Tag: இலங்கை முகாம்கள்

  • அது ஓர் அகதிகள் முகாம். சில கிலோமீட்டர் தொலைவில் அவர்களுடைய சொந்த ஊர் இருந்தது. எனினும் அவர்களால் அங்குப் போக முடியாது. சொந்த ஊரில் இருந்து வரும் தகவல்கள் திகிலூட்டுவதாக இருக்கின்றன. ஊரில் இருந்த 17 வயதிற்கு மேற்பட்ட 70 வயதிற்குட்பட்ட ஆண்களை எல்லாம் மொத்தமாய் ஓரிடத்தில் கைது செய்து வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து தப்பித்தவர்கள் அந்த இடத்தில் எப்போதும் சித்ரவதை செய்யப்படுபவர்களின் ஓலம் நிரம்பியே இருக்கிறது என்று சொன்னார்கள். அருகில் இருந்த பாதையில் பயணித்தவர்கள் வழியெங்கும் பிணங்களாய் இருக்கிறது என்றார்கள். பலர் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். சிலரது கை கால்கள் வெட்டப்பட்டன. கொடூரமான சித்ரவதைகள் நிகழ்த்தப்பட்டன. மரணம் மட்டுமே அவர்களை அந்த நரகத்தில் இருந்து விடுவிக்கும் வழியாக இருந்தது.

    அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இன்னும் சில நேரத்தில் இடமே மக்கள் நெருக்கடியால் வெடித்து விடும் என்பது போல இருக்கிறது. சூரியன் பகல் பொழுதில் கொளுத்துகிறது. உணவோ குடிப்பதற்கு நீரோ இல்லை.… …மேலும் வாசிக்க


  • ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை போர் குற்றம் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் பெரும் விவாதத்தினை உண்டு செய்திருக்கிறது. இச்சூழலில் சேனல் 4 வெளியிட்ட வீடியோக்கள் இலங்கைக்கு எதிரான வாதத்திற்கு வலு சேர்த்தன. இந்நிலையில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற மனித உரிமை அமைப்பான ஆம்னிஸ்டி தற்போது இலங்கையில் இன்னும் அரசு உதவியோடு தமிழர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் எதிராக தொடரும் கைது, கடத்தல், துன்புறுத்தல், கொலைகள் பற்றி 63 பக்க ‘locked away’ என்கிற ரிப்போர்ட்டினை வெளியிட்டு இருக்கிறது.

    “விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகும் இன்றும் தீவிரவாத தடுப்பு சட்டம் இலங்கையில் நடைமுறையில் இருக்கிறது. இச்சட்டத்தின் அடிப்படையில் அதிகாரிகள் எந்தவித சாட்சியமும் இல்லாமல் ஒருவரைக் கைது செய்ய முடியும், நீண்ட காலத்திற்கு அவர் மீது வழக்கு பதியாமலே காவலில் வைத்திருக்க முடியும். தீவிரவாத அமைப்பினர் என்று அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் கூட இந்த வகையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.… …மேலும் வாசிக்க


  • ஸ்ரீ லங்கா கார்டியன் பத்திரிக்கையில் வெளிவந்த அருந்ததி ராயின் பேட்டியில் இருந்து சில பகுதிகள்.

    …நிலைமை முற்றிலும் மோசமாக இருக்கிறது. நான் (இலங்கை) முகாம்களை நேரிடையாக பார்வையிடவில்லை. ஆனால் அங்கே மிக பெரிய மனித உரிமை மீறல் பிரச்சனை நடந்து கொண்டிருப்பது வெளிப்படை. அதை உலகம் அலட்சியபடுத்துகிறது.  லட்சக்கணக்கான மக்களை முகாம்களில் அடைத்து வைத்து அவர்கள் மீது வெற்றி கொக்கரிப்பு செய்வது என்பது அதிர்ச்சியான விஷயம். மனதை உறைய செய்யும் கொடுமை. அரசாங்கம் அங்கு நடப்பதை வெளியுலகம் அறிய முடியாதபடி செய்து இருக்கிறது. ஆனாலும் அதை தாண்டி வெளி வந்த சில தகவல்களை பாருங்கள்.  (நாஜிகளின்) முகாம் என அதற்கு பெயரிடுவது தான் பொருத்தமாக இருக்கும்.  இவை எல்லாம் பொய் என்றால் இலங்கை அரசு எதற்கு மீடியாவை முகாம்களுக்கு போக அனுமதி மறுக்கிறது…

    …இந்திய மக்கள் பல்வேறுபட்ட பின்புலங்களை உடையவர்கள். இங்குள்ள ஊடகங்கள் இலங்கையில் என்ன நடந்தது என்பதை கவனமாய் தவிர்த்து விட்டன.… …மேலும் வாசிக்க


