sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • அறிமுகம்
Browse: Home » செய்திகள்
சுனாமி பீதி

சுனாமி பீதி – புகைப்படங்கள்

April 11, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

2004-ம் ஆண்டு சுனாமி நினைவுகள் இங்கிருக்கும் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. கூட்டம் கூட்டமாய் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையோரம் நடைப்பாதைகளில் வந்து உட்கார்ந்திருந்தார்கள். மெரீனாவில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்திற்கும் பட்டினம்பாக்கத்தில் இறுக்கமான முகங்களோடு இருந்த மக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ...தொடர்ந்து வாசிக்க ...

உலகத்தின் உயரமான போர்க்களத்தில் வீணாகும் உயிர்கள்

உலகத்தின் உயரமான போர்க்களத்தில் வீணாகும் உயிர்கள்

April 8, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

எங்க அவுட் போஸ்ட் இருக்கிற இடத்துல இருந்து பார்த்தா பாலைவனம் மாதிரி கண்ணுக்கெட்டுன தூரம் ஐஸா இருக்கும். ஒரு ஆள், ஆடு, மாடு, ஒரு மரம், செடி கொடி எதுவுமே கிடையாது. நீங்க நடுங்கிடுவீங்க. என்னோட இருந்த ஆள் இப்போ தான் புதுசா இந்த ஏரியாவிற்கு வந்தவரு. பனி கொஞ்சம் கொஞ்சமாய் பொழிய ஆரம்பிச்ச நேரமது. அங்க அவரு துப்பாக்கியால சுட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டு பிணமாக இருக்கிறதைத் தான் பார்த்தேன். ஆள் பனியைப் பார்த்து பிளாங்க் ஆகிட்டாரு போல. ...தொடர்ந்து வாசிக்க ...

பிற: சல்மான் ருஷ்டியும் சாத்தான்களும்

January 25, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

இந்தியாவில் ஒரு புத்தகத்தை தடை செய்வதற்கு நிறைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். ஒரு மாநில அரசாங்கம் தான் அத்தகைய செயலில் ஈடுபட முடியும். அதற்கு அந்த அரசு, நீதிமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தி தனது நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் பெற வேண்டும். சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்கள்’ புத்தகம் அத்தகைய முழுமையான சட்ட வழிமுறைகளால் தடை செய்யபட்டது அல்ல. 1988-ம் ஆண்டு ‘சாத்தானின் செய்யுள்கள்’ வெளியான போது உலகம் முழுக்க பல இடங்களில் முஸ்லீம்கள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் அப்போது இருந்த ராஜீவ் காந்தி அரசு இந்த புத்தகத்தை வெளிநாட்டில் இருந்து… ...தொடர்ந்து வாசிக்க ...

700 கோடி மக்கள்தொகை ஒரு பொய்

October 31, 2011 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

சமீப பத்தாண்டுகளில் உலகத்தின் பல நாடுகளில் அதிகாரப்பூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் முழுமையாக நடந்தேறவே இல்லை. முக்கியமாக ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் தான் இன்றைய நிலவரப்படி மிக வேகமாக மக்கள்தொகை அதிகரித்தபடி இருக்கிறது. இங்கு கடந்த இருபதாண்டுகளில் முழுமையான ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவே இல்லை. இந்த சூழலில் மக்கள் தொகை 700 கோடியாக உயரும் என்பது ஓர் எதிர்பார்ப்பு அவ்வளவு தான். இன்னும் சொல்ல போனால் ஒரு யூகம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை. ...தொடர்ந்து வாசிக்க ...

