ஒப்பனைக்காரர்கள் வீதி

குழந்தையை சுமப்பது போல
இரு இளம்பெண்கள் தங்கள் மருதாணியிடப்பட்ட கைகளை
எதன் மீதும் உரசாமல் கவனத்துடன் நடந்து போவதை
பார்க்கும் போது தான்
நான் எந்த வீதிக்கு வந்து இருக்கிறேன்
என்பது உரைக்கிறது.

அங்கங்களை நகைகளாக மாற்றி கொள்ளும்
ஆர்வத்தில் மாதுகளுடன் சில இளைஞர்களும்
அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என் கரங்களின் மேலிருக்கும்
கறுப்பு கறையை மறைக்க வேண்டிய
கட்டாயத்தினை உணரும் போது
முலைகளின் வாசம் எங்கெங்கும் எழுகிறது.

மூக்கிலிருந்து பொங்கும் உதிரத்தினை
மறைக்க ஓட வேண்டும்
ஏதேனும் பழைய துணியினை தேடி.

குப்பை தொட்டிகளை காண முடியவில்லை.

பளபளக்கும் துணிகள்
கடைகளின் வாசலில் தொங்கியபடி
அனைவரையும் அணைத்து வரவேற்கிறது.

என் மூக்கிலிருந்து ரத்தம் கொட்ட கொட்ட
தூரத்தில் நடனமாடும் துணிகளை நோக்கி ஓடுகிறேன்.

யாரோ மறித்தார்கள்.
எங்கோ அடி விழுந்தது.
கண்கள் இருள்வதற்கு முன்
உதிரத்தால் ஒப்பனையிடப்பட்ட
வேறொருத்தியின் முகத்தை காண்கிறேன்.
அல்ல அது நான் தானா?

விடைக்கு முன்னால்
உடல் அடங்கி கொண்டிருக்கிறது.


Comments
10 responses to “ஒப்பனைக்காரர்கள் வீதி”
  1. ஆதவா Avatar
    ஆதவா

    நல்ல கற்பனை.. வித்தியாசமாக இருக்கிறது. இறுதி வரிகள் மிக அருமை…

  2. நன்றி ஆதவா!கவிதைகளை இணையத்தில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைவோ என சோர்ந்திருந்தேன். உங்கள் கருத்துகள் ஊக்கமூட்டுகின்றன.

  3. தேவன் மாயம் Avatar
    தேவன் மாயம்

    உங்கள் பதிவு அருமை. உங்களை வரும் வாரம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்கிறேன். என்னைத்தொடர்பு கொள்க! தமிழ் மணத்தில் இணையுங்கள்!இது போன்ற கவிதைக்கு 30 பின்னூட்டம் வரும்

  4. நன்றி தேவன் மாயம்! உங்களுடைய ஆதரவிற்கு!

  5. தேவன் மாயம் Avatar
    தேவன் மாயம்

    இன்று காலை 10.30 மணிக்கு வலச்சரம் வரவும்.உங்கள் கவிதைகளை என் நண்பர் படிப்பார்கள்! இன்னும் 4 பதிவர் கவிதைகளும் அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும்!அவ்ற்றைப்படித்துவிட்டு கருத்துரை தரவும்,தேவா..

  6. தேவன் மாயம் Avatar
    தேவன் மாயம்

    இன்று காலை 10.30 மணிக்கு வலச்சரம் வரவும்.உங்கள் கவிதைகளை என் நண்பர் படிப்பார்கள்! இன்னும் 4 பதிவர் கவிதைகளும் அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும்!அவ்ற்றைப்படித்துவிட்டு கருத்துரை தரவும்,தேவா..வலைச்சர முகவரி http://blogintamil.blogspot.com/

  7. நட்புடன் ஜமால் Avatar
    நட்புடன் ஜமால்

    \\குழந்தையை சுமப்பது போலஇரு இளம்பெண்கள் தங்கள் மருதாணியிடப்பட்ட கைகளைஎதன் மீதும் உரசாமல் கவனத்துடன் நடந்து போவதைபார்க்கும் போது\\நல்ல வர்ணனனை ஸ்ரீராம்.நல்ல இருக்கு துவக்கம்

  8. வேத்தியன் Avatar
    வேத்தியன்

    கவிதை சூப்பர்…தொடர்ந்து எழுத வாழ்த்துகள்…

    1. When you think about it, that’s got to be the right anwsre.

      1. I read your pointsg and was jealous

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.