உலகத்தில் பட்டினியால் பாதிக்கபட்ட மக்களில் 50% பேர் இந்தியர்கள்

நமது உலக மக்கள் தொகை இந்த பதிப்பு எழுதபட்டு கொண்டிருக்கும் சமயம் 692 கோடியை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. இதே சமயம் ஜக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் உலகத்தில் இப்போது 100 கோடி பேர் பட்டினியால் வாடுவதாக சொல்லபட்டு இருக்கிறது. அதாவது ஏழு பேரில் ஒருவர் பட்டினியால் வாடுவதாக பொதுபடையாக கொள்ளலாம்.

இந்தியாவின் நிலை இன்னும் மோசம்
உலக ஜனதொகையில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். ஆனால் பட்டினியால் வாடும் ஜனத்தில் 50% பேர் இந்தியர்கள். உணவு பற்றாகுறையும் மிக குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களும் நிறைந்த நாடு தான் இந்தியா. நோய்கள் மிக எளிதாக நம் நாட்டை குறி வைப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இங்கு பத்தில் ஒன்பது கர்ப்பமுற்ற பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கபட்டு இருக்கிறார்கள். தாயின் இரத்த சோகை பிறக்கும் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

இந்தியா

  • 15 கோடி குழந்தைகள் பட்டினியால் பாதிக்கபட்டிருக்கிறார்கள்.
  • இந்தியாவில் ஏற்படும் 50% குழந்தைகளின் மரணம் சத்துணவு பற்றாக்குறையால் ஏற்படுகிறது.
  • ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 70 சதவீதத்தினர் இரத்த சோகையால் பாதிக்கபட்டு இருக்கிறார்கள்.
  • 80% இந்திய குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்து கிடைக்கவில்லை.

உலகம் முழுவதும் இன்று பட்டினியால் பாதிக்கபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம் தற்போது ஏற்பட்டுள்ள உலக பொருளாதார சரிவு. ஆனால் இந்தியாவில் உள்ள மோசமான நிலைக்கு காரணம் வறுமை, படிப்பறிவு இன்மை, காடுகளை அழித்தல், இயற்கை சீற்றங்கள் மற்றும் சமப்படுத்தபடாத உணவு வழங்கல் முறை. நம்முடைய அரசின் இயலாமையும் அரசு இயந்திரத்தில் உள்ள ஊழல் முறைகேடுகளுமே பட்டினி எண்ணிக்கையை உயர்த்தியபடி இருக்கிறது.

அரசாங்கம் பொய் சொல்கிறது
ஐக்கிய நாடுகள் சபையும் அதன் கிளை உலக உணவு நிறுவனமும் மற்றும் ஏராளமான சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இன்று இந்தியாவில் நிலவும் பட்டினி நிலையை ஆபத்தானது என வர்ணிக்கிறார்கள். ஆனால் இந்திய அரசாங்கமோ வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக அறிவிக்கிறது. இது மக்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, உண்மையான பிரச்சனையை அணுகாமல் ஓதுக்குவதுமான தவறாகும்.

நாட்டு மக்களிடையே சுபிட்சம் நிலவுவதாக காட்டுவதற்காக இப்போதுள்ள காங்கிரஸ் அரசாங்கம் மட்டுமல்ல, இது வரை இந்திய ஜனநாயகத்தினை ஆண்ட அத்தனை கட்சிகளும் இந்தியாவின் உண்மையான நிலையை மூடி மறைத்தே வைத்திருந்தார்கள். மத்திய வர்க்கத்தினரின் பொருளாதார எழுச்சியை நாட்டின் எழுச்சியாக காட்ட முயற்சித்தார்கள். இதன் மூலம் இந்தியா தனது ஏழை குடிமக்களை சமமான மக்களாக நடத்தவில்லை என்பதும் இங்குள்ள அரசிற்கு அவர்கள் ஒரு பொருட்டே இல்லை என்பதும் தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பு: அனைத்து தகவல்களும் ஜ.நா வெளியிட்ட அறிக்கைகளில் இருந்து எடுக்கபட்டவை.