
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – கறுப்பின் நிறம்
மது பான விடுதியிலே தன்னை நோக்கி இளிக்கும் ஆணை அலட்சியமாய் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறாள் ஒரு பெண். செவ்வாய்க்கிழமை மதியம் ஜன்னலைத் திறந்து வைத்து உள்ளே கட்டிலில் நெருக்கமாய் இருக்கிறார்கள் ஒரு கணவன் மனைவி. ஏரிக்கரையோரமாய் தன் மகனோடு அமர்ந்திருக்கிறார் ஒரு தந்தை. மதுக்கடைக்கு வெளியே காத்திருக்கிறார்கள் இரண்டு சிறுமிகள். சரியான பராமரிப்பும் மேற்பூச்சும் இல்லா செங்கற் கட்டிடத்தில் ஒரு பத்திரிக்கையை தலைகீழாய் வாசித்தபடி அமர்ந்திருக்கிறாள் ஒரு சிறுமி. வெயின் தன் புகைப்பட கருவியோடு கண்ணுக்குப் புலப்படாதவராய் மாறி விட்டார். ...தொடர்ந்து வாசியுங்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – ஹிப்பி
அது ஹிப்பிகளின் பொற்காலம். ராக் இசை விழா. பார்ப்பவர்களின் நரம்புகளைப் பதம் பார்க்கும் ராக் இசை. திடீரென யாரென தெரியாத ஓர் இளம் வயது பெண் மேடை மீது ஏறினாள். ‘எதைப் பற்றியும் கவலைப்படாத’ உடை. அலட்சிய உடல் பாவனை. இசையின் மயக்கத்தோடு மேடையில் தோன்றியவளுக்கு மேடை சங்கோஜமோ பயமோ இல்லை. இசையின் வலிய தாளங்களுக்கு நளினமாய் உடலை அசைத்து ஆடினாள். கூட்டம் கரகோஷமிட அவள் ஆடுவதைக் கேமரா புகைப்படமாய் எடுத்தது. ...தொடர்ந்து வாசியுங்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – இனப்படுகொலை
அந்த இடத்தில் எப்போதும் சித்ரவதை செய்யப்படுபவர்களின் ஓலம் நிரம்பியே இருக்கிறது என்று சொன்னார்கள். அருகில் இருந்த பாதையில் பயணித்தவர்கள் வழியெங்கும் பிணங்களாய் இருக்கிறது என்றார்கள். பலர் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். சிலரது கை கால்கள் வெட்டப்பட்டன. கொடூரமான சித்ரவதைகள் நிகழ்த்தப்பட்டன. மரணம் மட்டுமே அவர்களை அந்த நரகத்தில் இருந்து விடுவிக்கும் வழியாக இருந்தது. ...தொடர்ந்து வாசியுங்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – மர்லின் மன்றோ
அணிந்திருக்கும் உடை வெள்ளை நிறம். அவளது தலைமுடி தங்க நிறத்தில் பளபளக்கிறது. காற்றில் விரியும் உடை இறக்கைகளைப் போல் தோற்றம் கொள்கிறது. கிருஸ்துவ மரபில் மனிதர்களைக் காக்கும் தேவதையை நினைவுப்படுத்துகிறாள். அதே சமயம் கிரேக்க மரபில் வரும் காதலுக்கான கடவுள் அப்ரோடிட் காமத்திற்கு ஏங்கி நிற்பதைப் போலவும் தெரிகிறாள். அமெரிக்காவில் இன்னும் இருக்கும் பழமைவாதிகளையும் கண்டிப்பான சென்சார் போர்ட்டையும் அவள் நகைக்கிறாள். காட்சி அவளது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவளே மேலே இருக்கும் பெண். இயற்கையின் நியதிகளை மாற்றி போடுகிறாள். ஆணின் அதிகாரத்தை ஒரு சீண்டலில் காலி செய்து விட்டாள் ...தொடர்ந்து வாசியுங்கள்

சுனாமி பீதி – புகைப்படங்கள்
2004-ம் ஆண்டு சுனாமி நினைவுகள் இங்கிருக்கும் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. கூட்டம் கூட்டமாய் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையோரம் நடைப்பாதைகளில் வந்து உட்கார்ந்திருந்தார்கள். மெரீனாவில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்திற்கும் பட்டினம்பாக்கத்தில் இறுக்கமான முகங்களோடு இருந்த மக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ...தொடர்ந்து வாசியுங்கள்

