sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • அறிமுகம்
Browse: Home » அரசியல்
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை - இனப்படுகொலை

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – இனப்படுகொலை

May 28, 2014 · by சாய்ராம் சிவகுமார் · in உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை, கட்டுரைகள்

அந்த இடத்தில் எப்போதும் சித்ரவதை செய்யப்படுபவர்களின் ஓலம் நிரம்பியே இருக்கிறது என்று சொன்னார்கள். அருகில் இருந்த பாதையில் பயணித்தவர்கள் வழியெங்கும் பிணங்களாய் இருக்கிறது என்றார்கள். பலர் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். சிலரது கை கால்கள் வெட்டப்பட்டன. கொடூரமான சித்ரவதைகள் நிகழ்த்தப்பட்டன. மரணம் மட்டுமே அவர்களை அந்த நரகத்தில் இருந்து விடுவிக்கும் வழியாக இருந்தது. ...தொடர்ந்து வாசிக்க ...

ஜனாதிபதி பதவி தேவையா?

ஜனாதிபதி பதவி தேவையா?

August 8, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

ஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் மேலும் மேலும் மேம்பட்டபடியே இருக்க வேண்டும். தவறுகளைக் கண்டு திருத்தி, விவாதித்து எப்போதுமே கூர் தீட்டபட்டு கொண்டிருக்கிற ஜனநாயகமே ஆரோக்கியமானது. சடங்குகள் என்பதும் அலங்காரங்கள் என்பதும் இனி தேவை இல்லை. ஆயில் ஊற்றி என்ஜின் சரி செய்து சின்ன பிசிறு இல்லாமல் ஜனநாயகத்தை இயக்க வேண்டிய காலகட்டத்தில் குடியரசு தலைவர் பதவியும் அதைப் போன்ற மற்ற வெற்று அலங்கார பதவிகளும் இனி இந்த நாட்டிற்கு வேண்டாம் என முடிவெடுக்கலாம். ...தொடர்ந்து வாசிக்க ...

கூடங்குளம் - அரசின் அணுகுமுறை எப்படி?

கூடங்குளம் – அரசின் அணுகுமுறை எப்படி?

March 13, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

நேரு காலத்து இந்தியா தன்னளவில் கொள்கைகளைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. இன்றோ நாம் வல்லரசு பகற்கனவில் அமெரிக்க சாயத்தைப் பூசிக் கொண்டு திரிகிற சமூகமாக இருக்கிறோம். இந்திய அரசுக்கு இன்று உலக அரங்கில் என்ன மதிப்பு இருக்கிறது? இலங்கை போற்குற்றங்களுக்கு உடந்தை, இஸ்ரேலுக்கு ஆதரவு என அதன் பாதை வேறு பக்கமாய் திரும்பி விட்டது. இந்தியாவின் இன்றைய மத்திய வர்க்கத்தினர் அமெரிக்காவில் உள்ள மத்திய வர்க்கத்தினரை விட பேராசைமிக்கவர்களாய் இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசிக்க ...

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்

October 17, 2011 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

அரசியல் சின்னங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தடை விதிக்க முடியாத நிலை இருப்பின், உடனடியாக அடுத்த தேர்தலுக்குள் செய்யபட வேண்டிய விஷயம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவுகளை அரசாங்கமே ஏற்று கொள்ள வேண்டியது. இது எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தலுக்கும் யோசிக்கபடுகிற ஆலோசனையாக இருந்தாலும் அங்கே இது செல்லுபடியாகாமல் போவதற்கு காரணங்கள் உண்டு. ...தொடர்ந்து வாசிக்க ...

உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்

October 11, 2011 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

அரசியல் கட்சிகள் உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்தினால் அங்கே பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகளாக இருக்க மாட்டார்கள்; மாறாக கட்சியின் பிரதிநிதிகளாக தான் இருப்பார்கள். எம்.எல்.ஏ-வாகவோ எம்.பி-யாக தகுதியடைகிற நிலையில் இல்லாத கட்சிகாரர்கள் வார்டு கவுன்சிலராகவாது மாறி சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள். கட்சியும் அப்படி அவர்கள் பலனடையட்டும் என நினைக்கிறது. அரசியல் சின்னங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் இடமிருக்க கூடாது. அரசியல் கட்சிகள், கட்சிக்காரர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கபட வேண்டும். இல்லையெனில் இது மற்றொரு பிரதிநிதித்துவ கேலிகூத்தாக தான் முடியும். ...தொடர்ந்து வாசிக்க ...

சுடுவதற்கு முன் ஒரு கணம் சாதி!

September 15, 2011 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

என்னுள் எங்கோ ஆழத்தில் சாதி மனநிலை இருப்பது கண்டு துணுக்குற்றேன். என்னுள் வர்க்க பேதம், ஆணாதிக்கம், அறிவு கற்பித திமிர் என பல விஷயங்களுடன் கலந்து கிடந்தது சாதி மனநிலை. என்றாலும் தனித்து இருந்தது. எங்கோ ஆழத்தில் அது என்னை இயக்கும் சக்தி படைத்ததாகவும் இருந்தது. என் சக மனிதர்களும் அவ்வாறே இருப்பதாய் நான் ஒவ்வொரு முறையும் கண்டறிகிறேன். ...தொடர்ந்து வாசிக்க ...

விக்கிலீக்ஸ்: ஈழப் போரில் இந்தியா

March 17, 2011 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட ஈழப் போரில் உலக நாடுகள் பெரும்பாலானவை இலங்கை அரசாங்கத்தை போர்நிறுத்தம் செய்யும்படி வலியுறுத்தின. ஆனால் உலக நாடுகளின் இந்த கோரிக்கையினை இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ளாதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியும் காரணம் என்கின்றன விக்கிலீக்ஸில் வெளியான ஆவணங்கள். ...தொடர்ந்து வாசிக்க ...

wikileaks

அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ்

March 17, 2011 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

அமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள். ...தொடர்ந்து வாசிக்க ...

பிச்சை போடாதே

March 12, 2010 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

இந்த வாரம் உயிர்மை குழுமத்தின் இணைய இதழான உயிரோசையில் என்னுடைய ‘பிச்சையும் வேண்டாம்! தானமும் வேண்டாம்!’ என்கிற கட்டுரை வெளிவந்து இருக்கிறது. ஊடகங்களில் பணிபுரிய தொடங்கி ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேலாகியும், எனது கட்டுரை வேறொரு ஊடகத்தில் பதிக்கபட்டிருப்பதை பார்க்கும் போது இன்றைக்கும் என் மனம் சந்தோஷத்தில் பொங்குவதை என்ன என்று சொல்ல! கட்டுரையை மீண்டும் படித்த போது அதன் நீட்சியாக சில எண்ணங்கள் தோன்றின. அதை பதிவு செய்ய தான்

...தொடர்ந்து வாசிக்க ...

மாநில சுயாட்சி நமக்கு தேவையா?

மாநில சுயாட்சி நமக்கு தேவையா?

September 16, 2009 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

ஒரு காலத்தில் இந்தி எதிர்ப்பு, பிரிவினை கோரிக்கை என படுசூடாக இருந்த தமிழகத்தை இன்றும் டெல்லி உளவுதுறை ஒரு சந்தேக கண்ணோடு தான் பார்க்கிறார்கள். சமீபத்தில் ஈழத்தில் அதிகரித்த இனபடுகொலைகளுக்கு பிறகு தமிழகத்தில் எழுந்த ஆதரவு அலை மீண்டும் டெல்லிக்காரர்கள் மனதில் சந்தேக விதைகளை தூவி சென்றன. ...தொடர்ந்து வாசிக்க ...

1 2 Next →

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

என் நூல்

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Copyright © 2023 sairams Owned by Sairam Sivakumar.

Powered by WordPress. Theme: Origin. Hosted by Milkhost.