Tag: வலைப்பதிவர்

  • இதற்கு முன் பதித்த தமிழ் வலைப்பதிவுலகம் என்கிற இடுகையின் தொடர்ச்சியாக இதனை வாசிக்கவும். 🙂

    தமிழ் வலைப்பதிவுலகம் என்கிற என் இடுகையை படித்து நிறைய பேர் என்னை இமெயிலிலும் போனிலும் நேரிலும் தொடர்பு கொண்டு நீங்கள் எப்படி வலைப்பதிவுகளின் தரத்தினை உயர்த்தி பேசுனீர்கள் என்று தங்கள் ஆச்சரியத்தினை தெரிவித்தார்கள். (இப்படியாக பொய் சொல்ல விரும்பவில்லை.) உண்மையில் அதற்கு கருத்து சொன்ன ஒரே ஆள் நமது ரவிசங்கர் தாம்.

     

    தமிழ் வலைப்பதிவுகளின் தரம் பற்றி இங்கு நான் பேச வரவில்லை. தரம் என்று ஒன்று உண்டு என்றும் அது உலகம் முழுக்க ஒரே அளவுகோளினை கொண்டது என்றும் நான் நம்புவதை விட்டு பல காலமாகிறது. ஆனால் நான் சொல்ல வருவது வலைப்பதிவுகள் ஏற்படுத்தும் புது வகையான வாசிப்பனுபவம் பற்றியது. இது எதன் காரணமாய் ஏற்படுகிறது என யோசித்தால் வலைப்பதிவுகளில் உள்ள ‘நான்‘ தான் இதன் காரணியாக இருக்கும் என நினைக்கிறேன்.… …மேலும் வாசிக்க


  • கூகுள் ரீடரில் தமிழ் வலைப்பதிவுகளை ஒட்டுமொத்தமாய் வாசிக்கும் அனுபவம் என்னுடைய நீண்ட கால வாசிப்பனுபவத்தை குடிக்காரன் மனநிலைக்குதள்ளி விட்டது என்று சொல்லலாம். பதினொரு வருடங்களுக்கு முன்பு ஆறாம்திணை இணைய இதழில் பணிபுரிந்த காலம் தொடங்கி இன்று வரை தமிழ் எழுத்துகள் இணையத்தில் வலம் வருவதை பார்த்து வந்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் வலைப்பதிவுகள் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்து இருக்கின்றன என்று தோன்றுகிறது. சிலர் ஆரம்பித்த ஜோரில் தங்கள் வலைப்பதிவினை கை கழுவி போனாலும் நிறைய பேர் தங்களது வலைப்பதிவை சீரியஸான விஷயமாக எடுத்து கொண்டு அவ்வபோதாவது எழுத தான் செய்கிறார்கள்.

    எழுதுவது என்றால் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என்று இதை வகைப்படுத்தி விட முடிவதில்லை. குமுதம், ஆனந்த விகடன் மற்றும் அதன் பிரதி பத்திரிக்கைகள் எல்லாவற்றிலும் இருக்கும் சரக்கினை விட இன்றைய தமிழ்கூறு வலைப்பதிவுலகம் ஆபாரமான சரக்குகளை பதித்தபடி அதுவும் ரியல் டைமில் பதித்தபடி இருக்கிறது. என்ன வேண்டும் சொல்லுங்கள், சினிமா விமர்சனங்களா?… …மேலும் வாசிக்க


  •  என்னுடைய பதிவு ஒன்று ஒரு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அதில் உள்ள 16 பிரிவுகளில் உள்ள ஒரு பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றதாகவும் அதனால் அந்த தளம் எனக்கு ஒரு பதக்கம் கொடுத்ததாகவும் அந்த பதக்கத்தை நான் என் வலைப்பதிவின் முகப்பில் மாட்டி வைத்திருப்பேன் என சில மாதங்களுக்கு முன்னால் யாராவது சொல்லியிருந்தால் நான் சிரித்திருக்கக் கூடும். எனக்கு விருது கிடைக்க போவுதா? நல்ல கதை! என்கிற மாதிரியான தன்னடக்கம் அல்ல. நான் ஒரு பரிசு பதக்கத்தை ஷோ கேஷில் வைக்க மாட்டேன் என்கிற மாதிரியான திமிர் தான்.

    ஆனால் இன்று அது தான் நடந்தது. பதக்கத்தை கொடுத்தவுடன் முதல் ஆளாய் ஓடி போய் அதை வாங்கி வந்து முகப்பில் எல்லாரும் பார்க்கிற மாதிரி வைத்த பிறகு தான் இதிலே என்ன தவறு இருக்கிறது என எண்ணம் ஓடியது. பரிசு வாங்குவதற்கு துள்ளும் மனமும், வாங்கிய பரிசினை நண்பர்களுக்கு காட்டுகிற குதூகலமும் இன்றும் என்னிடம் இருப்பது, ‘நல்ல வேளை இன்னும் மனுசனா தான் இருக்கோம்,’ என்பதை உறுதி செய்தது.… …மேலும் வாசிக்க


  • ஆச்சரியம் தான். நான் இதற்கு முன் பல முறை பல வலைப்பதிவுகளை தொடங்கி இருக்கிறேன். அவற்றிற்கு அதிகபட்ச ஆயுள் ஓரிரு தினங்கள் தாம். ஆனால் இந்த வலைப்பதிவு சற்று மாறுபட்டது. தொடங்கி ஒரு வருடமாகி விட்டது. 67 பதிவுகள் பதிந்தாயிற்று.

