Month: October 2010


  • கறுப்பு எறும்புகள்.
    முனைந்து கோலம் போடும் பெண்ணைப் போல
    சுவற்றில் வரிசை கட்டி கொண்டிருக்கின்றன.
    எறும்புகளைப் பார்ப்பதும்
    பிறகு
    அலுவலக வெள்ளைப் பலகையை பார்ப்பதுமாய் இருக்கிறேன்.
    இன்று எனது கணவரின் பிறந்த நாள்.
    இன்றாவது சீக்கிரம் போக வேண்டுமென நினைத்திருந்த போது தான்
    வழக்கம் போல ஒரு குழப்பம்.

    அவசரம்! எமர்ஜென்சி!

    அலுவலக வெள்ளைப் பலகையை
    எறும்புகள் மொய்த்திருப்பது போல இருக்கின்றன
    அதில் எழுதப்பட்டிருக்கும்
    என்னுடைய வேலைகள் மற்றும் கடமைகள்.

    கடவுள் இன்றும் லேட் தான்.
    வந்தவர் மதியத்திற்கு மேல்
    எங்கு போனார் என்று தெரியவில்லை.
    செல்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருக்கிறது.
    மிக அவசரமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

    கணவரிடம் என்ன பொய் சொல்வது என குழம்பியபடி அமர்ந்திருக்கிறேன்.
    இன்னும் நானூறு வருடங்கள் உழைத்தாலும் கூட
    இந்த மாத டார்க்கெட்டை
    என்னால் சாதிக்க முடியுமா என்று தெரியவில்லை.

    முதுகு வலி!

    நான் அமர்ந்திருக்கும் பத்தாவது மாடி அறையின்
    ஜன்னலுக்கு வெளியே
    ரோஜா செடிகள் போல
    ஒரு பிரம்மாண்ட மரத்தின் உச்சி தெரிகிறது.
    …மேலும் வாசிக்க


  • சாதி என்னும் சுவர்

    உத்தபுரத்தில் தலித் மக்கள் தாங்கள் வசிக்குமிடம் அருகே வரக்கூடாது என சாதி இந்துகள் சுவர் எழுப்பி அதன் மேலே மின்சாரம் பாயும் கம்பிகளையும் வைத்தது 21-ம் நூற்றாண்டின் உச்சகட்ட அவலம். (சுட்டி: ஆயிரக்கணக்கான உத்தபுரங்கள்) இந்த சுவரை இடித்த அரசாங்கம் கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட சாதி இந்துகளுக்கும் தலித் மக்களுக்கும் தனி தனி பள்ளிக்கூடம், தனி ரேஷன் கடை என புது தீண்டாமை பழக்கத்தினை உருவாக்கியது. காவல்துறையினரே தலித் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து (கலவரத்தினை அடக்க என சொல்கிறார்கள்) டீவி, சாமான்கள் எல்லாம் உடைத்தார்கள். கலவரத்திற்கு காரணமானவர்கள் என கைது செய்யபட்டவர்களில் அப்போது பிரசவம் முடிந்து மூன்று நாளே ஆன ஒரு பெண், எழுபது வயது முதிய பெண் உட்பட நூற்றுக்கணக்கானோர் இருந்தார்கள். (சுட்டி: உத்தபுரமும் காம்ரேடுகளும்)

    மற்றொரு உத்தபுரம்

    கிருஷ்ணகிரி அருகே அகரம் என்கிற கிராமத்தில் சாதி இந்துகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குள் தலித் மக்கள் வரக்கூடாது என வேலி அமைத்த செய்தி சமீபத்தில் வெளியானது.… …மேலும் வாசிக்க


  • சிலி சுரங்க மீட்புலகத்தில் எந்த ஒரு சினிமாவிற்கும் இவ்வளவு கண்ணீர் மழை கிடைத்திருக்காது. ஆனால் அது சினிமா அல்ல. கண் எதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவம். உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் அந்த நம்ப முடியாத நிகழ்வை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தார்கள் நூறு கோடி மக்கள்.

    கடவுள் மீண்டும் ஒரு முறை அதிசயத்தை நிகழ்த்தி காட்டி விட்டார்,” என்றார் ஒரு கிருஸ்துவ போதகர்.

