
ஜனாதிபதி பதவி தேவையா?
ஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் மேலும் மேலும் மேம்பட்டபடியே இருக்க வேண்டும். தவறுகளைக் கண்டு திருத்தி, விவாதித்து எப்போதுமே கூர் தீட்டபட்டு கொண்டிருக்கிற ஜனநாயகமே ஆரோக்கியமானது. சடங்குகள் என்பதும் அலங்காரங்கள் என்பதும் இனி தேவை இல்லை. ஆயில் ஊற்றி என்ஜின் சரி செய்து சின்ன பிசிறு இல்லாமல் ஜனநாயகத்தை இயக்க வேண்டிய காலகட்டத்தில் குடியரசு தலைவர் பதவியும் அதைப் போன்ற மற்ற வெற்று அலங்கார பதவிகளும் இனி இந்த நாட்டிற்கு வேண்டாம் என முடிவெடுக்கலாம். ...தொடர்ந்து வாசிக்க ...
பிற: சல்மான் ருஷ்டியும் சாத்தான்களும்
இந்தியாவில் ஒரு புத்தகத்தை தடை செய்வதற்கு நிறைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். ஒரு மாநில அரசாங்கம் தான் அத்தகைய செயலில் ஈடுபட முடியும். அதற்கு அந்த அரசு, நீதிமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தி தனது நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் பெற வேண்டும். சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்கள்’ புத்தகம் அத்தகைய முழுமையான சட்ட வழிமுறைகளால் தடை செய்யபட்டது அல்ல. 1988-ம் ஆண்டு ‘சாத்தானின் செய்யுள்கள்’ வெளியான போது உலகம் முழுக்க பல இடங்களில் முஸ்லீம்கள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் அப்போது இருந்த ராஜீவ் காந்தி அரசு இந்த புத்தகத்தை வெளிநாட்டில் இருந்து… ...தொடர்ந்து வாசிக்க ...
சட்டங்கள் அமைதியை குலைக்கும் என்றால் இந்த சட்டங்கள் எதற்கு?
கிருஷ்ணகிரி அருகே அகரம் என்கிற கிராமத்தில் சாதி இந்துகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குள் தலித் மக்கள் வரக்கூடாது என வேலி அமைத்த செய்தி சமீபத்தில் வெளியானது. கிராமத்து ஊர் கவுண்டரின் உத்தரவின்பேரில் இந்த முள்வேலி கம்பி கட்டபட்டதாக சொல்லபடுகிறது. ...தொடர்ந்து வாசிக்க ...

வோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?
அரசியல் கட்சிகள் பெரும்பாலும் யாராவது ஒருவர் கட்டுபாட்டில் இயங்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டன. உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாம் கேலி கூத்தாகி விட்டன. அரசியலில் ஆர்வமுள்ள தகுதியான ஓர் இளைஞர் பணம் செல்வாக்கு எதுவுமின்றி இன்றைய பெருங்கட்சி எதிலாவது வேட்பாளராக தேர்ந்தெடுக்கபடுவது கிட்டதட்ட முடியாத காரியம். அப்படியானால் மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்வு செய்கிறார்களா? அல்லது வெகு சில அரசியல் சக்திகள் சுட்டி காட்டும் நபர்களில் ஒருவருக்கு வோட்டு போடுகிறார்களா? ...தொடர்ந்து வாசிக்க ...

வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?
அப்படி நடக்கும் பட்சத்தில் இது பற்றிய தெளிவான சட்டங்கள் இல்லை என்கிற விஷயத்தால் வலைப்பதிவருக்கு பாதகம் தான் நிகழும். ...தொடர்ந்து வாசிக்க ...
2 குழந்தைகள் – ஒன்று வேண்டாம்! ஒன்று வேண்டும்!
இந்த மாதம் இரண்டு குழந்தைகளை பற்றிய இரு தனி செய்திகள் பத்திரிக்கைகளில் சர்ச்சைகளாக உருவெடுத்தன.ஒன்று மும்பையில் உள்ள ஹரீஷ் மற்றும் நீகிதா மேத்தா தம்பதியினர் கருவில் உள்ள தங்கள் (25 வார வயதுள்ள) குழந்தைக்கு இருதயத்தில் குறைபாடு உள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளதால் அதனை கருகலைப்பு செய்ய அனுமதி கேட்டு மும்பை உயர் நீதிமன்றம் படியேறியதும், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்த சம்பவம். ...தொடர்ந்து வாசிக்க ...