
மனிதர்கள் – முசுடு கிழவி
பதினொரு வீடுகளுக்கும் இவர் தான் ராணி. சர்வதிகாரி என்று கூட சொல்லலாம். இரவு எத்தனை மணிக்கு விளக்கு அணைக்கபட வேண்டும் என்பதில் தொடங்கி டீவி ஆடியோ அளவு எது வரை அனுமதி என்பது வரை, விருந்தினர்கள் வந்தால் எத்தனை மணிக்கு கிளம்பி விட வேண்டும் என்று எக்கசக்க விதிமுறைகள் உண்டு. ராஜேஷ்வரியம்மாள் குடியிருப்பிற்கு புதிதாய் குடி வருபவர்கள் ஆறு மாதங்கள் கூட தாங்குவது கஷ்டம் தான். ...தொடர்ந்து வாசிக்க ...
கிழவி சாக போகிறாள்
தலையில் பலத்த காயம்!
இறக்க போகிறாள் என முதல் பார்வையிலே புரிகிறது!
நடைப்பாதையில் அமர்ந்து இருக்கிறாள் அந்த மூதாட்டி!
இரண்டு ஆட்டோ டிரைவர்கள் அவளை பிடித்தபடி இருக்கிறார்கள்!
சில கல்லூரி மாணவர்கள் சுற்றி நிற்கிறார்கள்! ...தொடர்ந்து வாசிக்க ...
காகிதத்தை மை தொடும் கணம்
சருகுகள் கூட விட்டு போன நிலப்பரப்பில்
பட்டு போன மரம் போல
அதன் காய்ந்த பட்டை போல
அவன் கிடக்கிறான்.
கேள்விகுறி போல கிடக்கிறது
அவன் உடல்.
முதுமையும் காயங்களும் உடலெங்கும். ...தொடர்ந்து வாசிக்க ...

மனிதர்கள் – வீடு வீடாக சோப்பு விற்கும் மூதாட்டி
பக்கத்தில் இருந்த ஓர் அனாதை இல்லத்தில், ‘உங்கள் குழந்தைகளை நாங்கள் இலவசமாக படிக்க வைக்கிறோம்,’ என்கிற உறுதிமொழி கொடுத்து முதல் இரு குழந்தைகளை வாங்கி கொண்டார்கள். சில மாதங்கள் கழித்து திடீரென ஒரு நாள் அவரது வீட்டிற்கு ஆட்கள் வந்து அந்த குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க வைக்க போகிறோம், சில வருடங்கள் கழித்து அவர்கள் உங்களிடமே திரும்ப வந்து விடுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அந்த சில வருடங்கள் வரவே இல்லை. என் குழந்தைகள் என்னவானார்கள் என்று அந்த இல்லத்தின் நிர்வாகிகளிடம் ஹெலன் கேட்டால் யாரோ வெள்ளைக்கார குடும்பத்தில் தன் இரண்டு குழந்தைகளும் வளர்வதாய் தகவலும் சில சமயம் அந்த குடும்ப புகைப்படமும் கிடைக்கும். ...தொடர்ந்து வாசிக்க ...