு வெளியே காத்திருக்கிறார்கள் இரண்டு சிறுமிகள். சரியான பராமரிப்பும் மேற்பூச்சும் இல்லா செங்கற் கட்டிடத்தில் ஒரு பத்திரிக்கையை தலைகீழாய் வாசித்தபடி அமர்ந்திருக்கிறாள் ஒரு சிறுமி. வெயின் தன் புகைப்பட கருவியோடு கண்ணுக்குப் புலப்படாதவராய் மாறி…
-
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – ஹிப்பி
அது ஹிப்பிகளின் பொற்காலம். ராக் இசை விழா. பார்ப்பவர்களின் நரம்புகளைப் பதம் பார்க்கும் ராக் இசை. திடீரென யாரென தெரியாத ஓர் இளம் வயது பெண் மேடை மீது ஏறினாள். ‘எதைப் பற்றியும் கவலைப்படாத’ உடை. அலட்சிய உடல் பாவனை. இசையின் மயக்கத்தோடு மேடையில் தோன்றியவளுக்கு மேடை சங்கோஜமோ பயமோ இல்லை. இசையின் வலிய தாளங்களுக்கு நளினமாய் உடலை அசைத்து ஆடினாள். கூட்டம் கரகோஷமிட அவள் ஆடுவதைக் கேமரா புகைப்படமாய் எடுத்தது.
-
மனிதர்கள் – பைக்கில் பிரசவ வலியோடு
தெய்வாணை அந்தப் பெண்ணின் பெயர். பிரசவ வலியோடு மலைக்கிராமத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்களுக்கு இடையில் பைக்கில் அமர்ந்து பயணித்து மருத்துவமனைக்குச் சென்றடைந்த தெய்வாணையின் கதை கேட்பவர்களைப் பதற வைக்கும்.
-
மனிதர்கள் – திருமணம் வேண்டாம்
முதல் பார்வையில் அவள் பத்து வருடங்களாக மாறவே இல்லை என்பது போல இருந்தாலும் இப்போது கவனிக்கும் போது அவளது தலைமுடியில் ஆங்காங்கே நரை இருப்பது சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. எப்போதும் போலவே அந்த டைட்டான சூடிதார் தான் இன்னும் அணிகிறாள். அனாயசமாக கழுத்தில் எப்போதும் போலவே துப்பட்டா சுற்றி இருக்கிறது. இன்னும் அதே ஸ்டைல் கைப்பை தான் வைத்து இருக்கிறாளா என்று கண்களால் துழாவினேன். கம்ப்யூட்டர் மேஜையோரம் கிடந்த கைப்பை அதே ஸ்டைலிலானது தான். ஆனால்…
-
மனிதர்கள் – முசுடு கிழவி
பதினொரு வீடுகளுக்கும் இவர் தான் ராணி. சர்வதிகாரி என்று கூட சொல்லலாம். இரவு எத்தனை மணிக்கு விளக்கு அணைக்கபட வேண்டும் என்பதில் தொடங்கி டீவி ஆடியோ அளவு எது வரை அனுமதி என்பது வரை, விருந்தினர்கள் வந்தால் எத்தனை மணிக்கு கிளம்பி விட வேண்டும் என்று எக்கசக்க விதிமுறைகள் உண்டு. ராஜேஷ்வரியம்மாள் குடியிருப்பிற்கு புதிதாய் குடி வருபவர்கள் ஆறு மாதங்கள் கூட தாங்குவது கஷ்டம் தான்.
-
புது வருடப் பிறப்பு – எதற்கு இந்த பரபரப்பு?
சிறு வயதில் இருந்தே எனக்கு புது வருட பிறப்பு என்பது தீபாவளி, பொங்கல் போல ஒரு பண்டிகை தான். வளர்ந்ததும் புது வருட பிறப்பு என்பது எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டிய தினமாக மாறியது. மொழி தெரியாத ஊரில் சுற்றியது, இலக்கில்லாத பயணத்தில் கழித்தது, நண்பர்களுடன் சண்டை போட்டது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என புது வருட முதல் தின நிகழ்வுகள் திட்டமிட்டோ அல்லது திட்டம் இல்லாமலோ எதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டதாகவே அமைகின்றன.சென்னை…
-
அதிகாரம் ஆணையிட்டால் மக்கள் கொல்லவும் துணிவார்கள் – ஆய்வு முடிவு
நமக்கு தெரிந்த தகவல் தான். ஆனால் ஆராய்ச்சி முடிவாய் வெளிவரும் போது அதிர்ச்சியாக தானே இருக்கிறது. அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ள முனைவர் ஜெர்ரி பர்கர் என்பவர் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவு. இதற்கு முன்பு இதே போன்ற ஆய்வு முடிவினை 1963-ம் ஆண்டே யேல்…
-
மனிதர்கள் – பணமில்லாதவன் சாகட்டும்
அரசு மருத்துவமனையில் குறைவான எண்ணிக்கையிலே வெண்டிலேட்டர் இருந்தன. அதற்கும் ஏகப்பட்ட டிமாண்ட். இரண்டு மூன்று நாட்கள் அரசு மருத்துவமனை டீன் வரை பேசியும் வெண்டிலேட்டர் கிடைக்கும் என உறுதி கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ சிபாரிசு இருந்தால் கூட வெண்டிலேட்டர் கிடைப்பது உத்தரவாதமல்ல. வெண்டிலேட்டர் இல்லாவிட்டால் நண்பரின் தந்தை உயிர் உடனே பிரிய கூடும் என்கிற ஆபத்து இருந்தது.
-
நிலத்தின் மீதான ஆசை – மத்திய வர்க்கம் உண்டாக்கும் மனிதர்களற்ற நகரங்கள்!
அரக்கோணம் போகும் வழியில் ரெயில் ஜன்னல் வழியாக நீங்கள் அந்த நகரங்களை பார்ப்பீர்கள். லட்சுமி நகர், பிரதாப் நகர் என ஒவ்வொரு காலனிக்கும் பெயர் பலகைகள் பளிச்சென வைக்கபட்டிருக்கும். அதோடு நகர் அனெக்ஸ் என கூடுதல் காலனிகளுக்கும் பெயர் பலகைகளையும் வாசிக்க முடியும். அதோடு இந்த காலனிகளுக்கு போகும் பாதையில் வழிகாட்டி பலகைகள் வைக்கபட்டிருக்கின்றன. ஒரு வித்தியாசமுண்டு. இந்த நகரங்களில் பெயர் பலகைகள் மட்டும் தான் இருக்கும். எல்லாம் காலி நிலங்கள்.
-
ஜுன் 6 – இந்தியாவில் இன்று பெரும்பாலனோருக்கு பிறந்த நாள்
பள்ளிக்கூடங்களில் முதல்முறையாக தங்கள் மகன், மகள்களை சேர்க்க செல்லும் பெற்றோர் அவர்களது பிறந்த நாளை சொல்ல திணறுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் இது அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை என்பதால் இதற்கு ஒரு தீர்வு வைத்திருந்தார்கள். அது தான் கண்ணை மூடியபடி அப்படி அப்பாவியாக வந்து நிற்கும் மாணவர்களுக்கு வயது ஐந்து, பிறந்த நாள் ஜுன் 6 என குறித்து கொள்வது. இந்த தேதியே பள்ளிக்கூட காலண்டருக்கு ஏற்ற பிறந்த நாள்.