Category: கவிதைகள்
-
அறுபது வினாடி சந்திப்பு
அவளிடம் அவன் அறுபது வினாடிகள் தான் பேச முடிந்தது. அவள் கை கொடுத்து பிறகு விடைபெற்று விலகி நடந்தாள் பதற்றத்தோடு.
-
ராஜகுமாரியும் ஏழு தவளைகளும்
இளமையின் ஒளி சூழ பிரகாசிக்கிறாள் ராஜகுமாரி. கண்களில் வழிகிறது பரிவும் அன்பும். உதடுகளில் பூக்கிறது காமம்.
-
கிழவி சாக போகிறாள்
தலையில் பலத்த காயம்! இறக்க போகிறாள் என முதல் பார்வையிலே புரிகிறது! நடைப்பாதையில் அமர்ந்து இருக்கிறாள் அந்த மூதாட்டி! இரண்டு ஆட்டோ டிரைவர்கள் அவளை பிடித்தபடி இருக்கிறார்கள்! சில கல்லூரி மாணவர்கள் சுற்றி நிற்கிறார்கள்!
-
வெக்கையுறவு
ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரி தான் நிகழ்கிறது. அவனிடமிருந்து விலகி நான் முதலில் தேடுவது துண்டைத் தான். எப்போதும் கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என நினைத்தாலும் அது பிறகு மீண்டும் நிகழும் வரை நினைவிற்கு வருவதேயில்லை.
-
கணவனது சட்டை அணிந்திருக்கிறான்
அவனிடமிருந்த வியர்வை வாசனை என்னுடைய கணவனது போலவே இல்லை. என்றாலும் அந்த உடலின் மெல்லசைவு கூட என்னை ஈர்க்கிறது.
-
சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது கடவுளின் செல்போன்
கடவுள் இன்றும் லேட் தான். வந்தவர் மதியத்திற்கு மேல் எங்கு போனார் என்று தெரியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருக்கிறது. மிக அவசரமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
-
ஆர்மி கேம்பில் இருந்து மூன்றாவது தெருவில் எனது வீடு
அவர்களில் பெரும்பாலனோருக்கு என்னுடைய மகன் வயது தான் இருக்கும். அரும்பு மீசை, பள்ளிக்கூடத்து சிரிப்பு, கண்களுக்குள் ஒளிந்திருக்கும் குறும்புத்தனம், தூக்கமில்லாத கண்கள் மற்றும் இனம் புரியா கோபம். அவர்களுக்குள் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான்.
-
காதலின் துயரம் அழுகையல்ல அது கோபம்
மென்மஞ்சள் வெயிலில் உன் நினைவுகளை வண்ணம் தீட்டும் மேங்களிடம் பதுக்கி வைத்தாலும் கோபத்தை அந்நியன் யாராவது ஓருவனிடம் கொடுத்தும் வாங்கியும் படுக்கையில் அதை அழுத்தி தூங்க பழகி இருக்கிறேன்.
-
எங்கெங்கும் கண்கள்
கதவை அடைத்து உள்ளறைக்குள் ஜன்னலை சாத்தி கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் என்னை பல கண்களாய் அவன் கவனித்தபடி இருக்கிறான்.
-
குருதி மழை
இருளின் ஊடாக குருதி மழையில் நனைந்து கிடக்கிறோம் நாங்கள் இருவரும். அவள் இதழோரம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது அவளால் கொல்லபட்டவனின் இரத்தம்.