நான் ஏன் கவிதை எழுதுகிறேன் - பத்து காரணங்கள்

நான் ஏன் கவிதை எழுதுகிறேன் – பத்து காரணங்கள்

1. எனக்குக் கவிதை எழுத தெரியும் என நம்புகிறேன்.
2. எனக்குக் கவிதை எழுத வராது. அதனால் கவிதை எழுதுவதற்குப் பழகுகிறேன்.
3. கவிதை ஒரு போதை.
4. கவிதை எழுதினால் புகழ் பெறலாம் என நம்புகிறேன்.
5. நான் ஒரு சோம்பேறி. பக்கம் பக்கமாய் கதைகள் எழுதுவதை விட சில வரிகளில் கவிதை எழுதுவது சுலபம் என நினைக்கிறேன்.
6. நான் ஒரு விஷயத்தில் ஈடுபட்டால் அதிலே அதீத ஆர்வத்துடன் ஈடுபட தொடங்கி விடுவேன். கவிதைக்கான கரு மனதில் உருவானால் அதை எழுதும் வரை அதை உருட்டி உருட்டி உழைத்து கொண்டே இருப்பேன். அந்த உழைப்பு, அதீத ஆர்வம், obsession எனக்குப் பிடித்திருக்கிறது.
7. கவிதை புத்தகம் போடலாம். வீட்டில் நிறைய இடம் காலியாக தான் இருக்கிறது.
8. கவிஞர்கள் நண்பர்கள் ஆவார்கள்.
9. “நீ எதுக்குத் தான் லாயக்கி?” என்று கேட்டவர்களுக்கு நான் சொல்லும் பதில்
10. கவிதை ஒரு தொழில். ஒரு craft. எனக்கும் ஒரு craft தெரியும் என நிரூபிக்கலாம்.