Category: கவிதைகள்
-
உன் கண்களில் தெரியும் என் பிம்பம்
கண்களின் ஓர் அலட்சிய சுழிப்போ துள்ளலோ அமைதியோ பதட்டமோ எனக்கான இடம் என்ன என்பதைச் சொல்கிறது.
-
பழுதாகிப் போன தண்ணீர் குழாய்
நம் வீடோ அன்னிய இடமோ பழுதாகிப் போன தண்ணீர் குழாய் எப்போதும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
-
ஒவ்வொரு கொலைக்கும் காரணம் வேண்டும்
உனது கழுத்தினை அழுத்தி நீ மூச்சு திணறி இறந்து போவதைப் பார்க்க போகிறேன். உன்னோடு எப்போதும் இருக்கும் அந்தச் சுகந்தம் நீ இறந்த பிறகு எவ்வளவு நிமிடங்கள் நீடிக்கும்?
-
ஹம் சத்தம்
சாலை விளக்குகளும் எதிர் வரும் வாகனங்களின் விளக்குகளும் கலந்து இணைந்த பிறகும் தொடர்கிறது பயணம். நிற்காமல் ஓடும் தார் சாலையும் ஹம் சத்தமும் வாகனத்தை இயக்குகின்றன.
-
அவனுள் அவனாகி
பெருமழையையும் சூறாவளியையும் கொண்டு வந்தது அவனது சோகம். விலக விலக அவனிடம் இருந்து கொண்டே இருந்தது அது. தன்னுள் நுழைந்து தேடும் போது தேடுபவனாய் மாறி போயிற்று.
-
முதுமை
அவர் வருவதற்காக காத்து இருந்தோம். எங்கள் இளமையை மீட்பதற்காக அந்த வருகை. மீண்டும் நாங்கள் இளைஞர்களாக மாறுவோம்.
-
யாருக்கும் யார் முகமும் நினைவில் இல்லை
முதல் முத்தத்தின் இனிமை. முதல் புணர்வின் சுவை. மறக்கவியலாத துரோகம். இருளில் செய்த குற்றம்.
-
கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்
கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில். சோகம் ததும்ப அது நகருகையில் வானத்தில் இருந்து மேகங்களாய் கீழ் இறங்குகின்றன கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும்.
-
என்னுள் எங்கோ
ஆனால் இப்போது அவர்களில் பெரும்பாலனோர் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்கிற நினைப்பு சமீபத்தில் தான் தோன்றியது.
-
இருத்தல்
“நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.” “கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.” “எழுதிக் கொண்டு இருக்கிறேன்.” “இருக்கிறேன்.”