பேரிரைச்சலுடன் ஓடி கொண்டிருக்கும்
மிக்ஸி போல
மூளைக்குள் எது எதோ
நிசப்தத்திற்கு இடமில்லாமல்
ஓடி கொண்டே இருக்கின்றன.
வண்ண குப்பிகள் குவிந்து கிடக்கின்றன.
தரையெங்கும் தூரிகைகள்.
மனநல காப்பக அறையில்
ஒரே ஒரு ஜன்னல்.
ஜன்னலுக்கு வெளியே வானமும் நிலபரப்பும்
அதில் மரங்களும்.
ஓர் ஓவியத்தை உருவாக்க வேண்டும்.
அது உருவாகும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்
இந்தப் பேரிரைச்சல்.
மனநல காப்பகத்தில் இருந்து – 3
Comments
2 responses to “மனநல காப்பகத்தில் இருந்து – 3”
-
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செமத்தியான ஒரு பதிவு..
நினைத்த ஒன்றை உருவாக்கும்வரை ஓயாது அந்தப் பேரிரைச்சல்..
அலைகளின் பேரிரைச்சல் கரைக்குச் சொல்ல நினைத்ததை சூப்பரா சொல்லிருக்கிங்க.. 💐🎊🎉❤️
-
உலகின் சுழற்சி ஓங்காரம்… மனதின் மகிழ்ச்சி ரீங்காரம்… ஓவிய வரைவின் முடிவே வாழ்வின் சிருங்காரம். வாழ்த்துக்கள் சார்… வெங்கட்ரமணன். Mobile-9841459232.
Leave a Reply