தேநீர் மாயம்

பரபரப்பான நகர தெருவில்
அழுக்கான டீக்கடையில்
பிளாஸ்டிக் கோப்பையில் தேநீர்
நரம்பினுள் செலுத்துகிறது
அத்தேயிலைச் செடி வளர்ந்த மண்ணின் வாசத்தையும்
அம்மலையின் சக்தியையும்.