தமிழ் வலைப்பதிவில் பணம் சம்பாதிக்க முடியாது என்பது 99.99% உண்மை. அப்படியானால் தமிழ் வலைப்பதிவர்களின் நோக்கம் தான் என்ன? ஒரு தமிழ் வாத்தியார் தனது சிற்றூரில், அங்கு நூலகத்தில் தான் வழக்கமாக பங்கேற்கும் வாராந்திர இலக்கிய நட்பு கூட்டத்தில், வலைப்பதிவில் எழுதுவதால் தனக்கு தனி மரியாதை கிடைக்கிறது என கருதுகிறார். எழுத்தாளர்கள் பலர் இப்போது வலைப்பதிவு மீது கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்கள். வீட்டிற்கும் உறவினர்களுக்கும் தெரியாமல் எப்போதாவது கவிதைகளை தன் நோட் புக்கில் எழுதி வந்த நண்பர் ஒருவர் அதனை பத்திரிக்கைகளில் பதிக்கும் ஆர்வமில்லாமல் இருந்தார். அவர் இப்போது தனது கவிதைகளை அரங்கேற்றுவதற்கு வலைப்பதிவினை சிறந்த இடமாக இனம் கண்டு கொண்டிருக்கிறார். இப்படி பற்பல விஷயங்கள் பார்க்கிறோம்.
- வலைப்பதிவு என்றாலே journal மாதிரி தினசரி தனது கருத்துகளை நான்கு பாராக்களில் முடக்கி எழுத வேண்டும் என்கிற கருத்து சரியா? தவறா? அப்படி எழுதுபவர்கள் தான் வலைப்பதிவர் என்கிற சரியான இலக்கணத்திற்குள் வருவார்களா?
- வலைப்பதிவில் எழுதுபவை அன்றைக்கு படிக்க உகந்ததாக அன்றைய ஹாட் டாபிக்காக இருந்தால் அப்போது படிப்பவர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பிற்காலத்தில் அந்த பதிவுகள் யாருக்கும் சுவாரஸ்யம் தராமல் அல்லவா போகும். பிறந்தவுடனே புகழ் பெற்று குறுகிய காலத்தில் மாண்டு போதல் தான் வலைப்பதிவின் குணாதிசயமா?
நண்பர்களே இப்படி இந்த விஷயத்தை பற்றி ரவியின் மன்றத்தில் ஒரு விவாதம் தொடங்கி உள்ளேன். அங்கு வந்து விவாதத்தில் பங்கு பெறுங்களேன்.
தொடர்புடைய இடுகை: வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?
Leave a Reply