    “ஒரு சைக்கிள் சக்கரத்தின் வட்டம் போல தான் இருக்கிறது,” என்றார் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர். அவர் சொன்னது அங்கு நிலத்தில் இருந்த சிறு குழியை தான். அது குழி அல்ல. நிலத்திற்கு அடியில் செங்குத்தாய் பாதாளத்தை நோக்கி நீண்டிருக்கும் உதவித்தடம் அது. அந்த பாதாள குழியில் இருந்து ஒரு சிறு ராக்கெட் போன்ற கூண்டு ஒன்று கொஞ்சம் கொஞ்சமாய் நிலத்திலிருந்து மேல் எழுகிறது. காத்திருக்கும் மக்களிடம் இருந்து கைத்தட்டல் சத்தம்.

    “சிலி, சிலி,” என அவர்கள் பாடுகிறார்கள். லிப்ட் போல தோற்றமளிக்கும் அந்த கூண்டில் இருந்து ஒரு மனிதன் வெளிபடுகிறான்.… …மேலும் வாசிக்க


  • அவர்களில் பெரும்பாலனோருக்கு
    என்னுடைய மகன் வயது தான் இருக்கும்.
    அரும்பு மீசை,
    பள்ளிக்கூடத்து சிரிப்பு,
    கண்களுக்குள் ஒளிந்திருக்கும் குறும்புத்தனம்,
    தூக்கமில்லாத கண்கள் மற்றும்
    இனம் புரியா கோபம்.
    அவர்களுக்குள் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான்.

    அன்றொரு நாள் கனவில்
    இவர்களை நானே பிரசவித்ததாய் உணர்ந்தேன்.
    எதிரி கொடி பறக்கும் ஆர்மி கேப்பில்
    அவ்வபோது எழும் ஆரவாரத்தில்
    என்றோ இறந்து போன எனது மகனின் குரலும் சேர்ந்தே
    எனக்கு கேட்கிறது.
    எனது ஜன்னலில் இருந்து தெருவில் கடந்து போகும்
    ஒவ்வொரு சிறுவனின் முகத்தையும்
    உற்று நோக்கியபடி கழிகின்றன எனது பகற்பொழுதுகள்.
    அந்த பேய் நிற பழுப்பு யூனிபார்மினை கழற்றி எறிந்தபிறகு
    அவர்களது வலிமையான தோள்களில் சாய்ந்து கொள்ள துடிக்கும்
    எனது மனம்.

    நாய் குட்டியை வருடுவது போல
    அந்த துப்பாக்கி எமனை வருடியபடி இருப்பார்கள்.
    மீசையை முறுக்குவது போல
    அவ்வபோது அதை தோளில் சுமப்பதும்
    பிறகு கழட்டுவதுமாக இருப்பார்கள்.
    அந்த பூட்ஸ் காலில் ஒட்டியிருக்கும் மணல்
    எங்கிருந்தெல்லாம் வந்திருக்கும் என யோசித்திருப்பேன்.
    …மேலும் வாசிக்க


  • வன்முறை என்பது மனிதனோடு உடன் பிறந்ததாய் இருக்கிறது, பயத்தை போலவே.

    துணிச்சல் மிகுந்தவனிடம் ஒளிந்து இருக்கிறது அபரிதமான பயம். பயந்தவனாய் வாழ்பவனிடமும் பதுங்கி இருக்கிறது அளவிற்கு அதிகமான வன்மம்.

    காட்டில் வாழும் மிருகங்களில் எது வாழ தகுதியுடையவையோ அவை வாழ்கின்றன. மற்றவை காணாமல் போகின்றன. அந்த மிருகங்களில் ஒருவன் மனிதன். அவனுடைய இரத்தத்தில் அந்த வனத்தின் நெடி இன்னும் இருக்கிறது.

    மிருகங்கள் வாழும் காட்டிற்கும் மனிதர்கள் வாழும் நகரங்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படை நியதி இன்னும் அதே தான். தன்னில் வலியது பிழைக்கும். ஒரு சிறு திருத்தம். இங்கே வலிமை என்பது உடல் வலிமை மட்டுமல்ல.

    காந்தி ஹிட்லருக்கு எதிராக அகிம்சை போராட்டம் நடத்தி இருந்தால் ஜெயித்து இருப்பாரா? காந்திக்கு முன்பு அகிம்சை போராட்டங்களே கிடையாதா? ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட முடியுமா? அப்படி காட்டியவர்கள் தான் எத்தனை பேர்?

    உடலெங்கும் இரணங்களும், ஈக்கள் மொய்க்கும் புண்களும், சீழ் வழியும் உடலை தொட்டு சேவை செய்தவர் அன்னை தெரசா.… …மேலும் வாசிக்க