Category: கவிதைகள்
-
என் வாழ்க்கை
ஓர் அசைப்படம் அந்தப் பெரிய கட்டிடத்தின் சுவரில் சாலையில் செல்லும் வாகனங்களின் ஒளியால். நானே இருவராய் அதை கவனித்தபடி.
-
முத்தங்களில் மூழ்கி இறந்து போதல்
ஒரு மழைத்துளி காற்றின் அலைகளை மீறி கம்பியாய் தடமிழுத்து குழியில் திரண்டு நின்ற நீரில் விழுந்து
-
பை முழுக்க சாவிகள்
மதுக்கடைகள் நிரம்பிய அந்தச் சாலைக்கு நீங்கள் என்றாவது போயிருந்தால் அவனைப் பார்த்திருப்பீர்கள். புழுதி பறக்கும் சாலையோரம் தன் பை முழுக்க சாவிகளோடு ஒன்றுக்கொன்று பேசும் உலோக சப்தத்தோடு தன் வாழ்வைச் சுமையென சுமந்து நடந்து கொண்டிருப்பான்.
-
அனல் ஆறு
மலை உச்சியில் பெருங்கூட்டம். எல்லாரும் முண்டியடிக்கிறார்கள் பள்ளத்தாக்கில் அனல்கங்குகளைச் சுமந்து ஓடும் ஆற்றினைக் காண. பெருத்த முலைகளையும் முட்டும் தொப்பைகளையும் தள்ளியபடி முரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில் அரைபட்டு முன்னேறி கொண்டு இருக்கிறேன் நான்.
-
ரத்தத் துளிகள்
ரயிலோ இல்லையோ பாலத்தின் எதோ ஓரிடத்தில் இருந்து ரத்தத் துளிகள் விழுந்தபடியே இருந்தன சாலையில் வருவோர் போவோர் வெகு சிலர் மீது.
-
வலியே வலியை மறக்க வைக்குமளவு
வலியே வலியை மறக்க வைக்குமளவு அடிக்கப்பட்டு உள்ளெல்லாம் சிதைந்து நாளெல்லாம் மரணத்தை வேண்டி நிற்கும்
-
பிரபஞ்சம் நானே
காற்றில் சலசலக்கும் மரம் சலசலப்பை உண்டாக்குகிறது என்னுள். இலைகளின் மீட்டலை உணர்கிறேன் நரம்புகளில்.
-
கண்ணாடி ரசமெல்லாம் வழிந்தோடி விட்டது
நீங்கள் மேற்கொண்ட எதோ ஒரு தொலைதூர பிரயாணத்தில் சந்தேக வியாதி உங்களைத் தொற்றி கொண்டது. உடலை உருக்கி விட்டதென சொல்கிறார்கள் எல்லாரும். உங்கள் நடை தள்ளாடுகிறது. மயங்கி விழுகிறீர்கள் ஒருநாள்.