Category: வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
-
ஜனாதிபதி பதவி தேவையா?
ஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் மேலும் மேலும் மேம்பட்டபடியே இருக்க வேண்டும். தவறுகளைக் கண்டு திருத்தி, விவாதித்து எப்போதுமே கூர் தீட்டபட்டு கொண்டிருக்கிற ஜனநாயகமே ஆரோக்கியமானது. சடங்குகள் என்பதும் அலங்காரங்கள் என்பதும் இனி தேவை இல்லை. ஆயில் ஊற்றி என்ஜின் சரி செய்து சின்ன பிசிறு இல்லாமல் ஜனநாயகத்தை இயக்க வேண்டிய காலகட்டத்தில் குடியரசு தலைவர் பதவியும் அதைப் போன்ற மற்ற வெற்று அலங்கார பதவிகளும் இனி இந்த நாட்டிற்கு வேண்டாம் என முடிவெடுக்கலாம்.
-
கூடங்குளம் – அரசின் அணுகுமுறை எப்படி?
நேரு காலத்து இந்தியா தன்னளவில் கொள்கைகளைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. இன்றோ நாம் வல்லரசு பகற்கனவில் அமெரிக்க சாயத்தைப் பூசிக் கொண்டு திரிகிற சமூகமாக இருக்கிறோம். இந்திய அரசுக்கு இன்று உலக அரங்கில் என்ன மதிப்பு இருக்கிறது? இலங்கை போற்குற்றங்களுக்கு உடந்தை, இஸ்ரேலுக்கு ஆதரவு என அதன் பாதை வேறு பக்கமாய் திரும்பி விட்டது. இந்தியாவின் இன்றைய மத்திய வர்க்கத்தினர் அமெரிக்காவில் உள்ள மத்திய வர்க்கத்தினரை விட பேராசைமிக்கவர்களாய் இருக்கிறார்கள்.
-
உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்
அரசியல் சின்னங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தடை விதிக்க முடியாத நிலை இருப்பின், உடனடியாக அடுத்த தேர்தலுக்குள் செய்யபட வேண்டிய விஷயம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவுகளை அரசாங்கமே ஏற்று கொள்ள வேண்டியது. இது எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தலுக்கும் யோசிக்கபடுகிற ஆலோசனையாக இருந்தாலும் அங்கே இது செல்லுபடியாகாமல் போவதற்கு காரணங்கள் உண்டு.
-
உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்
அரசியல் கட்சிகள் உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்தினால் அங்கே பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகளாக இருக்க மாட்டார்கள்; மாறாக கட்சியின் பிரதிநிதிகளாக தான் இருப்பார்கள். எம்.எல்.ஏ-வாகவோ எம்.பி-யாக தகுதியடைகிற நிலையில் இல்லாத கட்சிகாரர்கள் வார்டு கவுன்சிலராகவாது மாறி சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள். கட்சியும் அப்படி அவர்கள் பலனடையட்டும் என நினைக்கிறது. அரசியல் சின்னங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் இடமிருக்க கூடாது. அரசியல் கட்சிகள், கட்சிக்காரர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கபட வேண்டும். இல்லையெனில் இது மற்றொரு பிரதிநிதித்துவ கேலிகூத்தாக தான்…
-
அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ்
அமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள்.
-
மாநில சுயாட்சி நமக்கு தேவையா?
ஒரு காலத்தில் இந்தி எதிர்ப்பு, பிரிவினை கோரிக்கை என படுசூடாக இருந்த தமிழகத்தை இன்றும் டெல்லி உளவுதுறை ஒரு சந்தேக கண்ணோடு தான் பார்க்கிறார்கள். சமீபத்தில் ஈழத்தில் அதிகரித்த இனபடுகொலைகளுக்கு பிறகு தமிழகத்தில் எழுந்த ஆதரவு அலை மீண்டும் டெல்லிக்காரர்கள் மனதில் சந்தேக விதைகளை தூவி சென்றன.
-
நம்ம தேர்தல் முறை சரியான முறை தானா?
ஒரு தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அதில் தேர்தலன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 என்று வைத்து கொள்ளுங்கள். இதில் 24 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஜெயித்தவராக அறிவிக்கபடுகிறார். அவரே அந்த நூறு பேர் மற்றும் அந்த தொகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஐம்பது பேர்களின் பிரதிநிதியாக மாறி போகிறார். உண்மையில் அந்த 24 வாக்குகள் பெற்ற நபர் பிரதிநிதி ஆவது நியாயம் தானா?
-
வோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?
அரசியல் கட்சிகள் பெரும்பாலும் யாராவது ஒருவர் கட்டுபாட்டில் இயங்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டன. உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாம் கேலி கூத்தாகி விட்டன. அரசியலில் ஆர்வமுள்ள தகுதியான ஓர் இளைஞர் பணம் செல்வாக்கு எதுவுமின்றி இன்றைய பெருங்கட்சி எதிலாவது வேட்பாளராக தேர்ந்தெடுக்கபடுவது கிட்டதட்ட முடியாத காரியம். அப்படியானால் மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்வு செய்கிறார்களா? அல்லது வெகு சில அரசியல் சக்திகள் சுட்டி காட்டும் நபர்களில் ஒருவருக்கு வோட்டு போடுகிறார்களா?