Year: 2008

  • ஒரு கனவு மெய்ப்பட்ட சம்பவம் அது; நிலவினில் மனிதன் காலடி வைத்தான். அறிவியல் முன்னேற்றங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல கனவுகளையும் மாற்றி விட்ட தருணமது.அமெரிக்க ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையத்தின் ‘அப்போலோ’ திட்டங்கள் நிலவுக்கு மனிதனை அழைத்துச் செல்லும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்டவை. ஆறு அப்போலோ பயணங்கள் (அப்போலோக்கள் 11, 12, 14, 15, 16 & 17) இந்தக் குறிக்கோளை அடைந்தன. அப்போலோ 11, 16 ஜூலை 1969 அன்று ஏவப்பட்டது. ஜூலை 20, 1969-இல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவினில் காலடி வைத்தார்.

    பயணத்தைத் தொடங்கும்பொழுது ‘விண்வெளிக் குழு’ உயிரோடு திரும்பி வருவதற்கு 90 சதவீத வாய்ப்பும், நிலவினில் காலடி வைப்பதற்கு 50 சதவீத வாய்ப்பும் இருந்ததாகவே ஆர்ம்ஸ்ட்ராங் எண்ணிக் கொண்டிருந்தார். அப்போலோ திட்டத்தில் செயலாற்றிய எல்லாருக்கும் இவ் விஷயம் தெளிவாகத் தெரியும். அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்குப் பின் பேச வேண்டிய உரையையும் தயாராக வைத்திருந்தார். நிக்சனுக்கு உரையை எழுதித் தரும் வில்லியம் சபையர், ‘விதி, நிலவினில் அமைதியாக ஆராயப் போனவர்களை அமைதியாக உறங்க வைத்துவிட்டது,’ என்று எழுதியிருந்தார்.

    …மேலும் வாசிக்க

  • என்னுடன் பணி புரிந்த நண்பர் ஒருவரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை அவரை வீட்டோடு முடக்கியிருந்தது. நண்பரின் தாயோ மனநிலை குன்றியவர். நண்பர் ஒரே மகன். திருமணமும் ஆகவில்லை. அவரது வாழ்க்கையே மற்றவர்கள் பார்த்து பாவப்படும் அளவில் இருந்தது. இதில் திடீரென தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் முற்றிலுமாய் தளர்ந்து விட்டார்.

    அன்று காலை அவரது தந்தை வீட்டு குளியலறையில் மயங்கி விழுந்தவுடன், நண்பர் தன் தந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து போயிருக்கிறார். நம் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையென்றால் முதலில் உயிரைக் காப்பாற்றுவோமென தான் நினைப்போம். பணத்தைப் பற்றி கவலைப்பட அப்போது தோன்றாது.

    மருத்துவமனையில் நண்பரின் தந்தை சேர்க்கப்பட்ட இரண்டாவது நாள் தாம் நண்பருக்குத் தனது தவறு புரிந்தது. சூடு வைக்கப்பட்ட ஆட்டோ மீட்டர் போல ஒரு நாளைக்குச் சில ஆயிரங்கள் பில் தொகையாக உயர தொடங்கியது.… …மேலும் வாசிக்க


  • முதலாளி தன் மனைவிக்கு
    வாங்கி கொடுத்த முத்துச்சரத்தில்
    உதிர வாசம்!

    உதிரம் திருடப்பட்டவர்கள்
    மாலை நேரம் வீடு திரும்புகையில்,
    கதவை திறக்கும் போது படியும்
    உடற்களைப்புடனான மன சலிப்பு!

    அஞ்சால் அலுப்பு மருந்தினை
    உட் கொண்டு
    களைப்பையும் சலிப்பையும்
    டாஸ்மாக்கில் ஊற்றி
    வாழ்வின் அபத்தத்தை பாடுவோம், வா!

    நம் மனைவிமார்களின் கண்ணீரை
    அவர்களது கண்ணீராலே குளிப்பாட்டுவோம்.
    அவர்களிடமாவது நாம் முதலாளிகளாய் இருப்போம்!


  • பைக்கின் உறுமல் ஒலியை காற்றில் மிதக்க விட்டு
    அவன் என்னிடமிருந்து விடை பெற்று சென்று
    சில கணங்கள் தாம் கடந்திருக்கும்.

    கத்தியை கூர் தீட்டுவது போல ஒரு சத்தம்.
    அவன் சென்ற திசையில்
    யாரோ பைக்கிலிருந்து தூக்கியெறியபடுவதை பார்த்தேன்.
    அதற்கு பிறகு நான் திரும்பவே இல்லை.
    எதிர் திசையில் நடந்து கொண்டே இருந்தேன்.

    முதிர் மாலை நேரத்து இருள்.
    யார் என தெளிவில்லை.
    அவனாக இருக்குமோ?

    துப்பட்டாவை இழுத்து போர்த்தி
    வீட்டை நோக்கி நடந்தேன்.
    ஏற்கெனவே தாமதமாகி விட்டது.
    தந்தை திட்டுவார்.

