Category: கதைகள்

 • மனிதர்கள் – அதீத மோகம்

  பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது அவன் கெமிஸ்டரி பாடத்திற்காக ஒரு டீச்சரிடம் டியூசனுக்கு போயிருக்கிறான். டீச்சர் என்று சொன்னால் அது ஓர் இளம் பெண் தான். அந்த பெண்ணின் வீட்டில் தான் டீயூசன் கிளாஸ் நடந்து இருக்கிறது. அந்த பெண் இவன் மீது அதிக அக்கறை காட்டி இருக்கும் போல. அப்புறம் இவன் பிரச்சனைக்குரியவன் என புரிந்ததும் சற்றே விலகி இருக்கும் போல. அந்த பெண் தன்னை காமவயப்படுத்த திட்டமிட்டதாகவும் தான் சற்று தயங்கியதும் தன்னை…

 • மனிதர்கள் – வீடியோ கேம்ஸ் சுந்தரமூர்த்தி

  நான் அவருடன் பேசி கொண்டிருந்த போது ஓர் ஆவலில் என் கை அவரது டிவிடிகளை அலசியது. எல்லாமே வீடியோ கேம்ஸ் டிவிடிக்கள். அப்போது தான் கவனித்தேன். வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்காகவே அலங்கரிக்கபட்ட அறை இது. எல்லாம் புது மெஷின்கள். நவீன கேம்ஸ் வகையறாக்கள். இந்த அறுபது வயது ஆளா இந்த வீடியோ கேம்ஸினை விளையாட போகிறார்? அல்லது அது அவரது பேரன் (?) அறையா?

 • மனிதர்கள் – சர்வர் சுந்தரம்

  வேலை தேடி சுந்தரம் அந்த ஓட்டலுக்கு போன போது, அந்த நிர்வாக வேலை அவனுக்கு கிடைக்கவில்லை. நான் சொன்னபடி எனக்கு வேறு எதாவது வேலை கொடுங்க என கேட்டு இருக்கிறான். சர்வர் வேலை தானிருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள். அதை செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். பட்டதாரிகளுக்கு இந்த வேலை ஒத்து வராது என்று சொன்னவுடன் அப்படியானால் இப்பவே கல்லூரி சர்டிபிகேட்களை கிழித்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறான். கிடைத்து விட்டது சர்வர் வேலை.

 • சுதந்திர நாட்டின் மனிதர்கள்

  “இவன் இருக்கானே, பள்ளிக்கூடத்துல இருந்து பாதியில ஓடி வந்துட்டான். வயல்ல அப்பா கூட வேலை செய்யுடான்னா முடியாதுன்னு சொல்லிட்டு தறுதலையா திரியறான். சிகரெட், தண்ணீ எல்லாம் பழக்கமும் உண்டு. நம்ம ஊர்ல தான் தெரியுமே இராத்திரியாச்சுன்னா வயசானவங்கள்ல இருந்து எட்டாவது படிக்கிற பொடிசுங்க வரை அத்தனை ஆம்பிள்ளைகளும் சாராய கடை பக்கம் தான் நிப்பாங்க. இவங்க அம்மா பொறுத்து பொறுத்து பாத்துட்டு விட்டுட்டா. இப்பல்லாம் வீட்டுலயே ஃபிரெண்ட்ஸோட சாராயம் குடிக்கிறான்.”

 • மனிதர்கள் – பணமில்லாதவன் சாகட்டும்

  அரசு மருத்துவமனையில் குறைவான எண்ணிக்கையிலே வெண்டிலேட்டர் இருந்தன. அதற்கும் ஏகப்பட்ட டிமாண்ட். இரண்டு மூன்று நாட்கள் அரசு மருத்துவமனை டீன் வரை பேசியும் வெண்டிலேட்டர் கிடைக்கும் என உறுதி கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ சிபாரிசு இருந்தால் கூட வெண்டிலேட்டர் கிடைப்பது உத்தரவாதமல்ல. வெண்டிலேட்டர் இல்லாவிட்டால் நண்பரின் தந்தை உயிர் உடனே பிரிய கூடும் என்கிற ஆபத்து இருந்தது.

