அவன் கைதான மறுநாள்.
சூரியன்.
நெற்றியில் வியர்வை.
பாதையில் செருப்பற்ற கால்களை துன்புறுத்தும் முட்கள்.
நாவினில் தாகம்.
நிழல் கூட சுருங்கி கொண்டு விட்டது.
சந்தையின் மணம் மட்டுமே மிச்சமிருக்கும் வெற்றுவெளியில் நடந்து கொண்டிருக்கிறேன்.
தூரத்தில் ஒற்றை குடிசைக்கு வெளியே கொலையானவனின் சகாக்கள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பாலை நிலத்தில் ஒற்றை ஆளாய் என்னை தூரத்திலே பார்த்திருக்கக்கூடும்.
ஆட்டத்தை நிறுத்தி விட்டு சேர்ந்து நிற்கிறார்கள்.
என்னால் மரணத்தை காற்றில் உணர முடிகிறது.
எல்லா திசைகளிலும் அவர்களது பார்வை அலைபாய்கிறது.
என் கையில் இருந்து ஊற்றிய உதிரத்தை வேட்டியில் துடைத்து விட்டு ஓடுகிறேன்
கொடூரமாய் ஓலமிட்டபடி அவர்களை நோக்கி.
அவன் கைதான மறுநாள்
Comments
17 responses to “அவன் கைதான மறுநாள்”
-
அப்புறம்?
உங்கள் வார்த்தைகளில் ஒரு கனமிருக்கிறது .படித்தவுடன் அது மனதில் வந்து உட்கார்ந்து கொள்கிறது -
மிக அருமை சாய் ராம் எதிர் பார்க்கல இப்படி ஒரு கனத்தை
-
@padma @thenammailakshmanan கருத்திற்கும் வருகைக்கும் நன்றி!
வார்த்தைகளில் மிகுந்திருக்கும் கனம் இணையமெங்கும் உண்டாக்கி கொண்டே போகிறது அதன் தடத்தை. அத்தடங்களை மூடி செல்கின்றது அடுத்தடுத்த வார்த்தைகள்.
-
//அவன் கைதான மறுநாள்.
சூரியன். //பிரம்மாண்ட உருவகம்..! ரசித்தேன்!!
-
//நெற்றியில் வியர்வை.
பாதையில் செருப்பற்ற கால்களை துன்புறுத்தும் முட்கள். //வலி பறைசாற்றும் பாதை நெடுமை… தளர்ந்துபோகிறேன்..!!
-
//
நாவினில் தாகம்.
நிழல் கூட சுருங்கி கொண்டு விட்டது.
//
சூர்ய பயண வேகத்தில்.. நானும் பிரமிக்கிறேன்..! -
//
சந்தையின் மணம் மட்டுமே மிச்சமிருக்கும் வெற்றுவெளியில் நடந்து கொண்டிருக்கிறேன்.
//
உள்வாங்கி வாசிப்பவனின்.. சுவாசிப்பவனின்.. யோசிப்பவனின் நேர்த்தி கண்டு பூரிக்கிறேன் இங்கு..! -
//தூரத்தில் ஒற்றை குடிசைக்கு வெளியே கொலையானவனின் சகாக்கள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள். //
யதார்த்தின் இறுக்கத்தின் என்னை நானே குமைந்து கொள்ள கடமைப் பட்டவனாகிறேன.. இந்த படிமம் அற்புதம்!!
-
//பாலை நிலத்தில் ஒற்றை ஆளாய் என்னை தூரத்திலே பார்த்திருக்கக்கூடும்.
ஆட்டத்தை நிறுத்தி விட்டு சேர்ந்து நிற்கிறார்கள். //நினைவோடை கடந்து உடல்பலம் மறந்து கனவோடையில் பிரவாகிக்கும் உற்சாகம்.. நீந்துகிறேன்!!
-
//என்னால் மரணத்தை காற்றில் உணர முடிகிறது.
எல்லா திசைகளிலும் அவர்களது பார்வை அலைபாய்கிறது. //உண்மைகள் கட்டவிழ்க்கும் சாமார்த்தியத்தில் மனம் தானாகவே ஒரு சாமாதானத்தை முன்-தயார் செய்து கொள்கிறது. தத்வார்த்தம்!!
-
//என் கையில் இருந்து ஊற்றிய உதிரத்தை வேட்டியில் துடைத்து விட்டு ஓடுகிறேன்
கொடூரமாய் ஓலமிட்டபடி அவர்களை நோக்கி.
//
என்னை கவ்விக்கொண்டு காற்றில் கடுகும் வரிகள்… பறவை போல கவிதை! -
மொத்தத்தில் பிரமித்தேன். அற்புதம் இக்கவிதை!! வாழ்த்துக்கள் சாய்..!
-
அன்பு ஜெகநாதன், வரிக்கு வரி என்னுடைய கவிதைக்கு நீங்கள் எழுதியிருக்கும் கருத்தினை பார்த்து அகமகிழ்ந்து போனேன். மிக்க நன்றி! (யார் அங்கே! பொற்காசுகளை கொண்டு வாருங்கள்)
-
பின்னூட்டங்கள் குறைவாக இருக்கே என்று நீங்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக :))
தொடர்ந்து இதுபோல் எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் சாய்! -
@ஜெகநாதன் நீங்கள் அளிக்கும் ஊக்கம் சந்தோஷமளிக்கிறது! 🙂
-
making of the kavithai is different.. ur tonned well.. like ரேணிகுண்டா 🙂
//பின்னூட்டங்கள் குறைவாக இருக்கே என்று நீங்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக 🙂 )
தொடர்ந்து இதுபோல் எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் சாய்!//ஜெகன் dont worry
Ashok தொடந்து பின்னூட்டமிடுகிறாரே… அதுவே 100 பின்னூட்டத்திற்கு சமமாகதோ? ஹிஹி 😉
-
வாங்க அசோக் என் புது வலைப்பதிவு எப்படி இருக்கு?
நீங்க ஜோக்கா சொல்லி இருந்தாலும் கூட எனக்கு பல சமயம் உற்சாகமளித்தது உங்களுடைய கமெண்ட்கள் தாம். என்னுடைய வலைப்பதிவில் அதிகமாய் கமெண்ட்கள் பதித்தவர் நீங்களாக தான் இருப்பீர்கள். நன்றி!
Leave a Reply