டைம் இதழின் ‘2008-ம் ஆண்டின் சிறந்த பத்து புகைப்படங்கள்’
1. பிரச்சாரத்தின் பிம்பம்
புகைப்படக்காரர் – கிரிஸ்டோபர் மோரிஸ்

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடந்த அதிபர் பதவிக்கான தேர்தல் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கான பிரச்சாரம் வரலாறு காணாத வகையில் பிரம்மாண்டமாக நடந்தது. அதிபர் பதவிக்கு போட்டியிட்ட மெக் கைன் தான் நிகழ்த்த இருக்கும் உரைக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்த போது அவரது மனைவி சிண்டி, ஓட்டல் அறையில் வெள்ளை வைனை அருந்தியவாறு கணவருக்காக காத்திருந்தார்.

பெல்ப்ஸ் சாதனை
புகைப்படக்காரர் – ஹன்ஸ் லுடைமியர்

இந்த ஆண்டு சீனாவில் நடத்தப்பட்ட ஓலிம்பிக் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் போட்டி வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் உலக சாதனையாக அதிகளவு தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அவரது ஏழாவது தங்கப்பதக்கம் நூறு மீட்டர் பட்டர்ஃபளை நீச்சலில் கிடைத்தது. இதில் அவருக்கு அடுத்ததாக வந்த செர்பிய நாட்டு நீச்சல் வீரர் மிலோரட் கேவிக்கிற்கும் அவருக்கும் இருந்த வித்தியாசம் வெறும் .01 விநாடிகள் தாம்.

சீயோனின் குழந்தைகள்
புகைப்படக்காரர் – ஸ்டெபானி சின்கலர்

அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தனிப்பிரிவு கிருஸ்துவ சர்ச் நிர்வாகம் ஒன்றின் மீது குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் நடப்பதாக குற்றம் சாட்டபட்டது. இதனை தொடர்ந்து அங்கு ரெய்டு நிகழ்த்தபட்டது. கடுமையான விதிமுறைகள் கொண்ட இந்த சமூகத்தினுள் நடப்பதை படம் பிடிக்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் புகைப்படக்காரர் ஸ்டெபானி சின்கலருக்கு வாய்த்தது. ஒரு சிறுமி தனது விளையாட்டு திறமையை காண்பிக்க்கும போது எடுக்கப்பட்ட படம்.

மணலில் வரையப்பட்ட கோடு
புகைப்படக்காரர் – ஆண்டனி சூவா

அமெரிக்காவிற்கும் அதன் அண்டை நாடான மெக்ஸிகோவிற்கும் இடையே ஒரு நீண்ட சுவர் பல வருட பேச்சு வார்த்தைக்கு பிறகு கட்டப்பட்டு வருகிறது. 1.2 மில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த சுவரின் ஒரு பகுதி அரிசோனா மாகணத்தின் சான் லுயிஸ் பாலைவனத்தில் உள்ளது. அதனை அமெரிக்க எல்லை ரோந்து படையினர் பார்வையிடுகிறார்கள்.

இழுத்து செல்லபட்டவை
புகைப்படக்காரர் – பிரியான் ரே

அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜுன் மாதம் வெள்ளம் கரை புரண்டோடியது. ஓரிடத்தில் ஆற்றங்கரையில் இருந்த வீடுகள் ரயில்வே பாலத்திற்கு கீழே வரை அடித்து செல்லபட்டன.

இடிப்பாடுகளுக்கு நடுவே
புகைப்படம் – கலர் சைனா போட்டோ நிறுவனம்

சீனாவில் உள்ள சீயோசன் மாகணத்தில் இந்த ஆண்டு நிகழ்ந்த
பூகம்பத்தில் 87,000 பேர் உயிர் இழந்தார்கள். மீட்பு பணியில் இருந்தவர்கள் பல நாட்கள் யாரேனும் உயிர் பிழைத்து இருப்பார்களா என தேடுதல் பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். மியான்யங் பகுதியில் இடிந்த கட்டிடத்தினுள் இருந்து காயமடைந்த ஒருவரை மீட்டு வருகிறார்கள்.

