நம்ம தேர்தல் முறை சரியான முறை தானா?

ஒரு தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அதில் தேர்தலன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 என்று வைத்து கொள்ளுங்கள். இதில் 24 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஜெயித்தவராக அறிவிக்கபடுகிறார். அவரே அந்த நூறு பேர் மற்றும் அந்த தொகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஐம்பது பேர்களின் பிரதிநிதியாக மாறி போகிறார். உண்மையில் அந்த 24 வாக்குகள் பெற்ற நபர் பிரதிநிதி ஆவது நியாயம் தானா?

தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிக்கு எதிராக வாக்களித்த 41 பேரின் குரல் முடக்கபட்டதாய் அர்த்தம் ஆகாதா?

இப்படி குதர்க்கம் பேசுகிறாயே, நீ இதற்கு மாற்று யோசனை சொல் பார்க்கலாம் என நீங்கள் சொல்லலாம். சரி பணிந்து போகிறேன். 24 வோட்டுகள் வாங்கிய அந்த நபர் பிரதிநிதியாக இருக்க தகுதியானவர் என்றே ஒப்புக்கொள்வோம்.

 • 24இல் 2 கள்ள வோட்டு
 • 60 சதவீதத்திற்கு மேல் படிப்பறிவு இல்லா சமூகம் நமது. அதிலே கல்லூரிக்கு போய் படிப்பு முடித்த பல கனவான்கள், சீமாட்டிகள் தினசரிகளையோ புத்தகங்களையோ புரட்டுவதே கிடையாது என்கிற அளவு ஞான சூன்யங்கள். இவர்கள் போடும் வோட்டு எந்தளவிற்கு விழிப்புணர்வுடன் செய்யபட்டவை என்று ஒரு கேள்வி.
 • பல வோட்டுகளை விற்குமளவு பலம் படைத்த ஆள் ஒருவர் ஒரு வார்டுக்கு இருக்கும் அளவிற்கு குழு மனப்பான்மை மலிந்து கிடக்கிறது.
 • சாதி ஆதிக்கமிகுந்த சமூகம் இது.

காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். மீண்டும் கேட்கிறேன். நம்ம தேர்தல் முறை சரியானது தானா?

ம்கூம், வோட்டுகளை விற்று பணமாக்கி கொள்ளுங்கள். பிரதிநிதிகளிடம் நீங்கள் எதிர்பார்க்க கூடிய ஒரே விஷயம் இனி அது ஒன்று தான்.


Comments
2 responses to “நம்ம தேர்தல் முறை சரியான முறை தானா?”
 1. புருனோ Bruno Avatar
  புருனோ Bruno

  நீங்கள் கூறுவதில் நியாயம் இருந்தாலும், இன்றைய தினம் இந்த பதிவை இடுவதால் நீங்கள் தோற்றவர்களுக்கு வக்காலத்து வாங்குவதாகவே புரிந்து கொள்ளப்படும்

 2. Sathik Ali Avatar
  Sathik Ali

  தேர்தல் முறை சரிதான்.நீங்கள் சொன்ன 60% படிப்பறிவில்லமல் இருப்பதும்,ஓட்டு போடாமல் இருப்பதும்,சாதியை இன்னும் ஒழிக்காமல் வைத்திருப்பதும்,ஏழ்மையும் தான் மாற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.