
கவிதை
பாதி எழுதி
வைத்து விட்டு போகும்
கவிதையின் மிச்ச வரிகள்
நான் திரும்பி வருகையில்
நிரம்பி இருக்கும். ...தொடர்ந்து வாசிக்க ...

எப்போதும்
ஒரு கோப்பை தேநீர்,
துளிர்த்து தொடங்கும் காமம்,
வானத்தில் பரவி கிடக்கும் மரக்கிளைகள்,
என்றோ வாய்க்கிற மாடி தருணம், ...தொடர்ந்து வாசிக்க ...

நான் ஏன் கவிதை எழுதுகிறேன் – பத்து காரணங்கள்
1. எனக்குக் கவிதை எழுத தெரியும் என நம்புகிறேன்.
2. எனக்குக் கவிதை எழுத வராது. அதனால் கவிதை எழுதுவதற்குப் பழகுகிறேன்.
3. கவிதை ஒரு போதை. ...தொடர்ந்து வாசிக்க ...
அட போங்க!
உங்கள் கண்காணிப்பில்
நல்ல மனிதனாக வாழ்வதை விட
சுதந்திரமாக
கெட்ட மனிதனாக மாறி விட்டு போகிறேன்!
அட போங்க அப்பால! ...தொடர்ந்து வாசிக்க ...
கவிதை என்பது
கவிதை என்பது
கவிதை புத்தகங்களில் மட்டும்;
ஓவியம் என்பது
கலைக்கூடங்களில் மட்டும் ...தொடர்ந்து வாசிக்க ...
இந்த வாரம் வலைச்சரத்தில் ஆசிரியர் பதவி
வலைச்சரம் என்கிற வலைப்பதிவினை நீங்கள் அறிந்திருக்கலாம். வார வாரம் ஒரு வலைப்பதிவர் அதில் ஆசிரியர் பொறுப்பேற்று தனக்கு பிடித்த அல்லது தான் பரிந்துரைக்க நினைத்த வலைப்பதிவுகளை தொடர்ச்சியாக அந்த வாரம் முழுவதும் பதிவிட்டு அறிமுகப்படுத்துவார். அதில் இந்த வாரம் நான் ஆசிரியர் பொறுப்பேற்று பதிவுகள் எழுதி வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்த போகிறேன். நேரம் இருக்கிறவர்கள் வலைச்சரத்தில் எனது பதிவுகளைப் படித்து கருத்து சொல்லுங்கள். நன்றி. ...தொடர்ந்து வாசிக்க ...

எதோ சிந்தனை, ஒரு பார்வை, ஒரு புன்சிரிப்பு – சிறுகதை
யூனிவர்சிட்டியின் பிரம்மாண்டமான கட்டிடத்தை வெறித்தவாறு அந்த மரத்தடி பெஞ்சில் அமர்ந்திருந்தேன். படித்து முடித்தாயிற்று. இப்போதும் இங்கு தான் சுற்றி கொண்டிருக்கிறேன். மெள்ள மெள்ள இந்த இடத்திலிருந்து அதோ அந்தச் சுவரினைத் தாண்டியிருக்கும் நெரிசல் மிகுந்த நகரத்தில் ஐக்கியமாகி விடுவேன் என்பது மட்டும் உறுதி. வெளியே நகரத்தின் நெரிசலுக்கும் வெயிலுக்கும் உள்ளே தவழ்ந்து கிடக்கிற அமைதிக்கும் பச்சைபரப்பிற்கும் எத்தனை வித்தியாசம். ஒரு சுவர் தான் இரண்டையும் பிரிக்கின்றன. ...தொடர்ந்து வாசிக்க ...

பித்து – சிறுகதை
தூக்கம் வராத இரவுகள் வேதனையானவை. கல்லூரி நாட்களில் படுத்தவுடனே தூங்கியதெல்லாம் எதோ கனவு மாதிரி இப்ப தோன்றுகிறது. தூக்கம் வந்து விடாதா என்று கண்களை மூடி படுத்திருப்பேன். இர்ர்ம் என்று ஃபேன் சுற்றி கொண்டிருக்கும் சத்தம் பெரிதாகி கொண்டே இருக்கும். அதுவே ஓர் இசைக்கருவி போல ஒரே லயத்துடன் அதன் இசை வளரும். அப்படி வளரும் இசை எதோ ஒரு கணத்தில் என்னுடைய சிந்தனைகளில் மூழ்கி அமிழ்ந்து போகும். ...தொடர்ந்து வாசிக்க ...
கால்கள் சொல்லும் கதைகள்
நடுங்கும் மெலிந்த கால்களில்
எப்போதும்
கொலுசுவின் பல்வரிசையில்
பொய் முத்துகள் சில
காணாமல் போயிருக்கும். ...தொடர்ந்து வாசிக்க ...
தெருவைப் பார்த்தபடி ஒரு ஜன்னல்
எங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால்
சாலைக்கு அப்பால்
சுவரில் பிரகாசிக்கும்
ஊரில் உள்ள ஒற்றை தியேட்டரின்
சினிமா போஸ்டர். ...தொடர்ந்து வாசிக்க ...