sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • பின்தொடர்
    • தொடர்பு
    • அதிகம் பார்வையிடப்பட்ட 10
    • நண்பர்கள்
Browse: Home » கதைகள்
எதோ சிந்தனை, ஒரு பார்வை, ஒரு புன்சிரிப்பு - சிறுகதை

எதோ சிந்தனை, ஒரு பார்வை, ஒரு புன்சிரிப்பு – சிறுகதை

April 27, 2013 · by சாய் ராம் · in கதைகள், சிறுகதைகள்

யூனிவர்சிட்டியின் பிரம்மாண்டமான கட்டிடத்தை வெறித்தவாறு அந்த மரத்தடி பெஞ்சில் அமர்ந்திருந்தேன். படித்து முடித்தாயிற்று. இப்போதும் இங்கு தான் சுற்றி கொண்டிருக்கிறேன். மெள்ள மெள்ள இந்த இடத்திலிருந்து அதோ அந்தச் சுவரினைத் தாண்டியிருக்கும் நெரிசல் மிகுந்த நகரத்தில் ஐக்கியமாகி விடுவேன் என்பது மட்டும் உறுதி. வெளியே நகரத்தின் நெரிசலுக்கும் வெயிலுக்கும் உள்ளே தவழ்ந்து கிடக்கிற அமைதிக்கும் பச்சைபரப்பிற்கும் எத்தனை வித்தியாசம். ஒரு சுவர் தான் இரண்டையும் பிரிக்கின்றன. ...தொடர்ந்து வாசியுங்கள்

பித்து - சிறுகதை

பித்து – சிறுகதை

April 24, 2013 · by சாய் ராம் · in கதைகள், சிறுகதைகள்

தூக்கம் வராத இரவுகள் வேதனையானவை. கல்லூரி நாட்களில் படுத்தவுடனே தூங்கியதெல்லாம் எதோ கனவு மாதிரி இப்ப தோன்றுகிறது. தூக்கம் வந்து விடாதா என்று கண்களை மூடி படுத்திருப்பேன். இர்ர்ம் என்று ஃபேன் சுற்றி கொண்டிருக்கும் சத்தம் பெரிதாகி கொண்டே இருக்கும். அதுவே ஓர் இசைக்கருவி போல ஒரே லயத்துடன் அதன் இசை வளரும். அப்படி வளரும் இசை எதோ ஒரு கணத்தில் என்னுடைய சிந்தனைகளில் மூழ்கி அமிழ்ந்து போகும். ...தொடர்ந்து வாசியுங்கள்

மனிதர்கள் - பைக்கில் பிரசவ வலியோடு

மனிதர்கள் – பைக்கில் பிரசவ வலியோடு

April 20, 2012 · by சாய் ராம் · in கதைகள், மனிதர்கள்

தெய்வாணை அந்தப் பெண்ணின் பெயர். பிரசவ வலியோடு மலைக்கிராமத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்களுக்கு இடையில் பைக்கில் அமர்ந்து பயணித்து மருத்துவமனைக்குச் சென்றடைந்த தெய்வாணையின் கதை கேட்பவர்களைப் பதற வைக்கும். ...தொடர்ந்து வாசியுங்கள்

மனிதர்கள் - திருமணம் வேண்டாம்

மனிதர்கள் – திருமணம் வேண்டாம்

April 6, 2012 · by சாய் ராம் · in கதைகள், மனிதர்கள்

முதல் பார்வையில் அவள் பத்து வருடங்களாக மாறவே இல்லை என்பது போல இருந்தாலும் இப்போது கவனிக்கும் போது அவளது தலைமுடியில் ஆங்காங்கே நரை இருப்பது சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. எப்போதும் போலவே அந்த டைட்டான சூடிதார் தான் இன்னும் அணிகிறாள். அனாயசமாக கழுத்தில் எப்போதும் போலவே துப்பட்டா சுற்றி இருக்கிறது. இன்னும் அதே ஸ்டைல் கைப்பை தான் வைத்து இருக்கிறாளா என்று கண்களால் துழாவினேன். கம்ப்யூட்டர் மேஜையோரம் கிடந்த கைப்பை அதே ஸ்டைலிலானது தான். ஆனால் இப்போது சற்று விலையுயர்ந்த கைப்பையாக இருக்கிறது. ஆடைகளில் எதுவும் வித்தியாசமில்லை எனினும் எதோ அவளிடத்து மிஸ் ஆவது போல ஒரு உணர்வு. உடம்பு சற்றே சுருங்கி விட்டாற் போல பிரமை. அவள் தேகத்தில் மினுமினுப்பு குறைந்து விட்டது போல தோன்றியது. ...தொடர்ந்து வாசியுங்கள்

மனிதர்கள் - நாத்திகன்

மனிதர்கள் – நாத்திகன்

March 19, 2012 · by சாய் ராம் · in கதைகள், மனிதர்கள்

நாங்கள் பழகிய அந்தக் குறுகிய காலக்கட்டத்தில் அவன் ஜெர்மனிய நாஜி படைகள் பற்றிய வரலாற்றினைத் தேடி தேடி படித்து கொண்டு இருந்தான். இந்தச் சரித்திரம் தவறாக எழுதப்பட்டு இருக்கலாம், இரண்டாம் உலகப் போரில் தோற்றதால் தான் ஹிட்லர் கொடுங்கோலானாய் சித்தரிக்கப்படுகிறான் என்பது அவனுடைய வாதம். ஒருவேளை போரில் வென்றிருந்தால் உண்மை சரித்திரம் வேறுவிதமாய் இருந்திருக்கும் என சொன்னான். ...தொடர்ந்து வாசியுங்கள்

