தமிழினி மெல்ல சாகும்

எந்த ஒரு செயல் நடப்பதற்கு முன்பும் அது நடக்க போகிறது என்கிற அறிவிப்பு காட்டுகிற விதமான விஷயங்கள் நடப்பதுண்டு. ஆங்கிலத்தில் சுருக்கமாக Symptoms. தமிழ் இனத்திற்கும், தமிழ் பாரம்பரியத்திற்குமான சாவு மணி பல வருடங்களுக்கு முன்னாலே அடிக்கபட்டாலும் அதன் சாவின் முன்னோட்டம் இப்போது ஈழத்தில் அடித்து வீழ்த்தப்படும் அப்பாவி தமிழ் மக்களின் சாவுகளாலும் அதனை தொடர்ந்து எழும் தமிழ் மக்களின் மௌனத்தாலும் தெளிவாக தெரிகிறது.

தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது கௌரவம், ஆங்கிலத்தில் நமது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறினால் மரியாதை என்கிற விதமான மனோபாவம் பரவலாக பரவிய போதே சாவு மணி கேட்க தொடங்கி விட்டது. இப்போது ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் மனித உரிமைகளை இழந்து போர்கைதிகளாக நிற்கும் சூழலில் அதனை தமிழனே தட்டி கேட்க தயங்கும் நிலை உருவாக்கபட்ட பிறகு, இது “தமிழினி மெல்ல சாகும்,” என்பதனை தான் உரத்து சொல்லுகிறது.

ஓவியம்: Frank Frazetta