கவனிக்கபடாதவை
புகைப்படக்காரர் – யூரி கோஸிரிவ்

தென் ஓசோட்டியா தனிநாடு கோரிக்கை கேட்டதை தொடர்ந்து ரஷ்யாவிற்கும் ஜார்ஜியாவிற்கும் இடையில் உரசலும் மோதலும் முற்றியது. மோதலில் இறந்து போன ஜார்ஜியா நாட்டு போர்வீரர்களின் உடல்கள் ஐந்து நாட்கள் ஆகியும் புதைக்கபடாமல் சவப்பெட்டியிலே இருக்கின்றன. டைம் இதழின் புகைப்படக்காரர் யூரி கோஸிரிவ் அங்கிருந்த அரசு அலுவலர்களிடம் கேட்ட போது, புதைக்க போதுமான வசதிகள் இன்னும் வந்து சேரவில்லை என்கிற பதிலே கிடைத்தது. ஆனால் அதே நாளன்று ஜார்ஜியாவில் உள்ள பழங்குடியினர் வீடுகளை இயந்திரங்கள் இடித்து தள்ளியதை புகைப்படக்காரர் பார்த்தார்.

முகமூடி மனிதன்
புகைப்படக்காரர் – ஜேரோம் டிலே

ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் மீண்டும் இராணுவத்தினருக்கும் புரட்சியாளர்களுக்கும் நடுவே சண்டை முற்றியது. நாட்டின் கிழக்கு பகுதியெங்கும் நடந்த உக்கிர சண்டை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர நேர்ந்தது.

கைக்குலுக்கல்
புகைப்படக்காரர் – ஜெர்ரி மோரிசன்

2011-ம் ஆண்டு அமெரிக்க படைகள் இராக்கிலிருந்து வெளியேறுவதாக புது பாதுகாப்பு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ராபர்ட் கேட்ஸ் பாக்தாத்தில் உள்ள கேம்ப் விக்டரியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது நகரத்தை மண் சூறாவளி முற்றுக்கையிட்டுருந்தது.

தாயும் சேயும்
புகைப்படக்காரர் – அலெக்சாண்டரா வெசினா

ஆப்கானிஸ்தானில் உள்ள படாகஸ்தான் மாகணத்தில் வாழும் சயாமய் என்னும் பெண் தன் ஒரு மாத குழந்தைக்கு தாய்பால் கொடுக்கிறார். வளர்ச்சியின் நிழல் படியாத இந்த மலை பிரதேசதம் தான் உலகத்திலே அதிக பிரசவ மரணங்கள் நடக்கும் இடமாக விளங்குகிறது.

மேலதிக விவரங்களுக்குடைம் இதழில் வெளிவந்த தொகுப்பு


Comments
7 responses to “டைம் இதழின் ‘2008-ம் ஆண்டின் சிறந்த பத்து புகைப்படங்கள்’”
  1. வடுவூர் குமார் Avatar
    வடுவூர் குமார்

    அருமையான படங்கள்.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  2. யோகன் பாரிஸ்(Johan-Paris) Avatar
    யோகன் பாரிஸ்(Johan-Paris)

    கடைசிப் படம் அருமை. அன்னை மேரியும் பாலன் யேசுவும் பழைய ஓவியத்திலுள்ளது போல்;தாய்மையின் பூரிப்பு…இத்தனை இடரிலும்..படப்பிடித்தவர்;.;ரசனைமிக்கவர்

  3. வேலன். Avatar
    வேலன்.

    படங்கள் அத்தனையும் அருமை. தகவலுக்கு நன்றி…வாழ்க வளமுடன்,வேலன்.

  4. சின்ன அம்மிணி Avatar
    சின்ன அம்மிணி

    அருமையான படங்கள்

  5. butterfly Surya Avatar
    butterfly Surya

    அருமையான படங்கள்.நன்றி.வாழ்த்துக்கள்

  6. ஜெ.பாலா Avatar
    ஜெ.பாலா

    படங்களின் பகிர்வுக்கு நன்றி சாய்..
    மிகச் சிறந்த படங்கள்…
    தாய்மையின் பூரிப்பும், பூகம்ப இடிபாடு மீட்புப் படமும் பல ஆயிரம் வார்த்தைகளின் வெளிப்பாடு.

  7. Sai Ram Avatar

    நன்றி ஜெ.பாலா! பல நாள் கழித்து இந்த நல்ல பதிவை நினைவூட்டியதற்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.