    விபத்தின் தாக்கம் ஓர் அலை போல என்னை கடந்து சென்றது.
    சிலர் அந்த பக்கம் ஓடினார்கள்.
    சிலர் வெறித்தபடி பார்த்து கொண்டிருந்தார்கள்.

    அவனாக இருக்காது.
    வேறு யாரோ.
    யாரோ ஒரு குடிகாரன்.

    அவனாக இருந்தால் அவனுக்கு இப்போது உதவி தேவைபடும் அல்லவா?
    அவனுக்கு விபத்து நேர்ந்ததை நான் பார்த்தேன் என யாருக்குமே தெரியாது.
    அவனுக்கே தெரியாது.

    இயந்திரங்களின் பிடியில் சிக்கிய பிரதான வீதிக்கு வந்த போது
    அந்த விபத்து நடந்ததற்கான அறிகுறியே இல்லை.…மேலும் வாசிக்க


  • கொலையாளியை கூட்ட நெரிசலில் அவர்கள் அழைத்து போகும் போது
    எங்கள் இருவர் கண்களும் ஒரு கணம் சந்தித்து கொண்டன.
    அவனது கண்களுக்குள் அமைதி மட்டுமே இருந்தது.
    என் கண்களில் படபடப்பை பார்த்திருப்பான்.

    அவனது கண்களில் அமைதியை தவிர
    வேறு என்ன இருந்திருக்க வேண்டும்?
    என்ன எதிர்பார்த்தேன்?

    கூட்டத்தின் வியர்வை வாசத்தில்,
    புரியாத பாஷை கூச்சல்களில்
    யார் செவிக்கும் கேட்காத வசனங்கள்
    காற்றில் மிதந்து செல்வதை பார்த்தேன்.

    “கிராமத்திலே அழகான பெண்
    தினமும் தனியா அந்த பக்கம் போறதை
    கவனிச்சிட்டே இருந்திருக்கிறான்.”

    “கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு.”

    காற்றில் மிதந்து சென்ற வசனங்களை
    நான் முழுமையாய் வாசிக்கும் முன்
    அவை கலைந்து போயின.
    கலைந்த வேகத்தில் புகையாய்
    நேற்று நான் பார்த்த
    வேறொரு யுவதியின் முகத்தை வரைந்து காட்டியது.

    அழகு.
    அதனை கச்சிதமாய் திருத்தமாய் பயன்படுத்தி
    பார்ப்போரை வசியம் செய்யும் தோற்றத்துடன்
    முகத்தில் புன்முறுவல் பூசியிருந்தாள்
    அந்த இளம் பெண்.

    புகை ஓவியத்தை என் பயத்தால் கலைத்தேன்.…மேலும் வாசிக்க


  • பல வருடங்கள் கழித்து அன்று கல்லூரி நண்பன் ஒருவனைப் பார்த்தேன். தன் புது ஹோண்டா காரில் வந்திருந்தான். பரஸ்பர நலம் விசாரித்தல், பிறகு நண்பர்களைப் பற்றி புரணி பேசுதல் என உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நல்ல ஏசி பாருக்கு மது அருந்த அழைத்து சென்றான்.

    தொடர்ந்து இரண்டு மணி நேரம் உரையாடி விட்டு அடுத்து பேச என்ன என தெரியாமல் ஓர் அமைதி நிலவியது. பாரில் ஓர் ஓரத்தில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த டீவியில் ஓடிக் கொண்டிருந்த கிரிக்கெட் மேட்ச்சை இருவரும் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தோம். மது அருந்தும் போது பேச்சு ஒரு கூடுதல் போதையூட்டி. அதனால் நண்பன் மீண்டும் பேச தொடங்கினான்.

    “உனக்கு பாண்டியன் நினைவிருக்கா?” என நண்பன் டீவி திரையில் இருந்து கண்களை அகற்றாமல் கேட்டான். நான் பதில் பேசுவதற்குள் அவனே மீண்டும் பேச தொடங்கினான்.

    “பாண்டியனைக் பட்டிக்காட்டான், பட்டிக்காட்டான்னு நாம எல்லாரும் கிண்டல் பண்ணோம் நினைவிருக்கா.”

    கல்லூரி காலத்தில் எங்களுக்கு ஒரு வருட ஜுனியர் இந்த பாண்டியன்.… …மேலும் வாசிக்க


  • அரக்கோணம் போகும் வழியில் ரெயில் ஜன்னல் வழியாக நீங்கள் அந்த நகரங்களை பார்ப்பீர்கள். லட்சுமி நகர், பிரதாப் நகர் என ஒவ்வொரு காலனிக்கும் பெயர் பலகைகள் பளிச்சென வைக்கபட்டிருக்கும். அதோடு நகர் அனெக்ஸ் என கூடுதல் காலனிகளுக்கும் பெயர் பலகைகளையும் வாசிக்க முடியும். அதோடு இந்த காலனிகளுக்கு போகும் பாதையில் வழிகாட்டி பலகைகள் வைக்கபட்டிருக்கின்றன.

