ஒரு மீட்டலில் இசைத்து விடுகிற வீணை தான்
எனினும் ஏழு மலைத் தாண்டி ஏழு கடல் தாண்டி
அலைந்து திரிந்தாலும் அதன் பசி அடங்குவதில்லை.
அதன் நிறம் சூரிய கிரகணத்தைப் போன்றது.
மூழ்கி போனவனின் வாசனை அதற்கு.
குரலோ இரவில் பதற்றம் ஏற்படுத்தும்
கொடூர வனவிலங்குடைய கர்ஜனை.
தொட்டால் பனிக்கட்டி; தொடாவிட்டால் வெயில்.
சுமையா?
இயந்திரமா?
வெறும் மாயை தானோ?
நான் தானா?
இன்னொரு ‘நானா?’
ஆதி ரகசிய செய்தியா?
கடவுளோ?
சைத்தானோ?
Leave a Reply