Tag: eelam
-
வருகிற தேர்தலில் ஈழப்பிரச்சனை பிரதான தாக்கம் ஏற்படுத்துமா?
வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஈழப்பிரச்சனை தாக்கம் ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் பிரதான தாக்கம் ஏற்படுத்துமா என்பது தான் கேள்வி. இந்திரா காந்தி இறந்த போது எழுந்த அனுதாப அலை, ஒரு சமயம் ஜெயலலிதா அரசின் மீதான அதிருப்தியால் அவரது கட்சியை படுதோல்வியை சந்திக்க வைத்த பொது அதிருப்தி இது போன்று ஈழப்பிரச்சனையும் வருகிற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? தமிழக மக்கள் ஈழப்பிரச்சனை பற்றிய உணர்வுடன் இருந்தாலும், இந்த பிரச்சனையில் அதிமுக, திமுக ஏன் தேமுதிக…
-
தமிழினி மெல்ல சாகும்
எந்த ஒரு செயல் நடப்பதற்கு முன்பும் அது நடக்க போகிறது என்கிற அறிவிப்பு காட்டுகிற விதமான விஷயங்கள் நடப்பதுண்டு. ஆங்கிலத்தில் சுருக்கமாக Symptoms. தமிழ் இனத்திற்கும், தமிழ் பாரம்பரியத்திற்குமான சாவு மணி பல வருடங்களுக்கு முன்னாலே அடிக்கபட்டாலும் அதன் சாவின் முன்னோட்டம் இப்போது ஈழத்தில் அடித்து வீழ்த்தப்படும் அப்பாவி தமிழ் மக்களின் சாவுகளாலும் அதனை தொடர்ந்து எழும் தமிழ் மக்களின் மௌனத்தாலும் தெளிவாக தெரிகிறது. தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது கௌரவம், ஆங்கிலத்தில் நமது பிள்ளைகளை படிக்க…
-
இலங்கை கிழக்கு மாகாணத்தில் கருணா படைகளால் மனித உரிமை மீறல் – பிரபல மனித உரிமை கழகம் பகிரங்கம்
உலகளவில் பிரபலமான தன்னார்வ தொண்டு நிறுவனம் ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் (HRW – Human Rights watch.) சர்வதேச அளவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தைரியமாய் பகிரங்கபடுத்துவதில் இந்த தன்னார்வ நிறுவனம் பெயர் பெற்றது. சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள கிழக்கு மாகாண அரசாங்கத்தை குற்றம் சாட்டி, அங்கு கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக தெரிவித்து இருக்கிறது. இலங்கையின் கிழக்கு மாகாணம் தற்போது ராஜ பக்சே அரசின் கட்டுபாட்டில் உள்ளது.…
-
நாம் தமிழரா? இந்தியரா?
இலங்கையில் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் இன்று நேற்றல்ல அது அரை நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் ஒரு கொடூரம். இலங்கை அரசாங்கமே தலைமை தாங்கி நடத்தும் இந்த கொடூரத்திற்கு லட்சக்கணக்கில் தமிழர்கள் மடிந்திருக்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் இந்த தமிழின ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உலகம் முழுவதும் தமிழர்கள் எதிர்ப்பு குரல்களும் கண்டனங்களும் பல காலமாக தெரிவித்து வருகிறார்கள். இந்த தமிழ் ஆதரவு போக்கில் ராஜீவ் காந்தி படுகொலை ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. விடுதலைபுலிகள் அமைப்பு…