    ஒரு வித்தியாசமுண்டு. இந்த நகரங்களில் பெயர் பலகைகள் மட்டும் தான் இருக்கும். எல்லாம் காலி நிலங்கள். எல்லை கோடுகளை வலியுறுத்தும் கற்களை தவிர புல் புளைத்த நிலப்பரப்பு. ஏன் காலி நிலங்களில் இவ்வளவு பளிச்சென பெயர் பலகைகள்? காரணமுண்டு. இன்று அதிக அளவில் பணம் புழங்கும் நில வியாபாரத்தினால் உண்டான மனிதர்களற்ற நகரங்கள் இவை.

    “தாம்பரத்துல எங்க அப்பாவுக்கு ஒரு நிலம் இருந்துச்சு. இருபது வருஷத்துக்கு முன்னால அவ்வளவு தொலைவில நிலம் வைச்சு என்ன பண்றதுன்னு சொல்லி அந்த நிலத்தை இருபதாயிரத்துக்கு விற்றோம். இன்னிக்கு அந்த நிலத்தோட மதிப்பு என்னன்னு தெரியுமா?… …மேலும் வாசிக்க


  • ஒரு சினிமா படப்பிடிப்பு தளம். வழக்கம் போல எல்லாரும் பிசியாக இருக்கிறார்கள். ஓர் ஓரத்தில் சிவா நின்று கொண்டிருக்கிறான். நான்கு நாள் தாடி. மெலிந்த உருவம். ஒரு கோணத்தில் அந்தச் சினிமா டைரக்டரைப் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது போலவே இருக்கிறது. டைரக்டரின் கடைக்கண் பார்வைக்காக தான் சிவா நின்று கொண்டிருக்கிறான். அவரும் தினமும் அவனைப் பார்க்கிறார். பார்க்கிறார் என்பதை விட அவரது பார்வை அவனிருக்கும் திசையில் கடந்து போகும். அவன் எழுந்து பணிந்து ஒரு வணக்கம் வைப்பான். அதை அவர் பொருட்படுத்தவே மாட்டார். யாருமில்லாத சுவற்றைப் பார்த்தது போல அவரது ரியாக்ஷன் இருக்கும்.

    அவன் நேற்று மதியம் கடைசியாக சாப்பிட்டது. பசியில் வயிறு எரிகிறது. தலை சுற்றல் வேறு.

    சிவாவிற்கு சேலம் பக்கத்தில் ஒரு கிராமம் தான் சொந்த ஊர். சிறு வயதில் படிப்பு ஏறாமல் ஊர் சுற்றி கொண்டிருந்தான். அவனது கிராமத்தில் பரோட்டா கடை நடத்தும் தனசேகர் அவனுக்கு ஒரு வகையில் தூரத்து சொந்தம்.… …மேலும் வாசிக்க


  • அவரது பெயர் சீனிவாசன். சீனா என்று சொன்னால் தான் பலருக்கு அவரைத் தெரியும். திரைக்கதை எழுதுவதில் திறமைசாலி. பல நிறுவனங்களில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கபட்டன. முழு திறமையையும் காட்ட வேண்டிய காலகட்டத்தில் திடீரென மனநிலை பிறழ்ந்து பைத்தியமாகி போனார்.

    சீனா வட சென்னையில் ஒரு மனநல காப்பகத்தில் இருந்த போது தான் நான் அவரை முதன்முதலாக சந்தித்தேன். நண்பர்களுடன் வேறொரு பணிக்காக நாங்கள் அந்த மனநல காப்பகத்திற்கு சென்றிருந்தோம். அங்கே போகும் வழியில் நண்பர்கள் சீனாவைப் பற்றி தான் பேசி கொண்டு வந்தார்கள். அதனால் அவர் எப்படியிருப்பார் என்பது பற்றிய என் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

    சென்னைக்கு வெளியே ஒரு கிராமம் போன்ற இடத்தில் அந்த மனநல காப்பகம் இருந்தது. அமைதியான இடம். காப்பகத்திற்கு நிதி வசதி குறைவாக இருந்ததினால் கட்டிடங்களோ அங்கிருந்த வசதிகளோ மிக சுமாராக இருந்தது. ஆண்களுக்கான தனியார் இலவச மனநல காப்பகங்கள் சென்னையில் மிகவும் குறைவு. அந்த வகையில் அந்தக் காப்பகத்தில் வசதிகள் இல்லையெனினும் அது இருப்பதே ஒரு சேவை தான்.… …மேலும் வாசிக்க


  • மது வாடையடிக்கும் மாலை பொழுதில்
    வானத்தில் பூசப்பட்ட வண்ணங்களை கொண்டு
    கற்பனை செய்கிறேன்
    பல ஓவியங்களை.

    போலீஸ்காரர்களின் பூட்ஸ் ஓலிகள்
    ஓவியத்தை கலைத்து செல்கின்றன.

    எங்கிருந்தோ இருள் உதிப்பதற்குள்
    கலைக்கபட்ட ஓவியங்களை
    நான் சீராக்கி
    வார்த்தைகளுக்குள் சேமிக்க வேண்டும்.

    என் மொழியில் சேமித்தவற்றை
    அவரவர் மொழியில் உண்ணும் போது
    இன்னும் பூக்கலாம்
    உன்னத தருணங்கள்.