உலகப்புகழ் பெற்ற புகைப்படம் – நிர்வாணப் பெண்
குறிப்பு: பதிவில் நிர்வாண பெண்ணுடல் புகைப்படங்கள்/ஓவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன. புகைப்படத்தில் கிக்கி நிர்வாணமாய் தன் முதுகை காட்டியபடி அமர்ந்திருக்கிறாள். அவளது தலைமுடி முற்றிலுமாய் ஒரு தலைப்பாகைக்குள் இருக்கிறது. முகம் லேசாய் திரும்பியிருக்கிறது. கைகளை முன்னால் வைத்திருப்பதினால் அது பார்வையிலே இல்லை. செதுக்கப்பட்ட சிலை போல அவளது உடல்வளைவுகள். கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கிக்கி கிழக்கத்திய நாட்டு பெண் போல தோற்றம் கொள்கிறாள். ...தொடர்ந்து வாசியுங்கள்

உலகப் புகழ் பெற்ற புகைப்படம் – பீரங்கி டாங்கிகளுக்கு எதிரில்
வலிமையான மிருகம் போல் நின்று கொண்டு இருக்கிறது அந்தப் பீரங்கி டாங்கி. அதன் துப்பாக்கி குழல் தவிர அதன் பிரம்மாண்ட அளவே பயமூட்டுவதாக இருக்கிறது. அது தவிர ரோட்டைத் தடதடக்க செய்கிற சத்தம் வேறு. ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக டாங்கிகள் சாலையை அதிர வைத்தபடி வருகின்றன. வெள்ளை சட்டை கறுப்பு பேண்ட் அணிந்த இளைஞன் அவன். கையில் ஒரு பை. கல்லூரி முடிந்தவுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறவன் போல ஒரு தோற்றம். முதலாவதாக வரும் பீரங்கி டாங்கிக்கு முன்னால் அதன் வழியை மறித்தபடி நிற்கிறான். ...தொடர்ந்து வாசியுங்கள்

உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்
பச்சை நிற கருவிழிகள் கொண்டவள். அசாதாரணமான அழகும், எதோ ஒரு கோபமும் இறுக்கமும் கொப்பளித்து கொண்டு இருந்தது அவளது முகத்தில். ஸ்டீவ் தன்னைப் பார்த்ததும் அவள் தனது சிகப்பு நிற துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள். ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்து ஸ்டீவ் அந்த சிறுமியைப் புகைப்படம் எடுத்தார். ...தொடர்ந்து வாசியுங்கள்

உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: வெற்றி களிப்பில் ஒரு முத்தம்
டைம்ஸ் ஸ்கோயரில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தேன். கடற்படையை சார்ந்த ஒரு மாலுமி சாலையில் முரட்டுதனமாய் ஓடி வந்து கொண்டிருப்பதை பார்த்தேன். கண்ணில் படுகிற அத்தனை பெண்களை அவன் இழுத்து முத்தமிட்டு கொண்டிருந்தான். வயதான பெண்ணா? ஒல்லியா? குண்டா? இதை பற்றி எல்லாம் எந்த அக்கறையும் இல்லாமல் அவன் தன் கண்ணில் படுகிற ஒவ்வொரு பெண்ணையும் அணைத்து முத்தமிட்டான். ...தொடர்ந்து வாசியுங்கள்

டைம் இதழின் ‘2008-ம் ஆண்டின் சிறந்த பத்து புகைப்படங்கள்’
அமெரிக்காவில் இந்த ஆண்டு நடந்த அதிபர் பதவிக்கான தேர்தல் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கான பிரச்சாரம் வரலாறு காணாத வகையில் பிரம்மாண்டமாக நடந்தது. அதிபர் பதவிக்கு போட்டியிட்ட மெக் கைன் தான் நிகழ்த்த இருக்கும் உரைக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்த போது அவரது மனைவி சிண்டி, ஓட்டல் அறையில் வெள்ளை வைனை அருந்தியவாறு… ...தொடர்ந்து வாசியுங்கள்