  • கடும் தண்ணீர் தட்டுபாடு, அச்சுறுத்தும் மழைக்காலம், டெண்ட் கூரைகளை பெயர்த்தெடுக்கும் பலத்த காற்று, கழிவறைகள் வழிந்து வாழும் டெண்ட்களுக்கு இடையில் ஓடும் சுகாதாரமற்ற நிலை, இட நெருக்கடி, ராணுவத்தினர் செய்யும் சித்ரவதைகள், அவ்வபோது ராணுவத்தினரால் காணாமல் போகும் முகாம்வாசிகள், முடக்கபட்ட சுதந்திரம் என்று தற்போது இலங்கையில் உள்ள தமிழர் முகாம்கள் பெரும் அவல நிலைக்கு ஆளாகி இருக்கிறது. இதற்கு ஆதாரமாய் அங்கு நடக்கும் விஷயங்கள் பற்றிய நேரடி சாட்சியங்களை Human Rights Watch என்கிற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில் சமீபத்தில் வெளியிட்டது. அதன் சுருக்கம் கீழே கொடுக்கபட்டு இருக்கிறது.

    இலங்கையில் இன்று இரண்டறை லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் சிறை வைக்கபட்டு இருக்கிறார்கள். ஐ.நாவின் கூற்றுபடி சரியாக 2,55,551 பேர். வவூனியா மாவட்டத்தில் உள்ள மானிக் முகாமில் தான் அதிகமானோர் தங்க வைக்கபட்டிருப்பதாக தெரிகிறது.

    மானிக் முகாமிற்கு அருகே உள்ள ஒரு நதியில் இருந்து பைப்லைன் மூலமாக தான் தண்ணீர் முகாமிற்கு அளிக்கபட்டு வந்தது.… …மேலும் வாசிக்க


  • ப.சிதம்பரம் ஏற்கெனவே கோட்டிட்டு காட்டினார். இப்போது இங்கிலாந்து தொடங்கி மற்ற உலக நாடுகளும் தங்களுடைய எண்ணத்தை வெளிபடுத்த தொடங்கி விட்டனர்.

    நடராஜா. விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர். இங்கிலாந்தில் வசித்து வரும் இவரை அந்நாட்டு அரசாங்கம் பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப முயற்சித்தது. இலங்கை மண்ணில் கால் வைத்தால் தனது உயிருக்கு எந்தவித பாதுகாப்புமில்லை என இவர் மன்றாடியும் பயனில்லை. இறுதி முயற்சியாக இவர் அங்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் காரணமாக இவரை இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டு இருக்கிறது.

    தனக்கு நேர்ந்தது போல பல தமிழர்களுக்கு இந்த பலவந்தமான வழியனுப்பு விழா நடந்திருக்கிறது என நடராஜா குற்றம் சாட்டுகிறார். இந்த வருடம் ஜூலை மாதம் மட்டும் பனிரெண்டு தமிழர்கள் இப்படி நாடு கடத்தபட்டதாக மேற்கு லண்டனில் உள்ள தமிழ் அமைப்பை சார்ந்த நகுலேந்திரன் என்பவர் பிபிசியில் குற்றச்சாட்டு எழுப்பி இருக்கிறார்.

    இலங்கையில் நடைபெறும் அரசு பயங்கரவாதத்தை கண்டிக்கும் நாடுகளில் ஒன்றான இங்கிலாந்திலே இப்படியான ரகசிய வேலைகள் இலங்கை அரசின் பழி வாங்குதலுக்கு சாதகமாக நடக்கிறது என்றால் இலங்கையின்  நேச நாடுகளில் நிலைமை எப்படி இருக்கும் என சொல்லவே வேண்டியதில்லை.… …மேலும் வாசிக்க


  •  

    கொடூரமான போர் ஓய்ந்து விட்டாற் போல் தோன்றினாலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு இன்னும் சித்ரவதை காலம் முடியவில்லை. விடுதலைப்புலி வீரர்கள் யாரும் தங்கள் பிடியில் இருந்து தப்பி விடக்கூடாது என்பதற்காக இலங்கை அரசு கிட்டதட்ட மூன்று லட்சம் தமிழ் மக்களை கம்பி வேலிகளுக்கு இடையே முகாம்களில் அடைத்து வைத்து இருக்கிறது.

    வவுனியா, மன்னார், திரிகோணாமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நாற்பது முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. இங்குள்ள மக்கள் இந்த முகாம்களில் இருந்து வெளியே செல்ல முடியாது. இவர்கள் ஏற்கெனவே போர் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானவர்கள். தற்போது முகாம் பகுதிகளில் உள்ள சுகாதார சீர்கேட்டின் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் இவர்களை தாக்க தொடங்கியிருக்கின்றன.

    அடிப்படை வசதிகள் அற்ற இந்த முகாம்கள் அரசின் மனித உரிமை மீறல் என சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்தபடி இருக்கின்றன. இந்த முகாம்களில் உள்ள நிலையை கண்டறிய யாருக்கும் அனுமதி இல்லை.

    …மேலும் வாசிக்க