முதல்வர் பதவிக்காக சிரஞ்சீவி நடத்தும் பிரம்மாண்ட யாகம்

கடந்த ஞாயிற்று கிழமை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது அரசியல் பிரவேசத்தை முறைப்படி அறிவித்தார். சில மாதங்களாகவே ஆந்திராவில் எதிர்பார்க்கபட்ட விஷயம் என்றாலும், சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் பலவிதமான எதிர்பார்ப்புகளை தூண்டியிருக்கிறது. அடுத்த தேர்தலிலே முதலமைச்சர் ஆகுமளவு அவரது புகழ் இல்லையென்றாலும் தேர்தல் முடிவுகளில் அவரால் ஓரளவு தாக்கத்தை உண்டு செய்ய இயலும் என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை.

சிரஞ்சீவி எதற்காக அரசியலில் பிரவேசிக்கிறார்?

மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் அரசியலில் நுழைவதாக சிரஞ்சீவி சொல்லியிருக்கிறார். மேலும் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது தன்னால் ஆந்திர அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

சிரஞ்சீவியை கவனித்து வரும் சிலருக்கு சிரஞ்சீவியின் அரசியல் ஆசைக்கு ஜோதிடமும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் அறிவார்கள். நடிகர் சிரஞ்சீவிக்கு பல காலமாகவே கணிதம் மற்றும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உண்டு. அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் உருவான பிறகு அவர் மக்களது பிரச்சனைகளுக்காக நேரம் ஒதுக்கியதை விட ராமேஸ்வரத்தில், திருப்பதியில் ஹோமம், யாகம் என்று தான் அதிக நேரம் ஒதுக்கியிருக்கிறார் என சொல்கிறார்கள் விமர்சகர்கள்.

சிரஞ்சீவியின் ஜாதகத்தின்படி என்னென்ன யாகங்களை நடத்தினால் அவருக்கு ராஜ யோகம் கிட்டும் (முதலமைச்சர் பதவி தாங்க!) என ஜோதிடர்கள் பட்டியலிட்டு கொடுத்து இருக்கிறார்கள் போலும்.

வருகிற 21, 22 தேதிகளில் சிரஞ்சீவி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் ஒன்று நடத்தவுள்ளார். சண்டி ஹோமம் என்று இந்த யாகத்திற்கு பெயர். இதனை நடத்துபவருக்கு ராஜ யோகம் வாய்க்கும் என்பது நம்பிக்கை. 50 பூசாரிகள் நடத்த போகிற இந்த பிரம்மாண்ட யாகம் அவசியமான ஒன்று தானா என்று நாம் கேளவி கேட்பதற்கு முன் இன்னொரு கூடுதல் தகவல். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் இதே போன்ற சண்டி ஹோமம் நடத்தியிருப்பவர்கள் பெயர்கள் இதோ. முன்னாள் பிரதமர் வாஜ்பேய், பிரதமர் கனவில் இருக்கும் அத்வானி மற்றும் கம்ப்யூட்டர் இந்தியாவினை உருவாக்க முனைந்தவர் என புகழப்படுகிற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.


Comments
2 responses to “முதல்வர் பதவிக்காக சிரஞ்சீவி நடத்தும் பிரம்மாண்ட யாகம்”
  1. சித்தூர்.எஸ்.முருகேசன் Avatar
    சித்தூர்.எஸ்.முருகேசன்

