இது புதிய வலைப்பதிவு

என்னுடைய புது வலைப்பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன். ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் பிளாக்கரில் செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்கிற பெயரில் ஒரு வலைப்பதிவு நடத்தி கொண்டிருந்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத நினைவு அது. இப்போது எனக்கென்று இணையத்தில் சொந்த வீடு கட்டி இங்கு குடி புகுந்திருக்கிறேன். என்னுடைய பழைய பிளாக்கர் பதிவுகள் அனைத்தும் இப்போது இங்கேயே வாசிக்க கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை கவிதைகள் வாசித்து வந்த நண்பர்கள் கவலைப்பட வேண்டாம். இது அப்படியே அந்த வலைப்பதிவு தான். முகவரி மட்டும் மாறியிருக்கிறது. முன்னர் மாதத்திற்கு மூன்று நான்கு பதிவுகள் போடுவேன். இப்போது வாரத்திற்கு மூன்று பதிவாவது போட வேண்டுமென திட்டம். பார்க்கலாம் எப்படி போகிறதென…

நன்றி!