பரமக்குடி, பள்ளிக்கூடம், வாகனத்தை கண்டாலே பயந்து ஓடும் கிராம மக்கள்

October 13, 2011 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

பல கிராமங்களில் பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்கள் ஒதுக்கபடுவது, வித்தியாசமாக நடத்தபடுவது அல்லது துரத்தபடுவது இன்றும் நடக்கிறது. கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களிலும் சாதியை பற்றிய அறிவுறுத்தல் பிள்ளைபருவத்திலே தொடங்கி விடுகிறது. ‘அவர்கள்’ vs ‘இவர்கள்’ மனநிலை மேலோங்குகிறது. அதுவும் ஏற்கெனவே சாதி பிரச்சனைகள் அதிகமாக இருக்குமிடத்தில் பத்து வயது சிறுவன் கூட தன் சாதி பற்றிய பிடிப்போடு அல்லது தாழ்வு மனப்பான்மையோடு இருப்பதை காண முடியும். மாணவர்கள் அனைவரும் சாதி பற்றியும் அதன் படிநிலை பற்றியும் தங்கள் சாதி எந்த படிநிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசிக்க ...

உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்

October 11, 2011 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

அரசியல் கட்சிகள் உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்தினால் அங்கே பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகளாக இருக்க மாட்டார்கள்; மாறாக கட்சியின் பிரதிநிதிகளாக தான் இருப்பார்கள். எம்.எல்.ஏ-வாகவோ எம்.பி-யாக தகுதியடைகிற நிலையில் இல்லாத கட்சிகாரர்கள் வார்டு கவுன்சிலராகவாது மாறி சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள். கட்சியும் அப்படி அவர்கள் பலனடையட்டும் என நினைக்கிறது. அரசியல் சின்னங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் இடமிருக்க கூடாது. அரசியல் கட்சிகள், கட்சிக்காரர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கபட வேண்டும். இல்லையெனில் இது மற்றொரு பிரதிநிதித்துவ கேலிகூத்தாக தான் முடியும். ...தொடர்ந்து வாசிக்க ...

சுடுவதற்கு முன் ஒரு கணம் சாதி!

September 15, 2011 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

என்னுள் எங்கோ ஆழத்தில் சாதி மனநிலை இருப்பது கண்டு துணுக்குற்றேன். என்னுள் வர்க்க பேதம், ஆணாதிக்கம், அறிவு கற்பித திமிர் என பல விஷயங்களுடன் கலந்து கிடந்தது சாதி மனநிலை. என்றாலும் தனித்து இருந்தது. எங்கோ ஆழத்தில் அது என்னை இயக்கும் சக்தி படைத்ததாகவும் இருந்தது. என் சக மனிதர்களும் அவ்வாறே இருப்பதாய் நான் ஒவ்வொரு முறையும் கண்டறிகிறேன். ...தொடர்ந்து வாசிக்க ...

விக்கிலீக்ஸ்: ஈழப் போரில் இந்தியா

March 17, 2011 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட ஈழப் போரில் உலக நாடுகள் பெரும்பாலானவை இலங்கை அரசாங்கத்தை போர்நிறுத்தம் செய்யும்படி வலியுறுத்தின. ஆனால் உலக நாடுகளின் இந்த கோரிக்கையினை இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ளாதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியும் காரணம் என்கின்றன விக்கிலீக்ஸில் வெளியான ஆவணங்கள். ...தொடர்ந்து வாசிக்க ...

wikileaks

அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ்

March 17, 2011 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

அமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள். ...தொடர்ந்து வாசிக்க ...

சட்டங்கள் அமைதியை குலைக்கும் என்றால் இந்த சட்டங்கள் எதற்கு?

October 19, 2010 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

கிருஷ்ணகிரி அருகே அகரம் என்கிற கிராமத்தில் சாதி இந்துகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குள் தலித் மக்கள் வரக்கூடாது என வேலி அமைத்த செய்தி சமீபத்தில் வெளியானது. கிராமத்து ஊர் கவுண்டரின் உத்தரவின்பேரில் இந்த முள்வேலி கம்பி கட்டபட்டதாக சொல்லபடுகிறது. ...தொடர்ந்து வாசிக்க ...

1 2 Next →

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

என் நூல்

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Copyright © 2023 sairams Owned by Sairam Sivakumar.

Powered by WordPress. Theme: Origin. Hosted by Milkhost.