Tag: நாடாளுமன்ற தேர்தல் 2009
-
நம்ம தேர்தல் முறை சரியான முறை தானா?
ஒரு தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அதில் தேர்தலன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 என்று வைத்து கொள்ளுங்கள். இதில் 24 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஜெயித்தவராக அறிவிக்கபடுகிறார். அவரே அந்த நூறு பேர் மற்றும் அந்த தொகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஐம்பது பேர்களின் பிரதிநிதியாக மாறி போகிறார். உண்மையில் அந்த 24 வாக்குகள் பெற்ற நபர் பிரதிநிதி ஆவது நியாயம் தானா?
-
வோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?
அரசியல் கட்சிகள் பெரும்பாலும் யாராவது ஒருவர் கட்டுபாட்டில் இயங்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டன. உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாம் கேலி கூத்தாகி விட்டன. அரசியலில் ஆர்வமுள்ள தகுதியான ஓர் இளைஞர் பணம் செல்வாக்கு எதுவுமின்றி இன்றைய பெருங்கட்சி எதிலாவது வேட்பாளராக தேர்ந்தெடுக்கபடுவது கிட்டதட்ட முடியாத காரியம். அப்படியானால் மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்வு செய்கிறார்களா? அல்லது வெகு சில அரசியல் சக்திகள் சுட்டி காட்டும் நபர்களில் ஒருவருக்கு வோட்டு போடுகிறார்களா?
-
வருகிற தேர்தலில் ஈழப்பிரச்சனை பிரதான தாக்கம் ஏற்படுத்துமா?
வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஈழப்பிரச்சனை தாக்கம் ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் பிரதான தாக்கம் ஏற்படுத்துமா என்பது தான் கேள்வி. இந்திரா காந்தி இறந்த போது எழுந்த அனுதாப அலை, ஒரு சமயம் ஜெயலலிதா அரசின் மீதான அதிருப்தியால் அவரது கட்சியை படுதோல்வியை சந்திக்க வைத்த பொது அதிருப்தி இது போன்று ஈழப்பிரச்சனையும் வருகிற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? தமிழக மக்கள் ஈழப்பிரச்சனை பற்றிய உணர்வுடன் இருந்தாலும், இந்த பிரச்சனையில் அதிமுக, திமுக ஏன் தேமுதிக…