மனிதர்கள் - முசுடு கிழவி

மனிதர்கள் – முசுடு கிழவி

December 30, 2011 · by சாய் ராம் · in கதைகள், மனிதர்கள்

பதினொரு வீடுகளுக்கும் இவர் தான் ராணி. சர்வதிகாரி என்று கூட சொல்லலாம். இரவு எத்தனை மணிக்கு விளக்கு அணைக்கபட வேண்டும் என்பதில் தொடங்கி டீவி ஆடியோ அளவு எது வரை அனுமதி என்பது வரை, விருந்தினர்கள் வந்தால் எத்தனை மணிக்கு கிளம்பி விட வேண்டும் என்று எக்கசக்க விதிமுறைகள் உண்டு. ராஜேஷ்வரியம்மாள் குடியிருப்பிற்கு புதிதாய் குடி வருபவர்கள் ஆறு மாதங்கள் கூட தாங்குவது கஷ்டம் தான். ...தொடர்ந்து வாசியுங்கள்

மனிதர்கள் – ஆம்பிள்ளைங்களை நம்பவே கூடாது

மனிதர்கள் – ஆம்பிள்ளைங்களை நம்பவே கூடாது

May 21, 2010 · by சாய் ராம் · in மனிதர்கள்

எங்கள் தெருவிற்குள் நுழைவதற்கு அந்த மதுக்கடையை தாண்டி தான் வந்தாக வேண்டும். அந்த அக்கா ஜீன்ஸ் பேண்டும் கையில்லாத சட்டையும் போட்டு கொண்டு நாலைந்து தடவை மார்க்கெட்டிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருப்பாள். ...தொடர்ந்து வாசியுங்கள்

மனிதர்கள் - வீடு வீடாக சோப்பு விற்கும் மூதாட்டி

மனிதர்கள் – வீடு வீடாக சோப்பு விற்கும் மூதாட்டி

June 26, 2009 · by சாய் ராம் · in மனிதர்கள்

பக்கத்தில் இருந்த ஓர் அனாதை இல்லத்தில், ‘உங்கள் குழந்தைகளை நாங்கள் இலவசமாக படிக்க வைக்கிறோம்,’ என்கிற உறுதிமொழி கொடுத்து முதல் இரு குழந்தைகளை வாங்கி கொண்டார்கள். சில மாதங்கள் கழித்து திடீரென ஒரு நாள் அவரது வீட்டிற்கு ஆட்கள் வந்து அந்த குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க வைக்க போகிறோம், சில வருடங்கள் கழித்து அவர்கள் உங்களிடமே திரும்ப வந்து விடுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அந்த சில வருடங்கள் வரவே இல்லை. என் குழந்தைகள் என்னவானார்கள் என்று அந்த இல்லத்தின் நிர்வாகிகளிடம் ஹெலன் கேட்டால் யாரோ வெள்ளைக்கார குடும்பத்தில் தன் இரண்டு குழந்தைகளும் வளர்வதாய் தகவலும் சில சமயம் அந்த குடும்ப புகைப்படமும் கிடைக்கும். ...தொடர்ந்து வாசியுங்கள்

மனிதர்கள் - அவனுக்குள் கேட்கும் குரல்

மனிதர்கள் – அவனுக்குள் கேட்கும் குரல்

May 14, 2009 · by சாய் ராம் · in மனிதர்கள்

அன்று தொடங்கி இன்று ஏழு வருடங்களாகிறது. இன்று வரை தினமும் தனக்குள் நிரஞ்சனின் குரல் கேட்டபடி இருக்கிறது என அந்த கடிதம் முடிந்தது. எதாவது தட்டி கேட்டால் அந்த குரல் பயங்கரமாய் திட்டுகிறது. எப்படியாவது நிஜ நிரஞ்சனிடம் பேசி அவரை தனக்குள் இருந்து வெளியே போக வழி செய்து தர வேண்டுமென ஒரு வேண்டுகோளும் இருந்தது. ...தொடர்ந்து வாசியுங்கள்

மனிதர்கள் - லேட்டாய் வந்த காமவுணர்வு

மனிதர்கள் – லேட்டாய் வந்த காமவுணர்வு

April 17, 2009 · by சாய் ராம் · in மனிதர்கள்

கணவருக்கு சந்தேகம் ஒரு மின்னல் கீற்றாய் மனதில் தோன்றியது. ஆனாலும் அதனை உடனே மறக்க விரும்பினார். காரணம் இருவருடைய வயது. இந்த வயதில் வரக்கூடிய பிரச்சனையா இது? ஆனால் சந்தேக பொறி தீப்பொறியை விட வலிமையானது. படுக்கையில் மனைவி நடந்து கொள்ளும் விதம் புதுவிதமாய் இருந்தது. திருமணமான சமயத்தில் படுக்கையை கண்டாலே மிரண்ட மனைவி பின் எப்போதும் படுக்கையறையில் அதீத ஆர்வத்துடன் இருந்தது இல்லை. இப்போது திடீரென சில நாட்களாய் ஏன் வெறி பிடித்தவள் போல் ஆகிறாள். ...தொடர்ந்து வாசியுங்கள்

1 2 3 Next →

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

நிர்வாணப் பெண் வெற்றி களிப்பில் ஒரு முத்தம்
அந்தக் கண்கள் தியனன்மென்-சதுக்கம்

மனிதர்கள் – புனைவும் நிஜமும்

ஆம்பிள்ளைகளை நம்பவே கூடாது நான் கடவுள்
திருமணம் வேண்டாம் அவனுக்குள் கேட்கும் குரல்

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Enter your email address:

Delivered by FeedBurner

Copyright © 2021 sairams

Powered by WordPress and Origin