    சிரஞ்சீவி அரசியலில் குதித்தார் என்று எவரும் செய்தி வெளியிட முடியாது, காரணம் அவர் மீன மேஷம் பார்த்து குதிப்பதற்குள் இழுக்கப்பட்டுவிட்டார். சிரஞ்சீவி என்ற சாதனையாளரின் கிராஃபை 4 காலகட்டங்களாக பிரிக்கலாம்.முதல் கட்டம்: என்.டி.ஆர்.,ஏ.என்.ஆர் போன்ற ஜாம்பவான் கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் திரைப்பட கல்வி நிறுவனத்தில் பாடம் படித்து போராடி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த கால கட்டம்.2 ஆவது காலகட்டம்: அந்த காலத்து அரசர்கள் பாணியில் புகழ் பெற்ற தெலுங்கு திரையுலக காமெடியன் அல்லு ராமலிங்கையாவின் மகளை மணந்து கொண்டு தனக்கென்று ஒரு லாபி ஏற்படுத்திக் கொண்டு விட்ட காலகட்டம்.3.என்.டி. ஆர். அரசியலில் குதித்ததனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியபடி அவரது தயாரிப்பாளர்கள்,அவரது இயக்குனர்களின்,அவரது ரசிகர்களின் ஆதரவை பெற்ற கால கட்டம்.4.கால,தேச,வர்த்தமானங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாது இனி திரை வாழ்வுக்கு மங்களம் தான் என்று முடிவு கட்டி சினை பன்றி போல் தயாராகி, 5 தங்கைகளுக்கு அண்ணனாக நடிக்க முன் வந்து விட்ட கட்டம். வெறுமனே அண்ணனாக நடித்தாலும் பரவாயில்லை , வெற்றியே ஒரே நோக்கமாய் இரட்டை அர்த்த வசனங்கள்,உவ்வே காட்சிகளில் நடித்த காலமும் உண்டு. உதாரணத்திற்கு ஒரே ஒரு காட்சியை பார்ப்போம். பழம்பெரும் பார்ப்பன நடிகை லட்சுமி மாமியார். அவருக்கு இரண்டு மகள்கள்.சிரஞ்சீவிதான் மாப்பிள்ளை. திடீர் என்று பவர் கட்டாகிறது. மீண்டும் பவர் வரும்போது 2 மகள்களுடன் ,லட்சுமியும் ஆடை கலைந்து,நிலை குலைந்து தோன்றுவார். காரணம் சிரஞ்சீவியின் ஆண்மை அப்படிப்பட்டதாம்.கூடப்பிறந்த தம்பிக்கு நல்ல வழி காட்ட துப்பில்லாமல் ,அவர் கட்டிய மனைவியை நட்டாற்றில் விட்டு விட்டு வேறு நடிகையுடன் சேர்ந்து வாழுகிறார்.பெற்ற‌ ம‌க‌ளின் ம‌ன‌தில் என்ன‌ இருக்கிறது என்று முன் கூட்டி அறிய‌ துப்பில்லை அவ‌ர் தில்லி வ‌ழ‌க்க‌றிஞ‌ர் உத‌வியுட‌ன் காத‌ல் க‌டிம‌ண‌ம் புரிகிறார்.இவ‌ர‌து ட்ர‌ஸ்டுக்கு ர‌த்த‌தான‌ம் கொடுத்த‌ ர‌சிக‌னுட‌ன் சிர‌ஞ்சீவி போட்டோ பிடித்து கொள்வார்.அந்த‌ போட்டோ பிர‌தியை பெற‌ ரூ.50 செலுத்த‌ வேண்டும். என்ன‌ங்க‌டா இது தெலுங்கு தேச‌த்துக்கு பிடித்த‌ கிர‌க‌ச்சார‌ம். வீட்டு சோற்றை(த‌ண்ட‌) தின்று கூத்தாடி பெய‌ர் வாங்க‌ அவ‌ன் ட்ர‌ஸ்டுக்கு ர‌த்த‌ம் கொடுத்து ,அவ‌னுட‌ன் பிடித்த‌ போட்டோவை பெற‌ ரூ.50 செலுத்தி ..இதெல்லாம் தேவையா?எவ‌னோ ர‌சிக‌ன் ஏல‌ச் சீட்டு க‌ம்பெனியின் லொள்ளு தாங்க‌ முடியாது த‌ற்கொலை செய்கிறான். அந்த‌ ர‌சிக‌னின் இறுதிச் ச‌ட‌ங்குக்கு சிர‌ஞ்சீவியின் த‌ம்பி போகிறார்.சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு சிர‌ஞ்சீவியின் அபிமான‌ டைர‌க்ட‌ர் விஜ‌ய‌ பாப்பினீடு ப‌த்திரிக்கைக‌ளில் ஒரு விள‌ம்ப‌ர‌ம் கொடுத்தார். சிர‌ஞ்சீவியின் ப‌ட‌த்துக்கு அவ‌ர‌து ர‌சிக‌ர்க‌ள் க‌தை எழுத‌ வேண்டுமாம். போட்டி முடிந்த‌து. க‌தை தேர்வான‌து.வ‌ருட‌ம் ப‌ல‌வான‌து. ப‌ட‌ம் ம‌ற்றும் வெளிவ‌ர‌வில்லை.எங்க‌ள் ஊர் ப‌ஸ் அதிப‌ர்,ப‌ழ‌ம் பெரும் த‌யாரிப்பாள‌ர் ஷ‌ண்முக‌ம் செட்டியார் வ‌யிற்றெரிச்ச‌லை சிர‌ஞ்சீவி எப்ப‌டியெல்லாம் கொட்டிக் கொண்டார் என்ப‌தை வேறு ஒரு ப‌திவில் சொல்கிறேன்.இந்த‌ பெரிய‌ ம‌னித‌ர் அர‌சிய‌லில் குதிப்பாராம். முத‌ல்வராவாராம். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் வாயில் விர‌ல் போட்டு கொண்டு வேடிக்கை பார்ப்பார்க‌ளாம்.

  2. Sai Ram Avatar

    சித்தூர் முருகேசன், உங்களது விரிவான ஆழமான கருத்துகளுக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.