“எங்களுக்கு எல்லா அரசியல்வாதிகளோட, நடிகர்களோட பிறந்த நாள் நல்லா நினைவிருக்கு. மறக்காம அன்னிக்கு ஏரியாவுல எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்து கொண்டாடுவோம். ஆனா எங்க பிறந்த நாள் எங்களுக்கு தெரியாது.”இது ஒரு தமிழ் படத்துல கேட்ட வசனம். தமிழக சமூகங்கள் பலவற்றிற்கு பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பதும் கொண்டாடுவதும் சமீப காலமாக வந்த பழக்கம். இதனால் தான் பள்ளிக்கூடங்களில் முதல்முறையாக தங்கள் மகன், மகள்களை சேர்க்க செல்லும் பெற்றோர் அவர்களது பிறந்த நாளை சொல்ல திணறுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் இது அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை என்பதால் இதற்கு ஒரு தீர்வு வைத்திருந்தார்கள். அது தான் கண்ணை மூடியபடி அப்படி அப்பாவியாக வந்து நிற்கும் மாணவர்களுக்கு வயது ஐந்து, பிறந்த நாள் ஜுன் 6 என குறித்து கொள்வது. இந்த தேதியே பள்ளிக்கூட காலண்டருக்கு ஏற்ற பிறந்த நாள்.
எனக்கு தெரிந்து பலர் இந்த ஜுன் 6-யன்று தங்களது மறந்து போன பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இது அறியாமையா? அல்லது திணிக்கபட்ட பழக்கமா?
எனது அம்மாவிற்கும் இன்று தான் பிறந்த நாள்.
Leave a Reply