    தமிழ்மணத்தின் உதவியால் உடனடி பார்வையாளர்கள் கிடைத்தது தான் இந்த வலைப்பதிவு இன்றும் உயிருடன் இருப்பதற்கு முதல் காரணம். நாம் பதிவதை பலர் படிக்க வருகிறார்கள் என தெரிந்த பிறகு வலைப்பதிவு என்னுடைய வாழ்க்கையின் முக்கிய பங்காக மாறி வருகிறது.

    வலைப்பதிவு இன்ன காரணத்திற்காக இந்த வகைபட்டதாய் (genre) இருக்க வேண்டும் என தொடக்கத்திலே முடிவு செய்வது மிகவும் கஷ்டம். கவிதைகளுக்கு மட்டும் என்று நான் திட்டமிட்டது இன்று கவிதைகளை தாண்டி புனைவு மற்றும் வெவ்வேறு தலைப்புகளாக வளர்ந்து நிற்கிறது.

    இந்த வலைப்பதிவு காரணமாய் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். பள்ளிப்பருவத்தில் தொடர்பு அறுந்து போன நண்பன் ஒருவன் இந்த வலைப்பதிவு வழியாய் மீண்டும் கிடைத்தான்.… …மேலும் வாசிக்க


  • தமிழ் வலைப்பதிவில் பணம் சம்பாதிக்க முடியாது என்பது 99.99% உண்மை. அப்படியானால் தமிழ் வலைப்பதிவர்களின் நோக்கம் தான் என்ன? ஒரு தமிழ் வாத்தியார் தனது சிற்றூரில், அங்கு நூலகத்தில் தான் வழக்கமாக பங்கேற்கும் வாராந்திர இலக்கிய நட்பு கூட்டத்தில், வலைப்பதிவில் எழுதுவதால் தனக்கு தனி மரியாதை கிடைக்கிறது என கருதுகிறார். எழுத்தாளர்கள் பலர் இப்போது வலைப்பதிவு மீது கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்கள். வீட்டிற்கும் உறவினர்களுக்கும் தெரியாமல் எப்போதாவது கவிதைகளை தன் நோட் புக்கில் எழுதி வந்த நண்பர் ஒருவர் அதனை பத்திரிக்கைகளில் பதிக்கும் ஆர்வமில்லாமல் இருந்தார். அவர் இப்போது தனது கவிதைகளை அரங்கேற்றுவதற்கு வலைப்பதிவினை சிறந்த இடமாக இனம் கண்டு கொண்டிருக்கிறார். இப்படி பற்பல விஷயங்கள் பார்க்கிறோம்.

    • வலைப்பதிவு என்றாலே journal மாதிரி தினசரி தனது கருத்துகளை நான்கு பாராக்களில் முடக்கி எழுத வேண்டும் என்கிற கருத்து சரியா? தவறா? அப்படி எழுதுபவர்கள் தான் வலைப்பதிவர் என்கிற சரியான இலக்கணத்திற்குள் வருவார்களா?
    • வலைப்பதிவில் எழுதுபவை அன்றைக்கு படிக்க உகந்ததாக அன்றைய ஹாட் டாபிக்காக இருந்தால் அப்போது படிப்பவர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பிற்காலத்தில் அந்த பதிவுகள் யாருக்கும் சுவாரஸ்யம் தராமல் அல்லவா போகும்.
    …மேலும் வாசிக்க

  • டாக்ஸிக் ரைட்டர் என்றொரு வலைப்பதிவர். இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இவர் பிளாக்கரில் உள்ள தன் வலைப்பதிவில் மும்பையை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தை பற்றி சில குற்றச்சாட்டுகளை எழுதியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அந்த கட்டுமான நிறுவனத்தால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அந்த வலைப்பதிவருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பதாக முடிவு செய்தார்கள். இதற்காக அந்த வலைப்பதிவர் யார் என்கிற தகவல்களை கூகுள் நிறுவனம் தங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். நீதிபதிகளும் அந்த தகவல்களை சொல்லும்படி கூகுள் நிறுவனத்திற்கு தற்போது உத்தரவிட்டு இருக்கிறார்கள். இப்போது டாக்ஸிக் ரைட்டரின் வலைப்பதிவு ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தால் அழிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். வலைப்பதிவு அழிக்கபட்டது பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேலில் இதே போன்று ஒரு வழக்கு நடந்தது. ஒரு வலைப்பதிவர் தனது ஊர் முனசிபல் கவுன்சில் தேர்தலுக்கு நிற்பவர்களை பற்றிய குற்றச்சாட்டுகளை தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்.… …மேலும் வாசிக்க