 • மனிதர்கள் – காதலால் பித்தன் ஆனான்

  கல்லூரி காலத்தில் எங்களுக்கு ஒரு வருட ஜுனியர் இந்த பாண்டியன். அமைதியானவன். யாரிடமும் அதிகமாய் பேச மாட்டான். எங்கள் கல்லூரி தங்கும் விடுதியில் அவரவர்களுக்கு தனி தனி அறை ஒதுக்கபட்டிருந்தது. பீடி குடித்தபடி அறைக்குள்ளே கிடப்பான். எக்கசக்க புத்தகங்கள் குப்பை போல அறையில் குவிந்திருக்கும். அறையே ஒரு பெரிய குப்பை கூடை போல தானிருக்கும். அந்த குப்பை கூடையில் ஒரு குப்பை போல கட்டில் தெரியும். கட்டிலில் ஒரு பழைய அழுக்கு மெத்தையை சுருட்டி அதை தனக்கான…

 • மனிதர்கள் – சினிமாவில் தொலைந்தவன்

  ஒரு சினிமா படப்பிடிப்பு தளம். வழக்கம் போல எல்லாரும் பிசியாக இருக்கிறார்கள். ஓர் ஓரத்தில் சிவா நின்று கொண்டிருக்கிறான். நான்கு நாள் தாடி. மெலிந்த உருவம். ஒரு கோணத்தில் அந்த சினிமா டைரக்டரை பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது போலவே இருக்கிறது. டைரக்டரின் கடைக்கண் பார்வைக்காக தான் சிவா நின்று கொண்டிருக்கிறான். அவரும் தினமும் அவனை பார்க்கிறார். பார்க்கிறார் என்பதை விட அவரது பார்வை அவனிருக்கும் திசையில் கடந்து போகும். அவன் எழுந்து பணிந்து ஒரு வணக்கம்…

 • மனிதர்கள் – நான் கடவுள்

  சில சமயம் சீனா மாதக்கணக்கில் காணாமல் போவார். பிறகு திரும்ப வருவார். சினிமா, தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவற்றில் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களிடம் பணம் வாங்கி தன் அன்றாட செலவுகளை கவனித்து கொண்டார். மனநலம் தவறுகிறவர்கள் தங்களது உள் மன அழுக்குகளை வெளிபடையாக பேசும் அவலம் இருக்கிறது. சீனா தன்னை விட நல்ல எழுத்தாளன் இந்த உலகத்தில் இல்லை என பேசி கொண்டிருப்பார். சில சமயம் கடவுளின் தூதுவன் என்றும், ஒன்றிரண்டு முறை தானே கடவுள் என்றும்…

 • மனிதர்கள் – கொலை செய்யப்பட்ட ரவுடி

  பாண்டிச்சேரி பஸ் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள பார்களிலோ திரியும் வெளியூர் சபல கேஸ்களை சிறுவர்கள் தங்கள் ஏரியாவிற்கு பேசி அழைத்து செல்கிறார்கள். அங்கே ஆசை வார்த்தைகளுக்கு முரணாக நிஜம் இருப்பதால் இந்த சபல கேஸ்கள் சண்டையிட தொடங்கும் போது இளைஞர்கள் உள்ளே நுழைந்து இரண்டு தட்டு தட்டி பிரச்சனையை சரி செய்வார்கள். சில சமயம் ஏரியாவிற்குள் வரும் சபல கேஸ்களை கண் மண் தெரியாமல் தாக்கி அவர்களது நகை பணத்தை கொள்ளையடித்து கொள்வதும் உண்டு. பாதிக்கபட்டவர்கள்…

 • மனிதர்கள் – காப்ரே நடன பெண்ணை மணந்தவன்

  சில வருடங்களுக்கு முன்பு எல்லா ஆண்களை போலவே கல்யாணிற்கும் காதல் பிறந்தது. பிறந்த இடம் தான் கொஞ்சம் வித்தியாசமானது. மும்பையில் நண்பர்களுடன் காப்ரே நடனம் பார்க்க சென்ற கல்யாணிற்கு அங்கு நடனமாடிய தமிழ் பெண்ணை பார்த்தவுடன் காதல் பிறந்து விட்டது. அதற்கு பிறகு வெகு பிரயத்தனப்பட்டு அந்த பெண்ணின் அபிமானத்தை பெற்று, அவளது தாயிடம் நற்பெயரை பெற்று தன் குடும்பத்தின் எதிர்ப்பிற்கிடையே அந்த பெண்ணையே மணந்து கொண்டார்.