Tag: சமூகம்
-
மனிதர்கள் – சர்வர் சுந்தரம்
வேலை தேடி சுந்தரம் அந்த ஓட்டலுக்கு போன போது, அந்த நிர்வாக வேலை அவனுக்கு கிடைக்கவில்லை. நான் சொன்னபடி எனக்கு வேறு எதாவது வேலை கொடுங்க என கேட்டு இருக்கிறான். சர்வர் வேலை தானிருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள். அதை செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். பட்டதாரிகளுக்கு இந்த வேலை ஒத்து வராது என்று சொன்னவுடன் அப்படியானால் இப்பவே கல்லூரி சர்டிபிகேட்களை கிழித்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறான். கிடைத்து விட்டது சர்வர் வேலை.
-
அதிகாரம் ஆணையிட்டால் மக்கள் கொல்லவும் துணிவார்கள் – ஆய்வு முடிவு
நமக்கு தெரிந்த தகவல் தான். ஆனால் ஆராய்ச்சி முடிவாய் வெளிவரும் போது அதிர்ச்சியாக தானே இருக்கிறது. அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ள முனைவர் ஜெர்ரி பர்கர் என்பவர் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவு. இதற்கு முன்பு இதே போன்ற ஆய்வு முடிவினை 1963-ம் ஆண்டே யேல்…
-
சுதந்திர நாட்டின் மனிதர்கள்
“இவன் இருக்கானே, பள்ளிக்கூடத்துல இருந்து பாதியில ஓடி வந்துட்டான். வயல்ல அப்பா கூட வேலை செய்யுடான்னா முடியாதுன்னு சொல்லிட்டு தறுதலையா திரியறான். சிகரெட், தண்ணீ எல்லாம் பழக்கமும் உண்டு. நம்ம ஊர்ல தான் தெரியுமே இராத்திரியாச்சுன்னா வயசானவங்கள்ல இருந்து எட்டாவது படிக்கிற பொடிசுங்க வரை அத்தனை ஆம்பிள்ளைகளும் சாராய கடை பக்கம் தான் நிப்பாங்க. இவங்க அம்மா பொறுத்து பொறுத்து பாத்துட்டு விட்டுட்டா. இப்பல்லாம் வீட்டுலயே ஃபிரெண்ட்ஸோட சாராயம் குடிக்கிறான்.”
-
மனிதர்கள் – பணமில்லாதவன் சாகட்டும்
அரசு மருத்துவமனையில் குறைவான எண்ணிக்கையிலே வெண்டிலேட்டர் இருந்தன. அதற்கும் ஏகப்பட்ட டிமாண்ட். இரண்டு மூன்று நாட்கள் அரசு மருத்துவமனை டீன் வரை பேசியும் வெண்டிலேட்டர் கிடைக்கும் என உறுதி கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ சிபாரிசு இருந்தால் கூட வெண்டிலேட்டர் கிடைப்பது உத்தரவாதமல்ல. வெண்டிலேட்டர் இல்லாவிட்டால் நண்பரின் தந்தை உயிர் உடனே பிரிய கூடும் என்கிற ஆபத்து இருந்தது.
-
நிலத்தின் மீதான ஆசை – மத்திய வர்க்கம் உண்டாக்கும் மனிதர்களற்ற நகரங்கள்!
அரக்கோணம் போகும் வழியில் ரெயில் ஜன்னல் வழியாக நீங்கள் அந்த நகரங்களை பார்ப்பீர்கள். லட்சுமி நகர், பிரதாப் நகர் என ஒவ்வொரு காலனிக்கும் பெயர் பலகைகள் பளிச்சென வைக்கபட்டிருக்கும். அதோடு நகர் அனெக்ஸ் என கூடுதல் காலனிகளுக்கும் பெயர் பலகைகளையும் வாசிக்க முடியும். அதோடு இந்த காலனிகளுக்கு போகும் பாதையில் வழிகாட்டி பலகைகள் வைக்கபட்டிருக்கின்றன. ஒரு வித்தியாசமுண்டு. இந்த நகரங்களில் பெயர் பலகைகள் மட்டும் தான் இருக்கும். எல்லாம் காலி நிலங்கள்.
-
மனிதர்கள் – கொலை செய்யப்பட்ட ரவுடி
பாண்டிச்சேரி பஸ் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள பார்களிலோ திரியும் வெளியூர் சபல கேஸ்களை சிறுவர்கள் தங்கள் ஏரியாவிற்கு பேசி அழைத்து செல்கிறார்கள். அங்கே ஆசை வார்த்தைகளுக்கு முரணாக நிஜம் இருப்பதால் இந்த சபல கேஸ்கள் சண்டையிட தொடங்கும் போது இளைஞர்கள் உள்ளே நுழைந்து இரண்டு தட்டு தட்டி பிரச்சனையை சரி செய்வார்கள். சில சமயம் ஏரியாவிற்குள் வரும் சபல கேஸ்களை கண் மண் தெரியாமல் தாக்கி அவர்களது நகை பணத்தை கொள்ளையடித்து கொள்வதும் உண்டு. பாதிக்கபட்டவர்கள்…
-
ஜுன் 6 – இந்தியாவில் இன்று பெரும்பாலனோருக்கு பிறந்த நாள்
பள்ளிக்கூடங்களில் முதல்முறையாக தங்கள் மகன், மகள்களை சேர்க்க செல்லும் பெற்றோர் அவர்களது பிறந்த நாளை சொல்ல திணறுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் இது அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை என்பதால் இதற்கு ஒரு தீர்வு வைத்திருந்தார்கள். அது தான் கண்ணை மூடியபடி அப்படி அப்பாவியாக வந்து நிற்கும் மாணவர்களுக்கு வயது ஐந்து, பிறந்த நாள் ஜுன் 6 என குறித்து கொள்வது. இந்த தேதியே பள்ளிக்கூட காலண்டருக்கு ஏற்ற பிறந்த நாள்.
-
சபரிமலை மகரவிளக்கு மனிதர்களால் உருவாக்கபடுகிறது என ஒப்பு கொண்டது தேவஸ்தானம்
கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு மகர விளக்கு சர்ச்சைக்கு தற்போது முற்றுபுள்ளி வைத்திருக்கிறது. இந்த ஒளி தானாக உருவாகுவதில்லை, மனிதர்களால் தான் உருவாக்கபடுகிறது என வெளிபடையாக அறிவித்திருக்கிறார் கேரள தேவஸ்தான அமைச்சர் ஜி. சுதாகரன்.
-
ஆயிரக்கணக்கான உத்தபுரங்கள்
ஏறத்தாழ இரண்டாயிரம் தலித் குடும்பங்கள் வசிக்கிறார்கள். என்றாலும் இங்கு இருக்கும் சாதி இந்துக்கள் தலித்களை பல காலமாக புறக்கணித்து வந்திருக்கிறார்கள். 1990ம் ஆண்டு இந்த கிராமத்தில் சாதி ரீதியிலான மோதல் நடந்ததாக சொல்லபடுகிறது. இந்த மோதல் சம்பவத்தினை தொடர்ந்து சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கும் தலித் மக்கள் வாழும் பகுதிக்கும் இடையே 600 மீட்டர் நீள காங்ரீட் சுவர் கட்டபட்டிருக்கிறது. கிராமத்தில் உள்ள பொது வசதிகளை தலித் மக்கள் உபயோகிக்க கூடாது என்பதற்காகவே இந்த சுவர் கட்டபட்டிருக்கிறது.…