Tag: கல்வி
-
பள்ளிக்கூடங்களில் சாதி மோதல்
இந்த மாதம் மட்டும் தலித் மாணவர்கள் சக பள்ளிக்கூடத்து மாணவர்களாலே தாக்கப்படும் சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன. மதுரை அருகே உசிலம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வெளியாட்களும் இந்த மோதலில் வந்து பங்கேற்றார்களாம். கடைசியில் போலீஸ் வந்த போது, போலீஸாரைப் பார்த்து கல் எறிந்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பிறகு ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
-
பிளஸ் டூ தேர்வு என்னும் சித்ரவதை
இன்று ஒரு பள்ளியின் முதல்வர் முதலிடம் பெற்ற ஒரு மாணவன் மற்றும் மாணவி இருவரையும் தன் இருபக்கமும் நிறுத்தி கை கோர்த்து கைகளை உயர்த்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருந்தார். குத்துச் சண்டை நடுவர், போட்டியின் இறுதியில் வெற்றியாளரை கையை உயர்த்தி அறிவிப்பாரே அப்படி இருந்தது அந்த போஸ்.
-
எங்களுக்கு கல்வி வேண்டாம்
எங்களுக்கு கல்வி வேண்டாம். எங்கள் எண்ணங்களை நீங்கள் கட்டுபடுத்த வேண்டாம். பள்ளிக்கூடத்தில் வார்த்தைகளில் விஷம் ஊற்ற வேண்டாம். குழந்தைகளை தனியாக விடுங்கள். ஆசிரியர்களே குழந்தைகளை தனியாக விடுங்கள். எல்லாமே சரியாக தான் இருக்கிறது. சுவரில் அது மற்றொரு செங்கல்லாக தான் இருக்கிறது. நீங்களும் அங்கே இன்னொரு செங்கல் தான். – பிங்க் ஃபிளாயிட், ராக் இசை கலைஞர் கட்டாய கல்வி என்று ஒன்று கிடையாது. கல்வி எங்கள் அடிப்படை உரிமை என்கிற வாசகமே சரியாக இருக்கும். கல்வியுரிமை…
-
மனிதர்கள் – பிரம்பு டீச்சரம்மா
பிரம்பு டீச்சரம்மாவை பற்றி நான் இரகசியமாக போலீசிற்கு கடிதங்கள் எழுத தொடங்கினேன். ஆனால் என் கடிதங்களை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. கடிதம் எழுதியவரின் பெயர் இல்லை என்பதால் உதாசீனபடுத்தியிருப்பார்கள் என தோன்றியது. டீச்சரே தன்னை பற்றி புகார் எழுதுவதாய் கடிதம் எழுதினேன். அந்த ரகசிய கடிதங்களை பற்றி அறிந்த மற்றொரு நண்பன் என்னை இதன் காரணமாய் பல காலமாய் பிளாக் மெயில் செய்து கொண்டிருந்தான். ஓரிரவு கனவில் பள்ளி மைதானத்தில் பிரம்பு டீச்சரை ஒரு ராட்சஸ கழுகு…