Author: சாய்ராம் சிவகுமார்

  • எதோ சிந்தனை, ஒரு பார்வை, ஒரு புன்சிரிப்பு – சிறுகதை

    எதோ சிந்தனை, ஒரு பார்வை, ஒரு புன்சிரிப்பு – சிறுகதை

    யூனிவர்சிட்டியின் பிரம்மாண்டமான கட்டிடத்தை வெறித்தவாறு அந்த மரத்தடி பெஞ்சில் அமர்ந்திருந்தேன். படித்து முடித்தாயிற்று. இப்போதும் இங்கு தான் சுற்றி கொண்டிருக்கிறேன். மெள்ள மெள்ள இந்த இடத்திலிருந்து அதோ அந்தச் சுவரினைத் தாண்டியிருக்கும் நெரிசல் மிகுந்த நகரத்தில் ஐக்கியமாகி விடுவேன் என்பது மட்டும் உறுதி. வெளியே நகரத்தின் நெரிசலுக்கும் வெயிலுக்கும் உள்ளே தவழ்ந்து கிடக்கிற அமைதிக்கும் பச்சைபரப்பிற்கும் எத்தனை வித்தியாசம். ஒரு சுவர் தான் இரண்டையும் பிரிக்கின்றன.

  • பித்து – சிறுகதை

    பித்து – சிறுகதை

    தூக்கம் வராத இரவுகள் வேதனையானவை. கல்லூரி நாட்களில் படுத்தவுடனே தூங்கியதெல்லாம் எதோ கனவு மாதிரி இப்ப தோன்றுகிறது. தூக்கம் வந்து விடாதா என்று கண்களை மூடி படுத்திருப்பேன். இர்ர்ம் என்று ஃபேன் சுற்றி கொண்டிருக்கும் சத்தம் பெரிதாகி கொண்டே இருக்கும். அதுவே ஓர் இசைக்கருவி போல ஒரே லயத்துடன் அதன் இசை வளரும். அப்படி வளரும் இசை எதோ ஒரு கணத்தில் என்னுடைய சிந்தனைகளில் மூழ்கி அமிழ்ந்து போகும்.

  • கால்கள் சொல்லும் கதைகள்

    நடுங்கும் மெலிந்த கால்களில் எப்போதும் கொலுசுவின் பல்வரிசையில் பொய் முத்துகள் சில காணாமல் போயிருக்கும்.

  • தெருவைப் பார்த்தபடி ஒரு ஜன்னல்

    எங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் சாலைக்கு அப்பால் சுவரில் பிரகாசிக்கும் ஊரில் உள்ள ஒற்றை தியேட்டரின் சினிமா போஸ்டர்.

  • புகையால் ஆன பாதை

    ஓடி கொண்டிருக்கிறேன் தூரத்தில் மரங்களால் ஆன குகைக்குள் தார் சாலையில் பயணிக்கும் பேருந்தினை நோக்கி.

  • முள்

    முட்கள் முளைப்பது முள்செடிக்கும் வலிக்கும் என்பது என் உடலில் முட்கள் முளைத்த போது தான் புரிந்தது. முட்செடியாய் இருப்பது அதற்கு விருப்பமில்லை என்பதும்.

  • சட்டைகள் யாரைத் தேர்ந்தெடுக்கும்?

    ஷோரூமில் பார்ப்பதற்கும் வாங்கி இரண்டொரு நாள் கழித்து பார்ப்பதற்கும் சட்டைகள் வித்தியாசமாக தான் காட்சியளிக்கின்றன.

  • கண்ணீரும் அழுகையும் தேவைப்படும் போது வாய்ப்பதில்லை

    நான் அழ வேண்டிய தருணங்களில் அழுவதில்லை. சாவு வீடுகளில் கூட. என்றோ எதோ ஓர் அர்த்தமற்ற சினிமா காட்சிக்காக சட்டென அழுகை வருகிறது.

  • காலமும் தூரமும்

    என் தெரு விரியும் சுருங்கும் என் மனநிலைக்கு ஏற்ப. வீட்டு கடிகாரம் முள் வேகத்தை

  • என் வாழ்க்கை

    ஓர் அசைப்படம் அந்தப் பெரிய கட்டிடத்தின் சுவரில் சாலையில் செல்லும் வாகனங்களின் ஒளியால். நானே இருவராய் அதை கவனித்தபடி.