sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • அறிமுகம்
Browse: Home » கட்டுரைகள் » Page 2
சாதியை ஒழிப்பது எப்படி? - அம்பேத்கர்

சாதியை ஒழிப்பது எப்படி? – அம்பேத்கர்

April 14, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

ஆனால் உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியினரோடு திருமணம் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்களே, ஏன்? சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்து விட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்க கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. இந்துக்கள் சாதியினை ஏன் பின்பற்றுகிறார்கள்? அது தவறானது, மனித உரிமை மீறல் என்பதால் அதை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் தங்கள் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். அதனாலே அவர்கள் சாதிமுறையை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசிக்க ...

சுனாமி பீதி

சுனாமி பீதி – புகைப்படங்கள்

April 11, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

2004-ம் ஆண்டு சுனாமி நினைவுகள் இங்கிருக்கும் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. கூட்டம் கூட்டமாய் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையோரம் நடைப்பாதைகளில் வந்து உட்கார்ந்திருந்தார்கள். மெரீனாவில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்திற்கும் பட்டினம்பாக்கத்தில் இறுக்கமான முகங்களோடு இருந்த மக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ...தொடர்ந்து வாசிக்க ...

உலகத்தின் உயரமான போர்க்களத்தில் வீணாகும் உயிர்கள்

உலகத்தின் உயரமான போர்க்களத்தில் வீணாகும் உயிர்கள்

April 8, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

எங்க அவுட் போஸ்ட் இருக்கிற இடத்துல இருந்து பார்த்தா பாலைவனம் மாதிரி கண்ணுக்கெட்டுன தூரம் ஐஸா இருக்கும். ஒரு ஆள், ஆடு, மாடு, ஒரு மரம், செடி கொடி எதுவுமே கிடையாது. நீங்க நடுங்கிடுவீங்க. என்னோட இருந்த ஆள் இப்போ தான் புதுசா இந்த ஏரியாவிற்கு வந்தவரு. பனி கொஞ்சம் கொஞ்சமாய் பொழிய ஆரம்பிச்ச நேரமது. அங்க அவரு துப்பாக்கியால சுட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டு பிணமாக இருக்கிறதைத் தான் பார்த்தேன். ஆள் பனியைப் பார்த்து பிளாங்க் ஆகிட்டாரு போல. ...தொடர்ந்து வாசிக்க ...

பள்ளிக்கூடங்களில் சாதி மோதல்

பள்ளிக்கூடங்களில் சாதி மோதல்

March 28, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

இந்த மாதம் மட்டும் தலித் மாணவர்கள் சக பள்ளிக்கூடத்து மாணவர்களாலே தாக்கப்படும் சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன. மதுரை அருகே உசிலம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வெளியாட்களும் இந்த மோதலில் வந்து பங்கேற்றார்களாம். கடைசியில் போலீஸ் வந்த போது, போலீஸாரைப் பார்த்து கல் எறிந்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பிறகு ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ...தொடர்ந்து வாசிக்க ...

உலகப்புகழ்-புகைப்படங்கள்-வயலின்

உலகப்புகழ் பெற்ற புகைப்படம் – நிர்வாணப் பெண்

March 26, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை, கட்டுரைகள்

குறிப்பு: பதிவில் நிர்வாண பெண்ணுடல் புகைப்படங்கள்/ஓவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன. புகைப்படத்தில் கிக்கி நிர்வாணமாய் தன் முதுகை காட்டியபடி அமர்ந்திருக்கிறாள். அவளது தலைமுடி முற்றிலுமாய் ஒரு தலைப்பாகைக்குள் இருக்கிறது. முகம் லேசாய் திரும்பியிருக்கிறது. கைகளை முன்னால் வைத்திருப்பதினால் அது பார்வையிலே இல்லை. செதுக்கப்பட்ட சிலை போல அவளது உடல்வளைவுகள். கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கிக்கி கிழக்கத்திய நாட்டு பெண் போல தோற்றம் கொள்கிறாள். ...தொடர்ந்து வாசிக்க ...

இலங்கை புத்த துறவிகள் - வன்முறை எங்கே இருக்கிறது?

இலங்கை புத்த துறவிகள் – வன்முறை எங்கே இருக்கிறது?

March 24, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

அந்தப் புத்த துறவிகளின் ஆர்ப்பாட்டத்தினைப் புகைப்படங்களாய் பார்க்கும் போது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அகிம்சையைப் போதிக்கிற புத்த மதத்தில் போர் குற்றம் செய்த அரசினை ஆதரிக்கிற புத்த துறவிகள் எப்படி உருவானார்கள்? ...தொடர்ந்து வாசிக்க ...

