Tag: காதல்
-
அவளை முத்தமிடுவது போல என்னையும்
என்னவனின் முத்தங்கள் இப்போது சுவைப்பதே இல்லை. இமை மூடுவதும் இல்லை. அவன் கண்களின் படபடப்பினை உணர்ந்த பிறகு ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்துடனே இதழ்களை துடைத்து கொள்கிறேன்.
-
ராஜகுமாரியும் ஏழு தவளைகளும்
இளமையின் ஒளி சூழ பிரகாசிக்கிறாள் ராஜகுமாரி. கண்களில் வழிகிறது பரிவும் அன்பும். உதடுகளில் பூக்கிறது காமம்.
-
மனிதர்கள் – காதலால் பித்தன் ஆனான்
கல்லூரி காலத்தில் எங்களுக்கு ஒரு வருட ஜுனியர் இந்த பாண்டியன். அமைதியானவன். யாரிடமும் அதிகமாய் பேச மாட்டான். எங்கள் கல்லூரி தங்கும் விடுதியில் அவரவர்களுக்கு தனி தனி அறை ஒதுக்கபட்டிருந்தது. பீடி குடித்தபடி அறைக்குள்ளே கிடப்பான். எக்கசக்க புத்தகங்கள் குப்பை போல அறையில் குவிந்திருக்கும். அறையே ஒரு பெரிய குப்பை கூடை போல தானிருக்கும். அந்த குப்பை கூடையில் ஒரு குப்பை போல கட்டில் தெரியும். கட்டிலில் ஒரு பழைய அழுக்கு மெத்தையை சுருட்டி அதை தனக்கான…
-
மனிதர்கள் – காப்ரே நடன பெண்ணை மணந்தவன்
சில வருடங்களுக்கு முன்பு எல்லா ஆண்களை போலவே கல்யாணிற்கும் காதல் பிறந்தது. பிறந்த இடம் தான் கொஞ்சம் வித்தியாசமானது. மும்பையில் நண்பர்களுடன் காப்ரே நடனம் பார்க்க சென்ற கல்யாணிற்கு அங்கு நடனமாடிய தமிழ் பெண்ணை பார்த்தவுடன் காதல் பிறந்து விட்டது. அதற்கு பிறகு வெகு பிரயத்தனப்பட்டு அந்த பெண்ணின் அபிமானத்தை பெற்று, அவளது தாயிடம் நற்பெயரை பெற்று தன் குடும்பத்தின் எதிர்ப்பிற்கிடையே அந்த பெண்ணையே மணந்து கொண்டார்.