கூடங்குளம் – கண்டனம்

March 22, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

கூடங்குளத்தில் எதிர்பார்த்தது போலவே அரசு தன் முழு வலிமையையும் காட்டி அணுமின் உலைக்குத் திறப்பு விழா நடத்தி விட்டது. அணுமின் உலைகளைக் கட்டும் போது முதலில் சொல்லப்படும் விஷயமே அங்குள்ள மக்கள் அதற்கு அனுமதி தந்து விட்டார்கள் என்பது தான். ஆனால் 144 தடையுத்தரவைப் போட்டு நடந்திருக்கும் இந்த திறப்பு விழா விதிமுறைகளை மீறிய செயல். குவிந்திருக்கும் போலீசார், வாகனங்களுக்கு/மக்களுக்கு அனுமதி மறுத்தல் போன்றவை மனித உரிமை மீறல் மட்டுமல்ல சட்ட புறம்பானதும் கூட ...தொடர்ந்து வாசிக்க ...

இலங்கையைக் குற்றம் சாட்டும் ஆம்னிஸ்டி முழு ரிப்போர்ட்

இலங்கையைக் குற்றம் சாட்டும் ஆம்னிஸ்டி முழு ரிப்போர்ட்

March 18, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள்

இலங்கையில் இன்னும் அரசு உதவியோடு தமிழர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் எதிராக தொடரும் கைது, கடத்தல், துன்புறுத்தல், கொலைகள் பற்றி 63 பக்க ‘locked away’ என்கிற ரிப்போர்ட்டினை ஆம்னிஸ்டி வெளியிட்டு இருக்கிறது. ...தொடர்ந்து வாசிக்க ...

உலகப் புகழ் பெற்ற புகைப்படம் - பீரங்கி டாங்கிகளுக்கு எதிரில்

உலகப் புகழ் பெற்ற புகைப்படம் – பீரங்கி டாங்கிகளுக்கு எதிரில்

March 13, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை, கட்டுரைகள்

வலிமையான மிருகம் போல் நின்று கொண்டு இருக்கிறது அந்தப் பீரங்கி டாங்கி. அதன் துப்பாக்கி குழல் தவிர அதன் பிரம்மாண்ட அளவே பயமூட்டுவதாக இருக்கிறது. அது தவிர ரோட்டைத் தடதடக்க செய்கிற சத்தம் வேறு. ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக டாங்கிகள் சாலையை அதிர வைத்தபடி வருகின்றன. வெள்ளை சட்டை கறுப்பு பேண்ட் அணிந்த இளைஞன் அவன். கையில் ஒரு பை. கல்லூரி முடிந்தவுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறவன் போல ஒரு தோற்றம். முதலாவதாக வரும் பீரங்கி டாங்கிக்கு முன்னால் அதன் வழியை மறித்தபடி நிற்கிறான். ...தொடர்ந்து வாசிக்க ...

கூடங்குளம் - அரசின் அணுகுமுறை எப்படி?

கூடங்குளம் – அரசின் அணுகுமுறை எப்படி?

March 13, 2012 · by சாய்ராம் சிவகுமார் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

நேரு காலத்து இந்தியா தன்னளவில் கொள்கைகளைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. இன்றோ நாம் வல்லரசு பகற்கனவில் அமெரிக்க சாயத்தைப் பூசிக் கொண்டு திரிகிற சமூகமாக இருக்கிறோம். இந்திய அரசுக்கு இன்று உலக அரங்கில் என்ன மதிப்பு இருக்கிறது? இலங்கை போற்குற்றங்களுக்கு உடந்தை, இஸ்ரேலுக்கு ஆதரவு என அதன் பாதை வேறு பக்கமாய் திரும்பி விட்டது. இந்தியாவின் இன்றைய மத்திய வர்க்கத்தினர் அமெரிக்காவில் உள்ள மத்திய வர்க்கத்தினரை விட பேராசைமிக்கவர்களாய் இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசிக்க ...

← Previous 1 2 3 … 9 Next →

வலைப்பதிவில் தேடு

என் நூல்

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

நூலகம்

A Tale of Two Cities
Love in the Time of Cholera
ചെമ്മീൻ | Chemmeen
The Metamorphosis
பொன்னியின் செல்வன்
The Da Vinci Code
The Trial
The Stranger
Cry, the Beloved Country
Sula
ரோலக்ஸ் வாட்ச்
ஐந்து முதலைகளின் கதை
காடு
J J Sila Kuripugal
Midnight's Children
The Difficulty of Being Good: On the Subtle Art of Dharma
Yajnaseni: The Story of Draupadi
Resurrection
White Nights
Vishnupuram


Sairam's favorite books »
பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Copyright © 2022 sairams Owned by Sairam Sivakumar.

Powered by WordPress. Theme: Origin. Hosted by Milkhost.